மழைக்காலம் என்பது நாம் உப்பு மற்றும் சுவையான உணவுகளுக்கு ஏங்கும் காலமாகும், மேலும் தெருக்களில் வரிசையாக நிற்கும் எண்ணற்ற உணவு விற்பனையாளர்கள் நமது சுவை மொட்டுகளை தூண்டுவார்கள். லேசான தூறலில் சூடான பஜ்ஜிகள் மற்றும் சமோசாக்கள் மிகவும் சுவையாக இருப்பதில் ஆச்சரியமில்லை, ஏனெனில் அவற்றில் தாராளமாக உப்பு சேர்க்கப்படுகின்றன. ஆனால் நிறைய உப்புடன் உணவை உட்கொள்வது உங்கள் இரத்த அழுத்தத்தை உயர்த்தும். அடிக்கடி இதுபோன்று சாப்பிட்டால் மாரடைப்பு அபாயம் அதிகரிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தெருவில் நடந்து செல்லும்போது கண்களில்படும் பானிபுரி, ஸ்ட்ரீட் சாட் மற்றும் காய்கறி சாண்ட்விச்கள் போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். மழை மற்றும் பனிக்காலங்களில் சளி மற்றும் இருமலுக்கு நாம் ஆளாக நேரிடும், நீரினால் பரவும் நோய்களும் அதிகரிக்கக்கூடும். இருப்பினும், சரியான உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம் மாரடைப்பைத் தடுக்க முடியும். வயதானவர்கள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ் நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.
Also Read : வெயிட் குறைக்கனுமா..? இதை டிரை பண்ணுங்க, கைமேல ரிசல்ட்..! மரணத்தையே தள்ளிப்போடும் கருஞ்சீரகம்…!
மழைக்காலத்தில் பல நோய்கள் பரவக்கூடும். நீர் வழியாக, தொற்றுக்கள், பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை பரவக்கூடும். அப்போது உடல்நலம் பாதிக்கப்படும். அந்த சமயத்தில் இதய நோயாளிகள் உடல் நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சில உணவுப்பொருட்களைத் தவிர்க்க வேண்டும். மழைக்காலம் முழுவதும் ஆரோக்கியமாக இருக்க சில விஷயங்கள் உள்ளன.
அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகளை சாப்பிட சிறந்த நேரம் கோடைக் காலமாகும். மழைக்காலத்தில், தக்காளி, வெள்ளரி, தர்பூசணி மற்றும் முலாம்பழம் போன்ற அதிக நீர் உள்ளடக்கம் கொண்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உங்கள் உடலில் வீக்கத்தை ஊக்குவிக்கும். ஓட்ஸ், பழுப்பு அரிசி, சோளம் மற்றும் சுண்டல் போன்ற வறண்ட உணவுகளை உட்கொள்ளலாம். மழைக்காலத்தில் நீர் தக்கவைப்பைத் தடுக்க, புளி மற்றும் எலுமிச்சை சேர்த்த உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
Also Read : சுகர் பேஷன்ட்டும் பயமில்லாம உருளைக்கிழங்கு சாப்பிடலாம்! இப்படி குக் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க…!
பருவகால பழங்களில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகிறது. கிரான்பெர்ரி, கஸ்டர்ட் ஆப்பிள், பேரிக்காய் மற்றும் டிராகன் பழம் உள்ளிட்ட பல பருவகால பழங்கள் சாப்பிடலாம். உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வாழைப்பழம் மற்றும் பப்பாளி ஆகியவை திருப்திகரமானவை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளவை. மழைக்காலத்தில் சிலருக்கு ஹார்ட் அட்டாக் வரக்கூடும். இதய நோயாளிகளுக்கு ஒத்துப்போகாத காலம் இது. அந்த சமயத்தில் சில உணவுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது :
உப்பு:
உணவின் சுவையை கூட்டிக் கொடுப்பது உப்பு. ஆனால், மழைக்காலத்தில் அதிக உப்பு சேர்த்துக்கொள்வது இதய நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகையால் உப்பை தவிர்த்துவிடுங்கள். வேண்டுமென்றால், சிறிதளவு உப்பு எடுத்துக்கொள்ளலாம்.
பால் பொருட்கள்:
சாதாரண நபர்கள் பால் கலந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும்போதே வயிறு மந்தமாக இருக்கும். அதுவும் இதய நோயாளிகள் மழைக்காலத்தில் பால் பொருட்களை எடுத்துக்கொள்வது சிரமத்தை எற்படுத்தும். அதிகம் சாப்பிடும்போது இது அட்டாக் வர காரணமாகிவிடும். பால் எடுத்துக்கொள்ளலாம், ஆனால், பாலினால் செய்யப்பட்ட உணவு பொருட்களை தவிர்த்துவிடுங்கள்.
சர்க்கரை:
இதய நோயாளிகள் சர்க்கரை அதிகமாக இருக்கும் உணவுகளை எடுத்துக்கொள்வது, மேலும் சிரமத்தை ஏற்படுத்தும். ஆகையால் டீ, காபி குடிப்பவர்கள், ஸ்வீட் சாப்பிடுபவர்கள் குறைவான சர்க்கரையை எடுத்துக்கொள்ளுங்கள். குறிப்பாக கடையில் வாங்கும் இனிப்பு பொருட்களை மழைக்காலத்தில் முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி:
பதப்படுத்தப்பட்ட ஆடு, கோழி போன்ற இறைச்சிகளை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றில் பாக்டீரியாக்கள் வளர அதிக வாய்ப்புகள் இருப்பதால் மழைக்காலத்தில் அதைத் தவிர்க்க வேண்டும். ஈரப்பதம் காரணமாகத்தான் பாக்டீரியா வளரும். மேலும் ஃபுட் பாய்ஸன் ஏற்படவும் கூடும்.
பக்கோடா:
எண்ணெயில் ஆழமாக வறுத்த நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவை கொழுப்பு மற்றும் அதிக கலோரிகள் நிறைந்தவை. இது எல்டிஎல் அளவை குறைத்து உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். பருவமழை நோயெதிர்ப்பு சக்தியை பாதிக்கலாம். இந்நிலையில் இந்த எண்ணெய் மிகுந்த பக்கோடா, பஜ்ஜி, போண்டா போன்றவை உடல் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.
உப்பு சேர்க்கப்பட்ட நட்ஸ்:
உப்பு சேர்த்து வறுத்த நட்ஸ் மற்றும் ஸ்டிராங்கான டீ அல்லது காபி ஆகியவை பருவமழையின் செல்ல சிற்றுண்டிகள். ஆனால் அதிக உப்பு சாப்பிடுவது உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும் மற்றும் இதய நோய் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்திருக்க வேண்டும். உப்பு சேர்த்து வறுத்த நட்ஸ்களில் ஊட்டச்சத்து இல்லை எனவே உப்பு மற்றும் காரமான பருப்புகளை சாப்பிடுவதை தவிர்க்கவும்.
கடல் உணவுகள்:
ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் காரணமாக மீன்கள் இதயத்திற்கு நல்லது என்று கருதப்பட்டாலும், பாக்டீரியா வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றை மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். பருவமழை நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது மற்றும் மீன்கள் போன்ற கடல் விலங்குகளின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அசுத்தமான கடல் உணவை சாப்பிடுவதால் இதயம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
பீட்சா மற்றும் பர்கர்கள்
பீட்சா மற்றும் பர்கர் ஆரோக்கியமற்ற, அதிக சோடியம் மற்றும் கலோரி கொண்ட உணவாகும். பீட்ஸாக்கள் மற்றும் பர்கர்கள் தயாரிப்பதில் எந்த வகையான மாவு மற்றும் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. சிறந்த இதய ஆரோக்கியத்திற்கு அவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பாக்கெட் செய்யப்பட்ட சிப்சுகள்
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உருளைக்கிழங்கு சிப்சுகள் மற்றும் பிற தின்பண்டங்களில் அதிக சோடியம் மற்றும் அவை கெட்டுப்போகாமல் இருக்க பிரசர்வேடிவ் சேர்த்து பதப்படுத்தப்படுகின்றன. அவை இதய பிரச்சினைகளுக்குப் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. உங்கள் செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது.
எண்ணெய் உணவுகள்
ஆலு டிக்கி, சாட் போன்ற எண்ணெய் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அவை நிறைவுற்ற கொழுப்பைக் கொண்டிருக்கின்றன மற்றும் கலோரிகளும் அதிகம். அவை தமனிகளில் பிளாக்கை உருவாக்கி மென்மையான இரத்த ஓட்டத்தைத் தடுக்கலாம். இது மாரடைப்பு ஏற்படும் அபாயத்திற்கு வழிவகுக்கும். கொழுப்பு மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிட்டால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மேற்கண்ட உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும்.
Disclaimer: Make sure to consult a doctor or a nutritionist before making any changes to your diet or daily routine.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry