இந்திய பாரம்பரிய சமையலில் சின்ன வெங்காயம் முக்கியமான இடம் பெற்றுள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம். உள்ளுறுப்புகளுக்கும் சரி, உடலின் வெளிப்புற உபயோகத்துக்கும் சரி, சின்ன வெங்காயம் பல்வேறு வகைகளில் நம்மை காத்து நிற்கும் சஞ்சீவியாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெய் ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. வெங்காயத்தில் புரதச் சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. எனவே நம் உடம்புக்கு இது ஊட்டச்சத்து தருகிறது.
100 கிராம் வெங்காயத்தில் நீர்ச்சத்து 82%, புரதம் 1.2%, கார்போஹைட்ரேட் 11.1%, 47 மில்லி கிராம் கால்சியம், 50 மில்லி கிராம் பாஸ்பரஸ், 0.7 மில்லி கிராம் இரும்பு சத்து, வைட்டமின் “B”, வைட்டமின் “C”, கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து முதலியவையும் உள்ளன. வெங்காயம் உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றும் குணம் கொண்டது.
Also Read : வெள்ளைச் சர்க்கரை, நாட்டுச் சர்க்கரை, கருப்பட்டி… எது பெஸ்ட்? நீரிழிவு நோயாளிகள் கருப்பட்டி எடுக்கலாமா?
நுரையீரல் பலம்பெற வேண்டுமானால், காலை, மதியம், மாலை, இரவு என்று 4 வேளையும் அரை டீஸ்பூன் வெங்காயச் சாறை சாப்பிட்டு வரவேண்டும். இதனால் நுரையீரலில் உள்ள அழுக்குகள் மற்றும் கழிவுகள் வெளியேறும். எவ்வளவு கொடூர ஜலதோஷம், இருமல், காய்ச்சல், நெஞ்சுசளி வந்தாலும், வெங்காய சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிடும்போது நிவாரணம் கிடைக்கும்.
காலரா நோய் வந்தால், 5 சின்ன வெங்காயம் + 10 மிளகு இரண்டையும் இடித்து, அதனுடன் நாட்டுச் சர்க்கரை கலந்து, காலை, மாலை என 2 வேளையும் தந்தால் தீர்வு கிடைக்குமாம். மூல நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளவர்கள், 50 கிராம் வெங்காயத்தை சாறெடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்த வேண்டும். இப்படி 2 வேளையும், பத்து அல்லது பதினைந்து நாட்கள் குடித்து வந்தால் ரத்த மூலம் குணமாகுமாம்.
பல் வலி இருந்தால், வெங்காயத்தை ஒரு துண்டு எடுத்து பல் வலி உள்ள இடத்தில் வைத்தால் நிவாரணம் கிடைக்கும். சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்தால், அந்த பல்லுக்குள் இருக்கும் புழுக்கள் வெளியேறிவிடும். பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்துவிடும். நெஞ்சுவலி பிரச்சனை இருப்பவர்கள் தினமும் வெங்காயத்தைப் பச்சையாக சாப்பிட்டு வந்தால், ரத்தம் உறையும் பிரச்சினை சீராவதுடன், இதய நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்தாக வெங்காயம் இருக்கும்.
வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால் லேசாக வாய் துர்நாற்றம் வீசக்கூடும் என்பது உண்மைதான். இந்த சின்ன விஷயத்தை நினைத்தால், பெரிய பலன்கள் கிடைக்காமல் போய்விடும். வேண்டுமானால், சின்ன வெங்காயம் சாப்பிட்டுவிட்டு சில புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லலாம். உடல் எடை குறைய பச்சையாக சாப்பிட்டால் அதில் இருக்கும் ஊட்டச்சத்து முழுமையாகக் கிடைக்கும். சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும். வெங்காயத்தை பச்சையாக கடித்து சாப்பிட்டால் வாய்ப்புண் கண் வலி குணமாகும்.
Also Read : கருப்பு கவுனி அரிசியில் இவ்வளவு சத்துக்களா? மருத்துவ பண்புகள் மற்றும் சமைக்கும் முறை!
நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த சின்ன வெங்காயம் உதவுகிறது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் சின்ன வெங்காயத்தில் அதிகம் உள்ளது. சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது. குறிப்பாக ஆஸ்துமா நோயாளிகளுக்கு எளிதில் சுவாசிக்க உதவுகிறது. வெங்காயத்தில் வைட்டமின் E அதிகம் உள்ளதால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சினையை தடுக்கிறது.
வெங்காயத்தில் உள்ள இரும்பு சத்து உடலில் எளிதாக கலக்கும் தன்மை கொண்டது. ரத்த சோகை உள்ளவர்கள் தினமும் வெங்காயத்தை சாப்பிட்டால் ரத்த சோகை பிரச்னைகள் குணமாகும். வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
சின்ன வெங்காயத்தை 4 – 5 எடுத்து தோலுரித்து எடுத்து, சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால், பித்தம் நீங்கும். வெங்காயத்தை துண்டுகளாக்கி, அதில் சிறிது இலவம் பிசின், சிறிது கற்கண்டு தூள் சேர்த்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் மூலக்கோளாறுகளும் நீங்கும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி சீராகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் நிறைய உள்ளதால் நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகவே பயன்படுத்தலாம்.
ஆண்களுக்கு வரப்பிரசாதம்தான் இந்த சின்ன வெங்காயம். ஆண்கள் விரைப்பு தன்மை பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவது நல்லது. இது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகரிக்க செய்வதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகுமாம்.
அதிலும், பச்சை வெங்காயத்தை சாப்பிடுவதால், உங்களுடைய பாலுணர்வு அதிகரிப்பதுடன், முன்கூட்டியே விந்து வெளிப்படுவது தடுக்கப்படுவதாகவும், நீண்ட நேரத்திற்கு உறவு கொள்ள முடியும் என்றும் சொல்கிறார்கள். 2 சின்ன வெங்காயத்தை இடித்து, அரை டம்பளர் தண்ணீரில் கலந்து குடித்து வந்தால் இதற்கு பலன் கிடைக்கும்.
உள்ளுக்கு சாப்பிடுவதில் இத்தனை நன்மைகள் என்றால், வெளிப்புற பிரச்சனைகளிலும் சின்ன வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. வெங்காயத்தில் வைட்டமின் A,C,K நிரம்பியுள்ளதால், புற ஊதா கதிர்களிலிருந்து நம்மை பாதுகாக்கின்றன. எனவே, ஃபேஸ் பேக்கில் சிறிது வெங்காய சாறும் கலந்து தடவினால் கூடுதல் பலன் கிடைக்குமாம். ஆனால், முகப்பரு, கீரல், காயம் இருப்பவர்கள் இதை தவிர்த்துவிட வேண்டும். தலை முடி வளர்ச்சிக்கும் வெங்காய சாறு பயன்படுத்துகிறார்கள்.
Also Read : பிஸ்கட் சாப்பிடுபவர்களுக்கு எச்சரிக்கை! Daily Biscuit Consumption: Side Effects and Health Risks!
வெங்காயத்தை சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மறுபடியும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும். பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும் என்பார்கள். இதனால் விஷம் இறங்குமாம். அதேபோல, தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்த்தாலும், விஷம் இறங்கும் என்பார்கள்.
அதிகமாக தலைவலியில் அவதிப்படுபவர்கள், வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப்போட்டால் நிவாரணம் கிடைக்கும். வெட்டுக்காயம் இருந்தால், வெங்காயத்தை ஒரு துண்டு வதக்கி, காயத்தில் வைத்து வந்தால் சரியாகும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாக பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
இவ்வளவு பலன்களையும் அறிந்து வைத்திருந்ததால்தான், நம்முடைய முன்னோர்கள் காலையில் பழைய சாதம், கூழ் போன்றவற்றை சாப்பிடும்போது, மறக்காமல் இந்த சின்ன வெங்காயத்தையும் சேர்த்தே சாப்பிட்டு வந்திருக்கிறார்கள்.. முன்னோர்கள் எல்லாம் மூடர்கள் அல்ல என்பதற்கு இந்த சின்ன வெங்காயமும் ஒரு உதாரணம்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry