முயல்கள் கற்றுக்கொடுக்கும் வாழ்க்கைப்பாடம்! Rabbit And Frog! நீதிக் கதை!

    0
    57
    Whenever, you feel you are surrounded by serious problems that scare you to death, lookout for people in this world who are sadder and poorer than you, who are sick and prone to difficulties. That will make you realize how better off you are and will remove the fright of life in you. Getty Image.

    ஒரு காட்டில்  முயல் கூட்டம் ஒன்று வாழ்ந்து வந்தது. அந்த  முயல்கள் பச்சை பசேல் என இருந்த அந்த காட்டில் கிடைத்த உணவுகளை எல்லாம் உண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன. அவைகளுக்கு அங்கு சுலபமாக சாப்பிட தினமும் உணவு கிடைத்தது. திடீரென்று கோடைக்காலம் வந்தது, வெப்பம் அதிகமானதால் அங்கே பச்சைப் பசேல் என இருந்த புற்கள் எல்லாம் கருகி, பாலைவனம் போல் தோற்றமளித்தன.

    சாப்பிட உணவு எதுவும் கிடைக்காமல் முயல்கள் மிகவும் அவதிப்பட்டன. வேட்டை நாய்கள் முயல்களை பதுங்கி வேட்டையாட காத்திருந்தன. வேட்டை நாய்களைக் கண்ட முயல்கள் பொந்துக்குள்ளே ஒளிந்து கொண்டு, வெளியே வர முடியாமல் தவித்தன. உணவு இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டன. “எவ்வளவு நாள் தான் இப்படியே பொந்துக்குள் ஒளிந்து இருப்பது, நாம் ஏதாவது செய்ய வேண்டும்”, என்று எல்லாம் முயல்களும் கூடி பேசிக்கொண்டு இருந்தன.

    Also Read : தினசரி எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்? உங்களுக்கான ஸ்லீப்பிங் கால்குலேட்டர்!

    அப்போது ஒரு  முயல் சொன்னது, “கடவுள் நம்மை பலவீனமாக படைத்து விட்டார். எல்லா விலங்குகளும் ஏதாவது பிரச்சனை வந்தால் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் அளவிற்கு பலம் உடையதாக இருக்கின்றன. ஆனால், நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியாமல்  பலவீனமாக இருக்கிறோம். கடவுள் ஏன் நம்மை இப்படி படைத்து விட்டார்?” என்று குறை கூறிக்கொண்டே இருந்தது.

    அப்போது மற்றொரு  முயல் சொன்னது, “என்னால் இதற்கு மேல் இதை பொறுத்துக் கொள்ள முடியாது. பசியினாலும் இந்த வேட்டை நாய்களை பார்த்தும் பயந்து ஒதுங்கி வாழ்வதைவிட சாவதே மேல். நான் ஏதாவது ஒரு நதியில் சென்று விழுந்து விடுகிறேன்” என்று சொன்னது. அப்போது மற்றொரு  முயல் சொன்னது, “நாம் அனைவரும் எது செய்தாலும் ஒன்றாக செய்ய வேண்டும். வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம், இல்லையா எல்லோரும் சேர்ந்து நதியில் விழுந்து விடுவோம்” என்று நதியை நோக்கி புறப்பட்டு சென்றன.

    Also Read : நீங்க Hard Worker or Smart Worker? வெற்றிக்கான சிம்பிள் டிப்ஸ்! இனி எல்லாமே சக்ஸஸ்தான்!

    முயல்கள் எல்லாம் ஒரு நதிக் கரையை சென்று அடைந்தன. அங்கே சில தவளைகள் இருந்தன. இந்த தவளைகள் எல்லாம் முயல்களை பார்த்து பயத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நதியில் குதித்தன.  இதைப் பார்த்த  முயல் கூட்டம் ஆச்சரியமாக நின்றது. இந்தத் தவளைகள் நம்மை பார்த்த பயந்து நீருக்குள் குதிக்கின்றன.  நாம்தான் இந்த உலகத்திலேயே பலவீனமானவர்கள் என்று எண்ணினோம். நாம்தான் அனைவரையும் பார்த்து அஞ்சுகிறோம் என்று பேசிக்கொண்டோம்.

    ஆனால் நம்மையும் பார்த்து சிலர் அஞ்சுகின்றனர். இந்த தவளைகளுக்கு நம்மை பார்த்தால் பயமாக இருக்கிறது போல என்று  தங்களுக்குள் பேசிக்கொண்டு இருந்தன. அப்போது ஒரு  முயல் சொன்னது, “நாம் இந்தப் பிரச்சனையில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், நம்மை பாதுகாத்துக் கொள்ளவும் நிச்சயமாக ஏதாவது ஒரு வழி இருக்கும். நாம் அந்த வழி என்ன என்று கண்டுபிடிப்போம். இந்த நதியில் விழுந்து நம் வாழ்வை முடித்துக் கொள்வதை விட என்ன பிரச்சனை வந்தாலும் எதிர்கொள்வதே மேல்” என்று கூறிக் கொண்டு உணவு தேடி வேறு இடத்திற்கு திரும்பின.

    நீதி : வாழ்க்கையில் என்ன பிரச்சனை வந்தாலும் அதை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், எந்தத் தவறான முடிவும் எடுக்க கூடாது.

    Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry