
உலகளவில், மரணத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்றுநோய் மாறியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒவ்வொரு ஆண்டும் புற்றுநோயால் சுமார் 10 மில்லியன் இறப்புகள் பதிவாகின்றன. இந்தியாவிலும், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
உணவுமுறை என்பது புற்றுநோய் அபாயத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முக்கிய அம்சமாகும். தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதும், பதப்படுத்தப்பட்ட மற்றும் அதிக கொழுப்புள்ள உணவுகள் உட்கொள்வதை கட்டுப்படுத்துவதும் புற்றுநோய் ஏற்படுவதைக் குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் புற்றுநோய் காரணிகளால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக சில உணவுகள் நன்மை பயக்கும்.
புற்றுநோயைக் குறைக்கும் உணவுகள்: உண்மைதான் என்ன?
வெறுமனே சில உணவுகளைச் சாப்பிட்டால் புற்றுநோய் வராது என்று உறுதியாகக் கூற முடியாது, ஆனால், நீண்ட காலத்திற்கு சீரான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் புற்றுநோய் வருவதற்கான அபாயத்தை குறைக்கக்கூடியவை என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதிலும், புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்ட “Phytochemicals” (செயல்மிக்க தாவர வேதிகள்) நிறைந்த உணவுகள் முக்கியமானவை.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கும் 8 சிறந்த உணவுகள்:
- குரூசிஃபெரஸ் காய்கறிகள் (Cruciferous Vegetables): ப்ரொக்கோலி, காலிஃபிளவர், கேல், முட்டைக்கோஸ், கத்திரிக்காய் போன்றவை இதில் அடங்கும். இதில் உள்ள Glucosinolates, Vitamin C, E, K மற்றும் ஃபோலேட் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பு தன்மை கொண்டவை.
- மஞ்சள் (Turmeric): மஞ்சளில் உள்ள “குர்குமின்” (Curcumin) என்ற வேதிப்பொருள், உடலில் உள்ள அழற்சியைக் குறைத்து, புற்றுநோய் உருவாவதிலிருந்து பாதுகாக்கும் திறனைக் கொண்டது.
- காளான் (Mushrooms): ஜப்பானில் நடந்த ஒரு ஆராய்ச்சி படி, காளான்கள் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும். Reishi, Maitake, Turkey Tail போன்ற மருத்துவ காளான்கள் மிகச் சிறந்தவை.
- அல்லியம் வகை காய்கறிகள் (Allium Vegetables): வெங்காயம், பூண்டு, லீக், ஷல்லட்ஸ் போன்றவை. இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கின்றன.
- முழு தானியங்கள் (Whole grains): பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி மற்றும் முழு கோதுமை போன்ற முழு தானியங்களில் பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கக்கூடிய நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் உள்ளன. அவற்றின் அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறை முழு தானியங்களை உட்கொள்ள வேண்டும்.
- லைகோபீன் நிறைந்த உணவுகள் (Lycopene-rich foods): தக்காளி, தர்பூசணி, கொய்யா, பாப்பாளி போன்ற சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகள் புரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும்.
- பீட்டா-கரோட்டீன் நிறைந்த உணவுகள் (Beta-carotene-rich foods): காரட், சில்லி உருளைக்கிழங்கு, கேல், ஸ்பினாச் போன்றவை நுரையீரல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.
- கொழுப்பு அமிலம் நிறைந்த மீன்கள் (Fatty Fish): சால்மன், சார்டின், ஆல்பகோர் தூணா போன்ற மீன்களில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் D நோய்தடுப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பிற குறிப்பிடத்தக்க உணவுகள்:
ஆப்பிள், பேரிக்காய், திராட்சை, காய்ந்த பருப்புகள், முழு தானியங்கள் (ப்ரவுன் ரைஸ், ஓட்ஸ்), நட்ஸ்கள், ஒலிவ் எண்ணெய், பச்சை மற்றும் வெள்ளை தேநீர், பரங்கிக்காய் அல்லது சிகப்பு பூசணி, பீட்ரூட், முள்ளங்கி, அவகோடா பழம், இஞ்சி, அளி விதை, எள், பூசணி விதை ஆகியவையும் புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டவை.

தவிர்க்க வேண்டியவை:
காரமாக பொரித்து செய்யப்படும் உணவுகள், சர்க்கரை, ஆல்கஹால், அதிக சிவப்பு இறைச்சி, இயற்கையல்லாத பொருட்கள் போன்றவை புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கின்றன. இதனுடன், புகைப்பழக்கம், உடற்பயிற்சி குறைபாடு, நீடித்த மன அழுத்தம் ஆகியவையும் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன.
Summary:
புற்றுநோயை முழுமையாகத் தவிர்க்க இயலாது என்றாலும், ஆரோக்கியமான உணவு, இயற்கையான உடற்பயிற்சி மற்றும் சீரான வாழ்க்கை முறைகள் மூலம் உங்கள் உடலை பாதுகாப்பதுடன், ஒட்டுமொத்த வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும்.
Disclaimer : It is crucial to consult with a qualified healthcare professional or registered dietitian for personalised dietary advice and before making any significant changes to your diet, especially if you have any existing health conditions or are undergoing cancer treatment.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry