உடல் எடையை இயற்கையாக கிடுகிடுவென குறைக்கனுமா…? இந்த 10 மூலிகைகள் பெருமளவு உதவும்!

0
79
Discover the power of Ayurvedic herbs to help reduce belly fat naturally. These ancient remedies are known to boost metabolism, aid digestion, and support healthy weight loss without side effects. Getty Image.

இந்த காலத்தில் உடல் பருமன் பலரையும் பாடாய்ப்படுத்தும் ஒரு பிரச்சனையாக உள்ளது. கடந்த சில தசாப்தங்களில் இது மிக வேகமாக அதிகரித்து விட்டது. மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன. தொப்பை கொழுப்பும் (Belly Fat) உடல் எடையும் அதுகரித்து விட்டால், அவற்றை சரி செய்வது பிரம்ம பிரயத்னமாகவே உள்ளது.

உடல் எடை அதிகரிப்பதால் நம் உடலில் பல வித பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உடல் பருமன் காரணமாக, சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு போன்ற கடுமையான நோய்களும் நம்மை தாக்குகின்றன. ஆகையால், உடல் எடை அதிகரிக்கத் தொடங்கும் போதே இதை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது மிக அவசியமாகும்.

Also Read : அரிசி சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும் என்பது மூட நம்பிக்கையா? உண்மையா?

உடல் எடையை குறைக்க பலர் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். சிலர் ஜிம் செல்கிறார்கள், சிலர் கடுமையான உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்கிறார்கள். எனினும், சில எளிய, இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். உடல் எடையை குறைக்க, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன், இந்த ஆயுர்வேத மூலிகைகளையும் முயற்சிக்கலாம்.

இதில் சிறப்பு என்னவென்றால், உடல் பருமனுக்கான இந்த ஆயுர்வேத தீர்வுகளைத் தேடி நாம் எந்த கடைகளுக்கும் செல்ல வேண்டியதில்லை. இவை நம் வீட்டு சமையலறைகளிலேயே இருக்கின்றன. கொழுப்பை எரித்து கூடுதல் கலோரிகளை எரிக்க இவை உதவுகின்றன. இவை எடை இழப்பில் (Weight Loss) உதவுவதோடு, ஹார்மோன் சமநிலை, இன்சுலின் உணர்திறன், கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) கட்டுப்பாடு ஆகியவற்றோடு கொழுப்புக் கட்டிகளை குறைப்பதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன. இருப்பினும், ஒரு ஆயுர்வேத நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.

Also Read : ஒரே மாதத்தில் 5 கிலோ எடையை குறைக்கும் வழி! ஆரோக்கியமான எடை குறைப்புக்கான டிப்ஸ்!

வெந்தயம்:

வெந்தயத்தில் (Fenugreek) நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவற்றை எடுத்துக் கொண்டால் பசி கட்டுப்படும். இதனால் அதிகம் உணவு உண்பதில்லை. உடல் எடை கட்டுப்படும். இதனுடன், இரத்த சர்க்கரை அளவும் கட்டுப்படுத்தப்படுகிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும் மற்றும் கொழுப்பை எரிக்கவும் வெந்தயம் உதவுகிறது. உடல் எடை கட்டுப்படும்.

அஸ்வகந்தா:

சித்த மருத்துவத்தில் அமுக்கரா எனப்படும் அஸ்வகந்தா மூலிகை மன அழுத்தத்தையும் குறைக்கிறது. கார்டிசோலின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இதனை உட்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும். அதிக எடையைக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

மிளகு:

மிளகுத்தூள் நமது வளர்சிதை மாற்றத்திற்கு நல்லது. இவற்றை உட்கொள்வதால், உடலில் உள்ள கலோரிகள் மிக விரைவாக கரையும். செரிமான சக்தியை அதிகரிப்பதோடு, பசியும் கட்டுப்படுத்தப்படுகிறது. இவற்றை எடுத்துக்கொள்வது நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதனால் உடல் எடையும் குறையும்.

குங்கிலியம் பிசின்:

இது ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதனை உட்கொள்வதால் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் குறைகிறது. தைராய்டு செயல்பாட்டை அதிகரிக்கிறது மற்றும் உடலில் வளர்சிதை மாற்ற செயல்முறைகளை துரிதப்படுத்துகிறது.

திரிபலா:

திரிபலா பற்றி பலருக்கு தெரியும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை திரிபலா ஆகும். இதனை உட்கொள்வதால் நச்சுகள் வெளியேறி செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்துகிறது. இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும். வயிற்று உப்புசம், அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். உயிரியல் செயல்முறை துரிதப்படுத்தப்பட்டு எடையும் குறைக்கப்படுகிறது.

கடுக்காய்:

இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் கடுக்காயை எடுத்துக் கொள்ளலாம். இது குடலை நன்கு சுத்தம் செய்வதால் வாயு போன்ற வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் சரி செய்யும். கடுக்காய் வயிற்றை முறையாக சுத்தம் செய்வதன் மூலம் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகிறது.

தேன்:

ஆயுர்வேதத்தின் படி, தேன் நம் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க பயன்படுகிறது. சுவையில் இனிப்பாகவும், சூடாகவும், வறண்ட தன்மையுடனும் இருக்கும் தேன், எளிதில் ஜீரணமாகி சளியைக் குறைக்கும். உடல் எடையை குறைக்க, தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் 1 டீஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து உட்கொள்ளவும்.

Also Read : கருத்தரித்தல் தள்ளிப்போகிறதா? இந்த உணவுகள் கண்டிப்பாக பலன் தரும்! Fertility Foods!

பார்லி:

பார்லியில் பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. உடல் எடையை குறைக்க இதை உட்கொள்ளலாம். பார்லியை உட்கொள்வதால் உடல் பருமன் குறைவது மட்டுமின்றி, சர்க்கரை நோய் மற்றும் கெட்ட கொலஸ்ட்ராலையும் கட்டுப்படுத்தலாம். இது தவிர, செரிமானம், நினைவாற்றல் மற்றும் உடல் வலிமையையும் இது மேம்படுத்துகிறது.

மஞ்சள்:

இயற்கையிலேயே உஷ்ணத்தன்மை கொண்ட மஞ்சள், உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஆற்றல் கொண்டது. இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இருமல் மற்றும் சளியைக் குறைக்கவும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. உடல் பருமனை குறைக்க, வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் தேன் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சளை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிடலாம்.

To order – WhatsApp 9444086655

நெல்லிக்காய்:

இது மூன்று வித தோஷங்களான வாதம், பித்தம் மற்றும் கபம் ஆகியவற்றை சமன் செய்து உடலை அமைதிப்படுத்துகிறது. உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது. இதை தினமும் உட்கொள்வதால் உடல் எடை குறைவதோடு, நீரிழிவு, முடி உதிர்தல் மற்றும் அமிலத்தன்மை ஆகிய பிரச்சனைகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.

எடை vs கொழுப்பு:

உடல் எடை, கொழுப்பால் மட்டுமின்றி தசைகள், எலும்பின் அடர்த்தி, உடலில் உள்ள நீர் போன்றவற்றாலும் தீர்மானிக்கப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த சரிவே எடை இழப்பை குறைக்கிறது. சாப்பிட்ட பிறகு நமது எடை மாறுகிறது. நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. நீங்கள் வெறும் வயிற்றில் 50 கிலோ எடையுள்ளவராக இருந்தால், நீங்கள் உட்கொண்ட உணவு மற்றும் தண்ணீரின் காரணமாக நாள் முடிவில் உங்கள் எடை அதிகரிக்கக்கூடும்.

To order – WhatsApp 9444086655

இதற்கிடையில், கொழுப்பு என்பது நாம் சாப்பிடும் உணவில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை பொறுத்தது. உடலில் உள்ள கொழுப்பு சத்து நமது உடல் எடையை அதிகரிக்கலாம். உடலில் கொழுப்பின் சதவீதம் அதிகரிக்கும் போது, நீங்கள் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் போன்ற நோய்களுக்கு ஆளாக நேரிடும். எனவே உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் கொழுப்பை குறைப்பது நல்லது. இதனால் உடலை ஸ்லிம்மாக மாற்றுவதோடு, பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கலாம்.

Disclaimer: This article is for informational purposes only and does not constitute medical advice. Ayurvedic herbs and remedies may interact with other medications and are not suitable for everyone. Always consult with a qualified healthcare professional or Ayurvedic practitioner.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry