30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது என்று அதிமுக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், “30 ஆண்டு காலமாக சிறையில் இருந்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்திருப்பது அதிமுகவிற்கு மிகுந்த மகிழ்ச்சியையும், மனநிறைவையும், நிம்மதியையும் தருகிறது.
பேரறிவாளன் மற்றும் ஆறு பேருக்கும் நீதி வழங்க வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள், எடுத்து வைத்த சட்ட நுணுக்கங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதை புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அவரைத் தொடர்ந்து 2018-ம் ஆண்டில் அவர்களின் வழிநடந்த கழக அரசும் துணிச்சலாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தான் இன்றைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு அடித்தளமாகும். பேரறிவாளன் விடுதலை ஜெயலலிதாவின் துணிச்சலுக்கம், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி. எஞ்சிய 6 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேரறிவாளன் விடுதலை
“புரட்சித் தலைவி அம்மா அவர்களின் துணிச்சலுக்கும், தொலைநோக்கு சிந்தனைக்கும், சட்ட ஞானத்திற்கும் கிடைத்த மகத்தான வெற்றி;
நிகரற்ற தலைவர் புரட்சி தலைவி அம்மா அவர்களின் துணிச்சல் மிகுந்த நிர்வாகம், அம்மா அரசின் நிர்வாகம் என்பது மீண்டும் நிரூபணம் ! #Perarivalan pic.twitter.com/5MYPwDsok3— AIADMK (@AIADMKOfficial) May 18, 2022
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry