நம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் செடிகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் தாவரங்கள் அழகுடன் கூடிய ஆறுதலையும் தருகிறது. இது உடல், மன ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளைத் தருகிறது.
ஆண்கள் அலுவலகம் சென்று வந்த பிறகும், பெரும்பாலான பெண்கள் முழு நேரமும் வீட்டுக்குள்ளேயே செலவிடுகிறோம். இன்றைய பிஸியான காலகட்டத்தில் சிலரால் வெளிப்புற தோட்டத்தை வைத்திருக்கவோ அல்லது பராமரிக்கவோ முடியாது. எனவே உட்புற சுற்றுச்சூழலை பாதுகாப்பாகவும், அழகாகவும் வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அதன் படி, செடி வளர்ப்பது ஒரு நல்ல யோசனையாகும். அதாவது இயற்கையோடு நம்மை இணைத்துக் கொள்வதற்கான சிறந்த தேர்வாக இது இருக்கும்.
Also Read : கிட்னியை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழங்கள்! Fruits that detox kidneys!
இதன் காரணமாக, இன்று பலரும் உட்புறத் தோட்டத்தில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். நவீன அழகியல் மற்றும் இயற்கையின் அழகு ஆகியவற்றின் கலவையான வாழ்க்கை முறையின் தேர்வாக உட்புறத் தோட்டம் அமைகிறது. வீட்டினுள் தாவரங்களை கவனித்துக்கொள்வது, தண்ணீர் ஊற்றுவது, செடி கொடிகளுடன் பேசுவது மனதை இலகுவாக்கி மகிழ்ச்சியை உண்டாக்கும். இதன் மூலம் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
பசுமை உள்ள இடங்களில் வாழ்வதும், வேலை செய்வதும் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாக ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நம்மைச் சுற்றி தாவரங்களை வைத்திருப்பது நம்மை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
பூக்கள் அல்லது தாவரங்களைப் பார்ப்பது, காயங்கள் மற்றும் நோய்களிலிருந்து விரைவில் மீள உதவுவதாக சில ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. 2002 ஆய்வின் மதிப்பாய்வில் குறிப்பிட்டதன் படி, தாவரங்களை பார்க்காதவர்களுடன் ஒப்பிடுகையில், பல்வேறு வகையானஅறுவை சிகிச்சை செய்து கொண்ட நபர்கள், அதிலிருந்து மிக வேகமாக குணமடைந்ததாகவும், குறைவான வலி நிவாரணிகளே தேவைப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
வசிக்கும் இடத்திலோ அல்லது வேலை செய்யும் இடத்திலோ தாவரங்கள் இருப்பின், அவை சூழலை அமைதியாக, நிதானமாக மற்றும் வசதியாக உணர வைப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டு உள்ளது. இதில் உட்புறத் தோட்டங்கள் ஒரு நபரின் மன அழுத்தத்தைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. கணினி அடிப்படையிலான வேலை காரணமாக இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் அதிகரிக்கலாம். அத்தகையவர்கள் தாவரங்களுடன் இணைவது, உடலியல் மற்றும் உளவியல் அழுத்தத்தைக் குறைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு சில வீடுகளில் அல்லது அவர்கள் இருக்கும் இடங்களில் உண்மையான தாவரங்கள் அல்லது மலர்களை விட, செயற்கை செடிகளை தேர்வு செய்கின்றனர். செயற்கையான தாவரங்களை விட உண்மையான தாவரங்கள்தான் உளவியல் ரீதியாக நம்மை மேம்படுத்த எனவே செயற்கை தாவரங்களை விட, இயற்கைத் தாவரங்களில் கவனம் செலுத்தலாம்.
பூங்காவில் பார்க்கும் அழகிய காட்சிகள் நம் மனநிலையை இலகுவாக்குவதாக இருக்கும். ஆனால், ஒரு தொட்டியில் செடி வைத்திருப்பது, அதை நாமே பராமரிப்பது மனநிலையை மேம்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். பணியிடத்தில் தாவரங்கள் இல்லாத நபர்களுடன் ஒப்பிடுகையில், பணியிடத்தில் தாவரங்களை வைத்திருப்பது பணியில் திருப்தி அளிப்பதாகவும், அர்ப்பணிப்பை பெரிதும் மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.
Also Read : ராஜராஜ சோழன் பிறந்தது எங்கே தெரியுமா? அந்த ஊர் தற்போது எப்படி இருக்கிறது?
வீடுகளில், மூலிகைகள், கீரைகள் மற்றும் காய்கறிகள் என அதிகமாகச் செடிகளை வளர்க்கலாம். நாம் வளர்க்கும் செடி நமது உடல் நலனுக்கு பயன்படுவதாக இருக்க வேண்டும். தோட்டம் உள்ள வீடுகளாக இருந்து மரங்கள் பயிர் செய்யலாம். சுவாசப் பிரச்சனைகள் வராமல் தடுக்க சுவாச மண்டல உறுப்புகள் சீராக இயங்க கற்பூரவல்லி செடியை வரவேற்பறையில் வைக்கலாம். படுக்கை அறையில் புத்துணர்வும் மகிழ்ச்சியும் கிடைக்க (சூரிய ஒளி கொஞ்சம் இருந்தால் போதும்) அழகான மலர்ச்செடிகளை வைக்கலாம்.
இவை நம் மனத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும். உளவியல் ரீதியாக இவை நம்மை உற்சாகமாக மாற்றும். சமையலறையில் என்றால் புதினா செடிகளை வைக்கலாம். இவை நறுமணம் கமழும் செடி வகை அதோடு சமையலறையில் பூச்சிகள் எதுவும் அண்டாது என்பதும் கவனிக்க வேண்டியது. மூலிகை செடிகளை வளர்ப்பதன் மூலம் நம் அறிவாற்றல் அதிகரிக்க வாய்ப்புண்டு என்கிறது ஆய்வு.
சற்று விசாலமான வீடாக இருந்தால் வீட்டிலேயே துளசி, தூதுவளை, நிலவேம்பு, அருகம்புல், ஆடா தொடை, வேப்பிலை, கரிசலாங்கண்ணி, பூலாங்கிழங்கு, நொச்சி, கற்பூரவல்லி, வெந்தயம், புதினா, வல்லாரைக்கீரை, அஸ்வகந்தா, ஓமவல்லி இப்படி இன்னும் இன்னும் பலன் தரக்கூடிய மூலிகை செடிகளை வளர்க்கலாம். இவையெல்லாம் காற்றில் கலந்துவரும் மாசை தூய்மைப்படுத்துவதில் முக்கியமானவை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry