
கோடை வெப்பம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் கொளுத்தும் வெயிலை சமாளிக்க அதிக நீர்ச்சத்துள்ள உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீர்ச்சத்து மிக்க பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அந்த வகையில் கோடையில் உங்கள் டயட்டில் நீங்கள் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒன்று வெள்ளரிக்காய் ஆகும். சாலட்டுகள் மற்றும் ரைத்தாவில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் இதில் நீர்ச்சத்து அதிகம் காணப்படுவதால் இது நம் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
Also See: கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய காய்கறிகள்..! இவற்றை சாப்பிட்டால் என்ன ஆகும்?
எனினும் வெள்ளரிக்காய்களை சில உணவு பொருட்களுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். அப்படி சாப்பிட்டால் அது செரிமான பிரச்சனைகள் உள்ளிட்ட சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும் என்றும் எச்சரிக்கின்றனர். வெள்ளரிக்காயுடன் என்னென்ன உணவுகளை சேர்த்து சாப்பிட கூடாது என்பதை தெரிந்துகொள்வோம்.
தயிர் அல்லது யோகர்ட்: வெள்ளரிக்காய் தயிருடன் சேர்த்து சாப்பிடும் பழக்கம் பலருக்கு உண்டு. ரைத்தா போன்றவற்றில் இந்த கலவை பொதுவானது. ஆனால் தயிர் மற்றும் வெள்ளரி இரண்டின் செரிமான செயல்முறையும் வேறுபட்டது. வெள்ளரிக்காயில் நிறைய தண்ணீர் இருப்பதால், அது விரைவாக ஜீரணமாகும். ஆனால் தயிரில் புரதங்கள் மற்றும் கொழுப்புகள் இருப்பதால் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும்.

ஜீரண செயல்முறையில் காணப்படும் இந்த வேறுபாடு வயிற்று உபாதையை ஏற்படுத்தும். இதனால் உப்புசம், நெஞ்சு எரிச்சல், எதுக்களித்தல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும், தயிர் இயற்கையில் குளிர்ச்சியானது, எனவே வெள்ளரியுடன் சேர்த்து சாப்பிடுவது உடல் வெப்பநிலையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும். ஆயுர்வேதத்தின்படி, இந்த கலவை உடலில் சளியை அதிகரிக்க செய்யும்.
இறைச்சி: வெள்ளரியை இறைச்சியுடன் சேர்த்து சாப்பிடுவது நல்லதல்ல. இறைச்சியில் புரதங்கள் மற்றும் கொழுப்புகள் அதிகம் உள்ளன. இவற்றை ஜீரணிக்க, உடல் அமிலத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். வெள்ளரி எளிதான மற்றும் விரைவாக ஜீரணிக்க கூடிய ஒரு உணவு பொருளாகும். இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிட்டால் நம் செரிமான அமைப்பு ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு செயல்முறைகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இதனால் வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகள் ஏற்பட கூடும். இறைச்சியை ஜீரணிக்க அதிக சக்தி தேவைப்படுகிறது. வெள்ளரியுடன் சேர்த்து இதனை சாப்பிடும் போது இறைச்சி ஜீரணமாவது மேலும் தாமதமாகிறது. சிலர் இறைச்சி துண்டு சாலட்ஸ்களில் வெள்ளரியை சேர்ப்பார்கள். ஆனால் இப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு அவ்வளவு நல்லதல்ல. இதற்கு பதிலாக, பச்சை காய்கறிகளை சேர்த்து சாப்பிடுவது நல்லது.
எலுமிச்சை: வெள்ளரியை சிட்ரஸ் பழங்களுடன் சேர்த்து சாப்பிடுவதும் நல்லதல்ல. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்கள் அமிலத்தன்மை கொண்டவை. அதே நேரம் வெள்ளரி குளிர்ச்சி தன்மையை கொண்டுள்ளது. இந்த இரண்டும் இணைந்தால், சிட்ரஸ் பழங்களின் அமிலத்தன்மை வெள்ளரியின் சுவையைக் கெடுத்துவிடும். மேலும் இந்த கலவை செரிமான செயல்பாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

அதே போல சில ஆய்வுகள், சிட்ரஸ் பழங்களில் உள்ள அமிலம், வெள்ளரியில் இருக்கும் வைட்டமின் சி-யை நம் உடல் உறிஞ்சுவதை குறைப்பதாக கூறுகின்றன. இது நெஞ்செரிச்சல் மற்றும் உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். சாலட்டில் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்த விரும்பினால், அதில் வெள்ளரி சேர்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
தக்காளி: தக்காளி மற்றும் வவெள்ளரி பெரும்பாலும் சாலட்களில் ஒன்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.எனினும் இந்த இரண்டின் செரிமான செயல்முறையும் வேறுபட்டது. வெள்ளரி விரைவாக ஜீரணமாகும் அதே நேரம் தக்காளியில் உள்ள அமிலம் மற்றும் விதைகள் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். இந்த வேறுபாடு வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். தக்காளிக்குப் பதிலாக குடை மிளகாய் அல்லது முட்டைக்கோஸை சாலட்டில் பயன்படுத்துவது சுவையை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
முள்ளங்கி: வெள்ளரிக்காயுடன் முள்ளங்கியை சேர்த்து சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. இந்த இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது உடலில் வைட்டமின் சி அளவைக் குறைக்கிறது. வெள்ளரிக்காயில் உள்ள அஸ்கார்பினேஸ் என்ற நொதி, முள்ளங்கியில் உள்ள வைட்டமின் சி-யை அழிக்கிறது. மேலும் இந்தக் கலவை வயிற்றில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். முள்ளங்கி ஒரு காரமான சுவை கொண்டது. வெள்ளரியின் குளிர்ச்சி அதை எதிர்க்கிறது. சிலர் இந்த இரண்டையும் சாலட்டில் சேர்த்து சாப்பிடுவார்கள். எனினும் முள்ளங்கியை எப்போதும் தனியாகவோ அல்லது கேரட்டுடன் சேர்த்து சாப்பிடுவதோ நல்லது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry