Don’t miss it..! மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்த ஹார்மோன் பற்றி தெரியுமா? அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

0
141
Cortisol: Understanding the stress hormone, its effects on your body, including anxiety, weight gain, and sleep disturbances. Learn about the signs of high cortisol and effective control methods such as stress management techniques, relaxation exercises, and lifestyle changes.

மன அழுத்தம் என்பது கேன்சர் போன்று பெண்களின் மன நலத்தை மட்டுமல்லாமல் உடல் நலத்தையும் தீவிரமாக பாதித்து வருகிறது. மன அழுத்தம் ஏற்படுவதற்கு பல விதமான வெளிப்புற காரணிகள் இருக்கின்றன. ஆனால், மன அழுத்தத்தால் பாதிக்கப்படும்போது உடலில் கார்ட்டிசால் என்ற ஒரு ஹார்மோன் சுரக்கும்.

கார்டிசோல் என்பது என்பது சிறுநீரகங்களுக்கு அடுத்ததாக அமைந்துள்ள அட்ரீனல் சுரப்பிகள், சிறுநீரகங்களின் மேல் உள்ள நாளமில்லா சுரப்பிகள் உற்பத்தி செய்து வெளியிடும் ஸ்டீராய்டு ஹார்மோன் ஆகும். இந்த ஹார்மோன் அதிகமாக சுரக்கும்போது உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படும், உடலுறுப்புகளின் செயல்பாடும் குறையும்.

நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவது, இரத்த குளுக்கோஸ் அளவுகள், இரத்த அழுத்தம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துதல் உள்பட பல காரணங்களுக்காக கார்டிசோல் உடலால் பயன்படுத்தப்படுகிறது. கவலை, மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற, கார்டிசோலின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம்.

கார்டிசோல் சமமின்மை மற்ற ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென்(பெண்களின் பூப்புக் கால வளர்ச்சிக்கும், மாதவிடாய் காலங்களிலும் முக்கியப் பங்காற்றுகிறது) மற்றும் புரொஜெஸ்ட்ரோனிலும்(பெண்களுக்கு மாதவிடாய்க்கு முக்கியமான ஒரு ஹார்மோன்) சமமின்மையை ஏற்படுத்தும். அடிக்கடி தாகம் எடுப்பது, இனிப்பு சாப்பிட விரும்புவது, மாதவிடாய்க் காலங்களில் மனநிலையில் மாற்றம், இரவில் தூங்குவதில் சிரமம் போன்றவை கார்டிசால் சமமின்மைக் குறிகளாக இருக்கலாம்.

Also Read :போனை எடுத்ததும் ஏன் ‘Hello’ என்று சொல்கிறோம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு இதுதான்…!

தினசரி வேலை, படிப்பு உள்ளிட்ட பிற அழுத்தத்திற்கு மத்தியில், பெரும்பாலானோர் அடிக்கடி மன அழுத்தத்தை உணர்கிறார்கள். பிரச்சனைகளைச் சந்திக்கும் போது கவலை அதிகரித்து, மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மனநலப் பிரச்சனைகளில் இருந்து விடுபட பலர் பல்வேறு வழிகளை கையாளுகின்றனர்.

யோகா, தியானம் மற்றும் மன அழுத்த எதிர்ப்பு மருந்துகளை சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுவதற்கான அடிப்படைக் காரணங்களை அறிய அவர்கள் முற்படுவதில்லை. கார்டிசோல் என்ற ஹார்மோன் மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்குக் காரணமாக இருக்கிறது. கவலை, மன அழுத்தம் போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெற, கார்டிசோலின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிக முக்கியம்.

கார்டிசோல் ஹார்மோன் என்றால் என்ன?

மன அழுத்த ஹார்மோன் என்று கார்டிசோல் அழைக்கப்படுகிறது. இது அட்ரீனல் சுரப்பியில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒருவர் அதிக மன அழுத்தத்துடனோ அல்லது பதற்றத்துடனோ உணரும்போது, அட்ரீனல் அளவு அதிகரிக்கிறது. மன அழுத்தம் குறையத் தொடங்கும் போது, மன அழுத்த ஹார்மோன்களின் அளவும் குறைகிறது.

கார்டிசோல் ஹார்மோன் அதிகரித்தால்..?

கார்டிசோல் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும் போது, உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. கார்டிசோல் அளவு அதிகரிக்கும்போது ஏற்படும் முக்கியமான சில அறிகுறிகள்:-

1. தலைவலி.
2. எரிச்சல்.
3. எடை அதிகரிப்பு.
4. மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றில் கனமான உணர்வு போன்ற பிரச்சனைகள்.
5. கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகள்.

Molecular model of the hormone cortisol (chemical formula: C21.H30.O5) and computer illustration of the adrenal gland. The molecule is shown with the atoms as spheres. Cortisol, produced by the adrenal gland, is important for fat, carbohydrate and protein metabolism. It also helps to regulate water balance.| Getty Image.

கார்டிசோல் ஹார்மோனைக் குறைக்கும் வழிகள்

சரிவிகித உணவு 

பழங்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சை காய்கறிகள், ஆரோக்கியமான மசாலா, பீன்ஸ், பருப்பு வகைகள், ஆளிவிதைகள், சியா விதைகள் மற்றும் முழு தானியங்களையும் உட்கொள்ளுங்கள். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ள மீன் மற்றும் கடல் உணவுகளை உண்ணலாம். புளிக்க வைக்கப்பட்ட உணவுகளில் தயிர், கொம்புச்சா, ஆப்பிள் சீடர் வினிகர், டார்க் சாக்லெட், கிரீன் டீ போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் கார்போஹைட்ரேட் உணவுகள் கார்டிசோல் அளவை குறைக்க உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

Getty Image

தவிர்க்க வேண்டிய உணவுகள்

பெரும்பாலானோருக்கு நொறுக்குத் தீனிகள் மற்றும் துரித உணவுகளை சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், பல வகையான வாழ்க்கை முறை நோய்களின் ஆபத்து அதிகரிப்பது மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்திலும் எதிர்மறையான தாக்கம் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, நொறுக்குத் தீனி சாப்பிடுவதை நிறுத்துங்கள். இவற்றில் சேர்க்கப்படும் ப்ரிசர்வேட்டிவ்கள், உப்பு மற்றும் பிற செயற்கைப் பொருட்கள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். கார்டிசோல் அளவு அதிகமாக இருந்தால் மாலையில் காஃபின் கொண்ட பானங்கள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தூக்கத்தின் அளவை குறைக்கலாம். இதனால் கார்டிசோல் அளவு அதிகரிக்கலாம்.

Also Read : கண் இமைகளின் அமைப்பு வெளிப்படுத்தும் ஆளுமைப் பண்புகள், குணாதிசயங்கள்!

பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உங்களை மகிழ்வாக வைத்துக்கொள்ள நேரத்தை ஒதுக்க வேண்டும். ஆன்மிக நாட்டம், செல்லப் பிராணிகளுடன் நேரத்தை செலவிடுவது, நல்ல இசையைக் கேட்பது, நடனமாடுவது, எளிய உடற்பயிற்சிகள், யோகா, தியானம், நடைப்பயிற்சி மற்றும் புதிய இடங்களுக்கு பயணித்தல் போன்றவை மனதை லேசாகவும், மகிழ்வாகவும் வைத்துக்கொள்ள உதவும். மேலும், தோட்டக்கலையில் ஈடுபடுவது, புத்தகம் படிப்பதும் மனமகிழ்வுக்கு உதவும்.

அதிகமாக சிந்திக்கும் பழக்கத்தைத் தவிர்க்கவும். தினமும் 8 மணி நேரம் தூங்குவது அவசியம். சரியான தூக்க நேரத்தை தினசரி ஒரே மாதிரி பின்பற்றுவதும் முக்கியம். பிராணாயாமம் செய்ய வேண்டும். ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள் எதிர்மறை எண்ணங்களையும், மன அழுத்தத்தையும் கட்டுப்படுத்த உதவும். இவை கார்டிசோலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கப் பெரிதும் உதவும்.

கார்டிசோல் அளவை குறைக்க நகைச்சுவை உணர்வு கைகொடுக்கும். இது எண்டோர்பின்களின் வெளியீட்டை ஊக்குவிக்கச் செய்யும். எப்போதும் மகிழ்ச்சியுடன் இருந்தால் கார்டிசோல் அளவை உடல் சீராக நிர்வகிக்க உதவும். 2017ம் ஆண்டு ஆராய்ச்சியின் படி, உறவுகளுக்குள் நெருக்கமும், மகிழ்ச்சியும் இருந்தால் கார்டிசோல் அளவு குறையும். வாழ்க்கைத் துணையுடன் மோதல், கருத்து வேறுபாடுகள் இருந்தால் கார்டிசோலின் அளவு அவ்வப்போது உயர்வதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. மன அழுத்தம் இருக்கும் போது நெருக்கமான உறவுகளுடன் அன்பாகப் பேசுவது கூட கார்டிசோல் இம்பேலன்சை சரிசெய்யும்.

Summary :

அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடுகள் பாதிப்புக்கு உள்ளாகும்போது, அது கார்டிசோலை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உருவாக்கக்கூடும். மருத்துவரின் வழிகாட்டுதலுடன், இரத்தப் பரிசோதனை மூலம் கார்டிசோலின் அளவை அறிய முடியும். இது சிகிச்சையை எளிதாக்கும். கார்டிசோல் அளவைத் தெரிந்துகொள்ளும் பரிசோதனைக்காக, காலை மற்றும் பிற்பகல் இரண்டு முறை இரத்தம் எடுக்கப்படும்.

பிட்யூட்டரி சுரப்பியில் கட்டி இருப்பதால், இரத்தத்தில் கார்டிசோல் ஹார்மோன் அதிகமாகவதால் குஷிங் நோய் ஏற்படலாம். இது குஷிங் சிண்ட்ரோம் வகையைச் சேர்ந்தது. குஷிங் நோய்க்குறி(Cushing’s Disease) என்பது ஒரு அரிய நிலை. 20 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் இதனால் பாதிக்கலாம். எடை அதிகரிப்பு, சோர்வு, தசை பலவீனம், உயர் இரத்த அழுத்தம், மனநிலை மாற்றங்கள், தோல் மெலிதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். இது ஆண்களை விட பெண்களை அடிக்கடி பாதிக்கிறது.

அடிசன் நோய்(Addison’s disease) என்பது அட்ரீனல் சுரப்பிகள் சரியாக செயல்படாமல், கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களை போதுமான அளவில் உற்பத்தி செய்யாத ஒரு நீண்டநாள் நோயாகும். இது முதன்மை அட்ரீனல் பற்றாக்குறை அல்லது ஹைபோஅட்ரீனலிசம் என்றும் அழைக்கப்படுகிறது. இது பெரும்பாலும் ஆட்டோ இம்யூன் தாக்குதலால் ஏற்படுகிறது. இது மருந்துகளால் குணப்படுத்தக்கூடியது.

கார்டிசோலின் அளவைக் குறைப்பதற்கும், பதற்றத்தின் அறிகுறிகளைக் குறைப்பதற்கும் அஸ்வகந்தா(அமுக்கரா) பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. எந்தவொரு புதிய சப்ளிமெண்ட்ஸையும் எடுத்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது சிறந்தது.

Disclaimer: The information provided in this article is for general informational purposes only and is not intended as a substitute for professional medical advice, diagnosis, or treatment.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry