நடுராத்திரியில் பசிக்குதா? ஸ்வீட், சாக்லெட் சாப்பிடனும் போல இருக்கா? அப்போ இந்தப் பதிவை மிஸ் பண்ணிடாதீங்க! 

0
147
The body's physical and mental changes that correspond to the daily cycle of light and darkness can cause hunger.  Not getting enough sleep also cause hunger. Getty Image.

நடுராத்திரியில் திடீரென பசி எடுப்பதை பலரும் அனுபவித்து இருப்போம். சிலர் இரவில் அதிகமாக பசிக்கும் பிரச்சனையை அடிக்கடி எதிர்கொள்வார்கள். இரவு நேரத்தில் இனிப்பு நிறைந்த சாக்லேட் போன்ற இனிப்புகளை உங்கள் சுவை மொட்டுகள் விரும்பலாம்.

அகால நேரத்தில் பசியோடு தூக்கத்தை தொலைப்பது என்பது ஆரோக்கியத்தின் நல்ல அறிகுறி அல்ல. இவற்றை எடை அதிகரிப்பு, மோசமான ஆரோக்கியம் போன்றவற்றோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம். சர்க்காடியன் தளங்களால் ஓரளவு கட்டுப்படுத்தப்படும் பசியின் அளவு, நாள் முழுவதும் உயரும். மாலையில் அதிகரிக்கும், இரவு முழுவதும் குறைந்திருக்கும். அதனால் இரவு நேர பசி என்பது கவனித்தக்க ஒன்று என்கிறார்கள் நிபுணர்கள்.

Also Read : கருப்பு கவுனி அரிசியில் இவ்வளவு சத்துக்களா? மருத்துவ பண்புகள் மற்றும் சமைக்கும் முறை!

நள்ளிரவு நேரத்தில் பசி என்பது பல விஷயங்களுடன் தொடர்பு கொண்டது. சிகாகோ பல்கலைக்கழகத்தின் நடத்தை நரம்பியல் நிபுணர் எரின் ஹான்லன் நடத்திய ஆய்வின் படி, நள்ளிரவு நேர பசி என்பது தூக்கமின்மை அல்லது தூக்க கோளாறு காரணமாக உண்டாகிறது. நள்ளிரவில் நொறுக்குத்தீனிகள் அல்லது இனிப்புகளை விரும்பி சாப்பிடுவது மோசமான தூக்க முறையின் விளைவுகள் ஆகும். உங்கள் தூக்கத்தை கண்காணிப்பதன் மூலம் இந்தச் சிக்கலை சரிபார்ப்பது முக்கியம்.

இரவில் பசி எடுப்பது ஒரு நபரின் சர்க்காடியன் தளத்தில் ஏற்படும் மாற்றங்களால் உருவாகலாம் என்று செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழத்தின் ஊட்டச்சத்து மற்றும் உணவியல் அகாடமி பேராசிரியர் லின்சென் மெயூர் தெரிவிக்கிறார். பசிக்கு தொடர்புடைய இரண்டு ஹார்மோன்கள், லெப்டின் மற்றும் க்ரெலின் ஆகும். லெப்டின் ஹார்மோன் பசியை அடக்குகிறது. எடை இழப்புக்கு உதவுகிறது. அதே சமயம் கிரெலின்ஹார்மோன் பசியை தூண்டுகிறது. எடை அதிகரிப்புக்கு காரணமாகிறது. தூக்கமின்மை கோளாறு இருக்கும் போது இந்த இரண்டு ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கும். இது உணவு உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்க செய்கிறது. எனினும் தூக்கமின்மை மட்டுமே பசிக்கு காரணம் அல்ல.

Getty Image

நடு இரவு அல்லவது அதிகாலை பசி எடுப்பதற்கு பல விஷயங்கள் காரணமாக இருக்கலாம். உணவு மற்றும் தூக்க முறைகள் முதல் ஹார்மோன்கள் வரை. பசியின்மையை சமாளிக்க சிறந்த வழி, உங்கள் உணவு பழக்கத்தை மாற்றுவது மற்றும் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி தூக்கத்தை தூண்டும் உணவுகளை சேர்ப்பது. இது தவிர உணர்ச்சி மற்றும் உடல்நலமும் உங்கள் தூக்கத்தை பாதிக்கிறது. பசியால் பாதிக்கப்பட்டு தூக்கத்தையும் இழக்கிறீர்கள் என்றால் உங்கள் வாழ்க்கை முறையை மாற்றி உடலை இயற்கையாகவே ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும்.

  • மதிய உணவு மற்றும் இரவு உணவுக்கு இடையே நீண்ட இடைவெளி இருப்பது நடுராத்திரி பசி ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதனால், இரவு தூங்குவதற்கு முன் அதிகமாக பசி எடுக்கும். சிலருக்கு நடுராத்திரியில் திடீரென விழிப்பு ஏற்பட்டு பசி உணர்வை உண்டாக்கும்.
  • பகலில் போதுமான கலோரி உட்கொள்ளாமல் போனால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்காமல் இரவில் அதிகமாக பசி உணரப்படுகிறது.
  • சில நேரங்களில் பசி என்று நாம் நினைக்கும் உணர்வு உண்மையில் உடலில் போதிய அளவு நீர் இல்லாமல் போவதால் ஏற்படலாம். எனவே, தினசரி உடலை நீரேற்றத்துடன் வைத்திருங்கள்.
  • நீங்கள் முறையாகத் தூங்காமல் உரக்க சுழற்சி குழப்பம் அடைதல் காரணமாகவும் பசி எடுக்கும். இன்றைய காலத்தில் அதிக ஸ்மார்ட்போன் பயன்பாடு காரணமாக, பலரது தூக்க முறைகள் முற்றிலும் மாறிவிட்டது. இது இரவில் அதிகமாக உணவு உட்கொள்வதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது.
  • மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்சனைகள் காரணமாகவும் நடுராத்திரி பசி ஏற்படும். சிலர் மன அழுத்தத்தை சமாளிக்க உணவை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றனர்.

Also Read : இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் 6 ஜுஸ்! இரத்த ஓட்டம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்!

மனித மூளை சுறுசுறுப்பானவை என்றாலும் இரவு நேரத்தில் பசி என்பதை புரிந்துகொள்வது சிரமமானதாக இருக்கலாம். இதற்கு அறிவியல் பதில் கூறுகிறது. உடலில் உள்ள அனைத்தையும் ஒழுங்குப்படுத்தும் எண்டோகெனானினாய்டு எனப்படும் கூறு பசி, வீக்கம் முதல் தூக்கம் வரை அனைத்திலும் பங்குவகிக்கிறது. எண்டோகெனானினாய்டு அமைப்பு ஆய்வின் படி உணவு உண்ட திருப்தி அடைந்தாலும், மீண்டும் உணவு உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. இது சர்க்கரை, கொழுப்பு மற்றும் மாவுச்சத்துள்ள உணவுகளுக்கான பசியை அதிகரிக்கிறது. மேலும் தூக்கமின்மையையும் மோசமாக்குகிறது.

தூக்கத்தை தூண்டும் உணவுகளை சாப்பிடுவது நள்ளிரவு பசியை குறைக்க உதவும். சூடான பால், கெமோமில் டீ, பாதாம், வாழைப்பழங்கள், டார்க் சாக்லேட்டுகள் போன்றவை தூக்கத்தை மேம்படுத்த உதவும். இரவு உணவில் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவை நிறைவாக இருக்கட்டும். முழு தானியம், வேர்க்கடலை, இனிப்பு சேர்க்காத பால், நட்ஸ் போன்றவையும் சேர்க்கலாம்.

Getty Image

முடிந்தவரை பகலில் சீரான இடைவெளியில் உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பாக, தூங்குவதற்கு, 2-3 மணி நேரத்திற்கு முன்பு உணவு உண்ண வேண்டும். இரவில் நார்ச்சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவை உண்பதால் நடுராத்திரியில் பசி எடுக்காது. படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து தூங்கச் செல்லவும். தினசரி ஒரே நேரத்தில் படுக்கைக்குச் சென்று எழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பிரச்சனைக்கான காரணத்தை புரிந்துகொண்டு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைப் பின்பற்றவும். வாழ்வியல் மாற்றம், உணவு முறை மாற்றத்தில் தீர்வு கிடைக்கவில்லை என்று உரிய மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry