தென்னிந்திய திரையுலகின் திறமை மிக்க பிரபல நடிகை இருப்பவர் சுனைனா. நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி படங்களில் தன் நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்தவர், தற்போது பன்மொழிகளில் உருவாகும் ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார்.
எல்லோ பியர் புரொடக்ஷன்(Yellow Bear Production LLP) சதீஷ் நாயர் இப்படத்தினை தயாரிக்கிறார். இப்படம் நான்கு மொழிகளில் தயாராகிரது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் “ரெஜினா” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட்டார். மலையாள போஸ்டரை பிரபல மலையாள டைரக்டர் ஆஷிக் அபு (AASHIQ ABU ) வெளியிட்டார்.
Presenting the official first look of #Regina starring @TheSunainaa, produced and music composed by my dear friend @SathishNair20 directed by @domin_dsilva! Releasing in Tamil, Telugu, Malayalam and Hindi. @johnsoncinepro @yellowbearprod pic.twitter.com/U66p5l2J97
— venkat prabhu (@vp_offl) June 6, 2022
மலையாள பிரபலம் டோமின் டி சில்வா இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட “பைப்பின் சுவத்திலே பிராணயம்” மற்றும் “ஸ்டார்” படங்களை இயக்குகியவர் இவர். “ரெஜினா” பெண்களை மையமாகக் கொண்ட ‘ஸ்டைலிஷ் திரில்லராக’ இருக்கும் என்று இயக்குநர் டோமின் டி சில்வா கூறியுள்ளார். இல்லத்தரசி ஆக இருக்கும் ஒரு பெண், அசாதாரணமான விஷயங்களைச் சாதிப்பதைப் பற்றியதாகவும், அனைவரயும் ஈர்க்கக்கூடிய ஒரு திரில்லர் படமாக இருக்கும் எனவும் அவர் கூறினார்.
ரெஜினா படத்தின் பாடல்களுக்கு இசையமைப்பதுடன், படத்தையும் தயாரிக்கிறார் சதிஷ் நாயர்.
பாடல்களுக்கான வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.R எழுதியுள்ளனர். பவி K.பவன் ஒளிப்பதிவு செய்ய, கமருதீன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். டோபி ஜான் எடிட்டிங் செய்ய, ஆடை வடிவமைப்பை ஏகன் செய்கிறார். PRO ஜான்சன். படத்தின் படல்கள் வெளீயீடு மற்றும் வெளியீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என படக்குழு கூறியுள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry