காலையில் வீட்டில் தோசை சுட மாவு இல்லையா? என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் மீல்மேக்கர் உள்ளதா? அப்படியானால் அந்த மீல் மேக்கர் கொண்டு அட்டகாசமான சுவையில் மொமொறுவென்று சூப்பரான தோசை செய்யலாம். இது ரவா தோசை போன்று நன்கு சுவையாக இருக்கும். முக்கியமாக 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமானது.
கார்போஹைட்ரேட்டுகளின் நல்ல ஆதாரமான அரிசி மற்றும் பருப்புடன் செய்யப்படும் பாரம்பரிய தோசை செய்முறையைப் போலல்லாமல், மீல்மேக்கர் தோசை புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. குறிப்பாக குழந்தைகளுக்கு அல்லது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது சிறந்த காலை சிற்றுண்டியாக இருக்கும்.
Also Read :மீல் மேக்கர் வெச்சு இப்படியொரு குருமாவா? வேற லெவல் டேஸ்ட்! டிரை பண்ணுங்க..!
மீல்மேக்கர் தோசை செய்ய தேவையான பொருட்கள்:
- மீல் மேக்கர் – 1 கப்
- கோதுமை மாவு – 3 ஸ்பூன்
- ரவை – 2 ஸ்பூன்
- பச்சை மிளகாய் – 3
- இஞ்சி – 1 சின்னது
- சீரகம் – 1 ஸ்பூன்
- பூண்டு – 7 (பொடியாக நறுக்கியது)
- மிளகு – 1 ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய் – 4
- கசூரி மெத்தி – 1/2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை – சிறிதளவு
- உப்பு – சுவைக்கு ஏற்ப
- தண்ணீர் – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
மீல்மேக்கர் தோசை செய்முறை:
மீல்மேக்கர் தோசை செய்ய முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் தண்ணீரை ஊற்றி, மீல்மேக்கர், காஷ்மீரி மிளகாய் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வையுங்கள். பிறகு அதை அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைத்து சுமார் இரண்டு நிமிடம் அப்படியே வைக்கவும்.
நிமிடம் கழித்து நீரை முற்றிலும் வடிகட்டிவிட்டு, மீல் மேக்கரில் உள்ள அதிகப்படியான நீரை பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் மீல்மேக்கர், வரமிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, ரவை, சுவைக்கேற்ப உப்பு ஆகியவற்றுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
Also Read : ஜவ்வரிசி போண்டா! சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்! Step-by-Step Guide to Making Delicious Javvasrisi Bondas!
பின் அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதில் கோதுமை மாவு, பூண்டு, சீரகம், மிளகுத்தூள், கசூரி மெத்தி, ககொத்தமல்லி, சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். கரைப்பதற்கு துளசி தண்ணீர் பயன்படுத்துவது சிறப்பு.
இப்போது அடுப்பில் ஒரு தோசை கல்லை வைத்து அது சூடானதும், அதில் எண்ணெய் தடவி கலக்கி வைத்த மாவை ஒரு கரண்டி எடுத்து அதில் ஊற்றவும். மாவைச் சுற்றி எண்ணை ஊற்றிக் கொள்ளுங்கள், பிறகு இரண்டு பக்கமும் பிரட்டி போட்டு வேக வைத்து எடுத்தால் டேஸ்டான மீல்மேக்கர் தோசை ரெடி. இந்த தோசைக்கு தேங்காய் சட்னி, மல்லி சட்னி போன்றவை அற்புதமாக இருக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry