பொதுவாக மஞ்சூரியன் என்பது சிக்கன், காலிஃபிளவர் (கோபி), இறால், மீன், ஆட்டிறைச்சி மற்றும் பன்னீர் போன்ற பொருட்களை நறுக்கி நன்றாக வறுத்து, பின்னர் சோயா சாஸுடன், சுவையான சாஸில் வதக்குவதன் மூலம் தயாரிக்கப்படும் இந்திய சீன உணவுகளின் ஒரு வகையாகும். சீனாவில் பெரும்பாலும் அறியப்படாவிட்டாலும், இது இந்தியாவில் பிரபலமாகிவிட்டது.
பெரும்பாலான சைவர்களுக்கு மஞ்சூரியன் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவ்து கோபி மஞ்சூரியன்தான். ஆனால் இதனை காலிபிளவர் வைத்து மட்டும்தான் செய்ய வேண்டுமென்று இல்லை. வீட்டில் உள்ள மற்ற காய்கறிகளை வைத்தும் இதனை செய்யலாம்.
Also Read : டேஸ்டியான மஞ்சள் பூசணி தோசை-பச்சை மிளகாய் மண்டி செய்யலாமா? Yellow Pumpkin Dosa Recipe!
அனைவருக்கும் பிடித்த அனைத்து வீடுகளிலும் இருக்கும் ஒரு காய்கறி என்றால் அது உருளைக்கிழங்குதான். உருளைக்கிழங்கை வைத்து மஞ்சூரியன் செய்யும் போது அது அனைவருக்கும் பிடித்த உணவாக இருக்கும். இந்த பதிவில் உருளைக்கிழங்கை வைத்து எப்படி மஞ்சூரியன் எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.
மாவுக்கு தேவையானப் பொருட்கள்:
- உருளைக்கிழங்கு – 2
- ஸ்பூன் கார்ன்ஃப்ளார் – 3
- மைதா – 2 ஸ்பூன்
- மிளகு தூள் – 1 ஸ்பூன்
- பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- உப்பு தேவைக்கேற்ப
- எண்ணெய் தேவையான அளவு
Also Read : ஆந்திரா ஸ்பெஷல் பருப்புப் பொடி செய்முறை! நாக்கின் சுவை மொட்டுகளை தட்டி எழுப்பும் ருசி..!
மஞ்சூரியன் மசாலாவுக்கு தேவையானப் பொருட்கள்:
- எண்ணெய் – 1 ஸ்பூன்
- நறுக்கிய இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
- பெரிய நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
- கேப்சிகம் க்யூப் – 1/2 கப்
- சோயா சாஸ் – 1/4 ஸ்பூன்
- சிவப்பு மிளகாய் சாஸ் – 1/2 ஸ்பூன்
- தக்காளி சாஸ் – 1 ஸ்பூன்
- மிளகு தூள் – 1/4 ஸ்பூன்
- வினிகர் – 1/2 ஸ்பூன்
- உப்பு தேவையான அளவு
- கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன்
- தண்ணீர் தேவையான அளவு
Also Read : ஜவ்வரிசி போண்டா! சத்தான ஈவினிங் ஸ்நாக்ஸ்! Step-by-Step Guide to Making Delicious Javvasrisi Bondas!
உருளைக்கிழங்கு மஞ்சூரியன் செய்முறை:
- உருளைக்கிழங்கை குக்கரில் போட்டு 1 ஸ்பூன் உப்பு சேர்த்து 3 விசில் வரை வேகவைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் தோலை உரித்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு சிறிய கிண்ணத்தில் சோள மாவை எடுத்து அதனுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து தனியாக வைக்கவும்.
- மற்றொரு கிண்ணத்தில் மாவு தயாரிக்க பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை சேர்க்கவும். தண்ணீர் கொஞ்சமாக சேர்த்து கொஞ்சம் கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கவும்.
- உருளைக்கிழங்கை பாதியாக நறுக்கி, மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி உருளைக்கிழங்கை வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து, வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும், பின்னர் குடைமிளகாய் சேர்த்துக்கு வதக்கவும்.
- பின்னர் சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ், உப்பு மற்றும் மிளகு சேர்க்கவும்.
- இவற்றை பச்சை வாசனை போனவுடன் அதில் சோள மாவு கரைசலை ஊற்றிக் கிளறவும்.
- ஒரு நிமிடம் கொதிக்க விடவும், பின்னர் வினிகர் சேர்க்கவும். 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- பின்னர் வறுத்த உருளைக்கிழங்கு சேர்த்து கிளறவும். நன்கு வதக்கிய பின் சிறிதளவு பச்சை வெங்காயம் போட்டு அடுப்பை அணைக்கவும். சுவையான உருளைக்கிழங்கு மஞ்சூரியன் ரெடி.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry