
2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், திரிகிரஹ யோகம் என்று அழைக்கப்படும் ஒரு கிரக பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த அற்புதமான நிகழ்வு மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணையும்போது நிகழ்கிறது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் சூரியன், சனி மற்றும் சுக்கிரன், மீன ராசியில் இணைகிறார்கள்.
இந்த அரிய நிகழ்வு மூன்று ராசிக்காரர்களுக்கு அற்புதமான வாய்ப்புகளையும், வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களையும் வழங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. திரிகிரஹ யோகத்தால் பயனடைபவர்களுக்கு அதிர்ஷ்டம், வெற்றி, சக்தி மற்றும் சமூகத்தில் அந்தஸ்து கிடைக்கும்.
Also Read : காலையில் டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? அச்சுறுத்தும் உண்மை..!
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு திரிகிரஹ யோகம் சாதகமான மாற்றங்களை வழங்கப்போகிறது. வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் அவர்களுக்கு வெற்றிகள் குவியும். வேலையில் இருப்பவர்கள், பதவி உயர்வு அல்லது புதிய வேலை வாய்ப்பு போன்ற பெரிய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறலாம். அலுவலகத்தில் உங்கள் முயற்சிகள் மற்றும் திறமைகள் அங்கீகரிக்கப்பட வாய்ப்புள்ளது, மேலும் சக ஊழியர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.
நிதி ரீதியாக, நீங்கள் பணத்தைச் சேமிப்பதில் வெற்றி பெறலாம், இது உங்கள் எதிர்காலத்திற்கு பாதுகாப்பைத் தரும். தனிப்பட்ட அல்லது வணிக நோக்கங்களுக்காக நீங்கள் ஒரு நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம். இந்த காலகட்டத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால், பல லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசியின் நான்காவது வீட்டில் திரிகிரஹ யோகம் உருவாவது தனுசு ராசிக்காரர்களுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கப்போகிறது. இந்த சுப யோகம் தனுசு ராசிக்காரர்களுக்கு ஆறுதலையும் ஆடம்பர வாழ்வையும் தரப்போகிறது, சொத்து அல்லது வாகனம் போன்ற கூடுதல் சொத்துக்களை வாங்குவதற்கு அதிர்ஷ்டம் கூடிவரும். உங்கள் குடும்பச் சூழல் இணக்கமாக இருக்கும், மேலும் குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் உறவுகள் வலுவடையும்.
இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான நெருக்கம் அதிகரிக்கலாம், இது உங்களை உணர்வுரீதியாக பலப்படுத்தலாம். சமூகத்தில் உங்கள் இமேஜ் மேம்படும், இதன் விளைவாக மரியாதை மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த திரிகிரஹ யோகம் அவர்களின் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறது.
Also Read : ஈரேழு பதினாலு லோகங்கள் எங்கே இருக்கிறது? இவற்றை கடந்தால் கடவுளைக் காணலாம் என்பது உண்மையா?
மீனம்
திரிகிரஹ யோகம் மீன ராசிக்காரர்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கப்போகிறது. ஏனெனில் இந்த அரிய கிரக நிலை உங்கள் ராசியிலேயே உருவாகிறது. இந்த சக்திவாய்ந்த கிரக நிலை உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் உள்ள தடைகளை தாண்டி வர உதவும். வியாபாரிகளுக்கு, இந்த யோகம் புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. கூட்டு வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
தொழில்முனைவோர் மற்றும் பணியில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை அடையலாம். தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, திருமணமானவர்கள் தங்கள் உறவுகளில் அமைதியையும் மகிழ்ச்சியையும் அனுபவிப்பார்கள். திருமணமாகாதவர்கள் அவர்களுக்கு பொருத்தமான ஒரு வரனை சந்திக்கலாம். இந்த சாதகமான கட்டம் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் முன்னேற்றத்தையும் செழிப்பையும் ஊக்குவிக்கிறது.
Disclaimer: The information provided above is based on assumptions and data available on the internet and is not guaranteed for accuracy.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry