அதிமுக பொதுக்குழு கூட்டம்! சட்டம் ஒழுங்கு சீர்கேடுக்கு கண்டனம்! சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க வலியுறுத்தல்!

0
68
AIADMK has urged the DMK government to pass a resolution in the General Council advocating for the implementation of a caste census in Tamil Nadu. The party emphasized that such a move is essential for ensuring equitable policies and resource allocation based on accurate social data.

அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சிறப்புரை ஆற்றினார்.

பொதுக்குழு கூட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் தொழிலதிபர் ரத்தன் டாடா, சி.பி.எம். பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மற்றும் டெல்லி கணேஷ் ஆகியோரின் மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதன்படி ஏற்கெனவே செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்களுடன் சேர்த்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

AIADMK general council passes 16 resolutions

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்

* மதுரை மேலூர் அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. போதிய அழுத்தம் கொடுத்து டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்கத் தவறியதாக தமிழ்நாடு அரசுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் கபட நாடகம் ஆடும் மாநில அரசுக்கு கண்டனம் தெரிவிப்பதாக அ.தி.மு.க. பொழுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* பெஞ்சல் புயல் பாதிப்பின்போது, மக்களின் அடிப்படைத் தேவைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்றவில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் வகையில் விலைவாசி உயர்வு உள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* சட்டம் ஒழுங்கு சீர்கேடு, அதிக வரி விதிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தியும், சென்னை ஐகோர்ட்டில் வழக்காடு மொழியாக தமிழ் இடம் பெறவும் வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் வைப்பதை தவிர்த்து ஆங்கிலத்தில் பெயர் வைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* பார்முலா 4 பந்தயம், பேனா நினைவு சின்னம் உள்ளிட்டவற்றிற்காக நிதியை வீணடிக்கும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* குடிமராமத்து திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* கோதாவரி – காவிரி, பரம்பிகுளம் – ஆழியாறு, பாண்டியாறு – புன்னம்புழா திட்டங்களை தொடர தவறிய திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* வாக்காளர் பட்டியலில் நிலவும் குளறுபடிகளை சரிசெய்து நியாயமாக தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்க திமுக அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* இஸ்லாமிய சிறைக்கைதிகளை விடுதலை செய்ய எந்த முயற்சியும் மேற்கொள்ளாத திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் சேர்க்க சட்ட திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* தமிழ்நாட்டிற்கான நிதிப் பகிர்வை பாரபட்சமில்லாமல் வழங்கிட மத்திய அரசை வலியுறுத்தி அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசின் கருவூலத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து செல்லும் வருவாயில், நான்கில் ஒரு பங்குகூட நிதிப் பகிர்வாக கிடைப்பதில்லை. இதன் காரணமாக, வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உருவாகிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* 2026ல் எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சராக்குவோம் என்றும், எம்.ஜி.ஆர். ஜானகி நூற்றாண்டு விழாவை சிறப்பாக நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தும் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,000 பேரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். அழைப்பாணை உள்ளவர்கள் மட்டுமே பொதுக்குழுவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry