தினமும் இரண்டே இரண்டு பேரிச்சம்பழம் சாப்பிடுங்க..! இதனால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

0
44
Unlock the power of dates! Learn about the numerous health benefits of eating 2 dates daily, including improved heart health, digestion, and a natural energy boost.

கோடை காலம் வந்துவிட்டது. குழந்தைகளுக்கு சத்தான உணவு கொடுக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு சுவையான பேரிச்சம்பழம் கொடுத்தால், ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள். பேரிச்சம்பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், நார்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்கள் பேரீச்சம்பழத்தில் அதிகம் உள்ளன.

ஒரு வாரத்திற்கு தினமும் 2 பேரீச்சம்பழம் சாப்பிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பதை தெரிந்துகொள்வோம். மலச்சிக்கல் பிரச்சனை தீரும். சாப்பிட்ட உணவு நன்றாக ஜீரணமாகும். சிறுநீர் நன்றாக வெளியேறும். வயிறு உப்புசம், வயிற்றுப் பிடிப்புகள் போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணம் கிடைக்கும். மூல நோய் மற்றும் குடல் புற்றுநோய் அபாயம் குறையும். பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம். எனவே, அவை இயற்கையாகவே செரிமானத்தை மேம்படுத்துகின்றன.

Also Read : இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்..! வயிற்றுப் பிரச்சனைக்கும் ‘குட் பை’ சொல்லுங்க!

பேரிச்சம்பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அதாவது பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் கரோட்டினாய்டுகள் உள்ளன. இவை கடுமையான நோய்களைத் தடுக்கின்றன. வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்கின்றன. இதயத்திற்கும் நல்லது. பேரிச்சம்பழம் இயற்கையாகவே இனிப்பானது. இவற்றில் பிரக்டோஸ் உள்ளது. எனவே, உணவில் சர்க்கரைக்கு மாற்றாக பேரீச்சை பயன்படுத்தப்படுகிறது.

பேரிச்சம்பழம் எவ்வளவு இனிப்பாக இருந்தாலும், அவற்றில் கிளைசெமிக் குறியீடு குறைவாகவே உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் குறைவான அளவில் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். பேரிச்சை இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது. எனினும் சாப்பிடும் முன் மருத்துவரிடம் அறிவுரை பெறுவது நல்லது.

மூளை சிறப்பாக செயல்பட பேரிச்சை உதவுகிறது. இந்தப் பழங்கள் மூளை விரைவாக வெப்பமடைவதைத் தடுக்கின்றன. எனவே, இது மூளைக்கு நரம்பியல் நோய்கள் வராமல் தடுக்கிறது. மேலும், பேரிச்சை ஞாபக சக்தியை பெரிதும் அதிகரிக்கிறது. அறிவாற்றலும் மேம்படுகிறது.

கர்ப்பிணிப் பெண்கள் பேரிச்சம்பழம் சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிட்டால் பிரசவம் எளிதாக இருக்கும். இது இடுப்பு வலியையும் குறைக்கிறது. அதிக தொந்தரவு அல்லது சிரமம் இல்லாமல் டெலிவரியாகும். எனவே, கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3, நல்ல தரமான பேரிச்சம்பழங்களை சாப்பிடலாம். அதனால் அவர்கள் எல்லா வகையிலும் பயனடைவார்கள். இருப்பினும் பேரீச்சம்பழத்தை எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். ஏனெனில் ஒவ்வொருவரின் உடல் நலனை பொறுத்து நன்மை தீமைகள் மாறுபடலாம்.

பேரிச்சம் பழத்தில் பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்றவை அதிகளவில் உள்ளன. இச்சத்துக்கள் அனைத்தும் எலும்புகளின் வலிமைக்கு இன்மையாதவை. அதோடு இது எலும்புகள் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. பேரிச்சம் பழத்தை சாப்பிடுவதால் கண் பார்வை அதிகரிக்கும். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின் ஏ ஏராளமான அளவில் நிரம்பியுள்ளது.

Also Read : இரவு படுத்தவுடன் தூங்க உதவும் டிப்ஸ்! பகலில் இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள்..! டீப் ஸ்லீப் உறுதி!

3.5 அவுன்ஸ் பேரீச்சம்பழத்தில் ஒரு நாளைக்கு தேவையான 20% பொட்டாசியம் கிடைக்கிறது. 7 கிராம் நார்ச்சத்து, 2 கிராம் புரதம் மற்றும் பல ஆன்டி- ஆக்ஸிடன்டுகள் காணப்படுகின்றன. இதைத் தவிர காப்பர், மாங்கனீசு, விட்டமின் பி6, மக்னீசியம் மற்றும் இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் காணப்படுகின்றன.

பேரிச்சம் பழத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன. இதில் உள்ள புரோட்டீன் தசைகளை வலுவாக்குகிறது. முக்கியமாக பேரிச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நோயெதிர்ப்பு சக்தி எப்போதும் வலுவாக இருக்கும்.

மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் 2 பேரிச்சம் பழத்தை இரவு தூங்கும் முன் சாப்பிடுங்கள். அதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெற உதவும். மேலும் இது செரிமான மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது. பேரிச்சம் பழத்தை தினமும் தவறாமல் உட்கொண்டு வருவது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். பேரிச்சம் பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலில் உள்ள கெட்ட கெழுப்புக்களை நீக்க உதவுகிறது.

நீங்கள் தொப்பை மற்றும் உடல் பருமன் பிரச்சனையால் அவதிப்பட்டால், தினமும் இரவு தூங்கும் முன் 2 பேரிச்சம் பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது வயிற்றுக் கொழுப்புக்களைக் குறைக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள பிற பண்புகள், உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

2 பேரிச்சம் பழத்தை தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது தலைமுடி மற்றும் சருமத்திற்கு நல்லது. ஏனெனில் பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஈ உள்ளது. இது தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் உதவுகிறது. அதே வேளையில் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி சத்தும் உள்ளது. இது சருமத்தை பொலிவாக்குவதோடு, சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது.

மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் இரவு தூங்கும் முன் சாப்பிடுவது நல்லது. ஏனென்றால் பேரிச்சம் பழத்தில் கால்சியம் உள்ளது. இது உடலில் கால்சியம் பற்றாக்குறைப் போக்கும். அதே வேளையில், தினமும் பேரிச்சம் பழம் சாப்பிடுவது மூட்டு வலி பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது. பேரீச்சம் பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது செல்கள் சேதமடைவதை தடுக்கிறது. அத்திப்பழம் மற்றும் பிளம்ஸ் போன்றவற்றில் காணப்படுவதைப் போன்று பேரிச்சம் பழத்திலும் 3 விதமான ஆக்ஸினேற்றிகள் காணப்படுகின்றன.

சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கக்கூடியவர்கள், குறிப்பாக சர்க்கரை நோயாளிகள், பேரிச்சம் பழத்தை அளவுக்கு அதிகமாகவோ அல்லது வெறும் வயிற்றிலோ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.  பேரிச்சம் பழத்தில் அதிகளவு சர்க்கரை இருப்பதால், சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்கலாம். வெறும் வயிற்றில் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கலாம். தினமும் 3-4 பேரிச்சம் பழத்தை ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. சில உணவுப் பொருட்களுடன் பேரிச்சம்பழம் சேர்த்து சாப்பிடுவது அதன் ஊட்டச்சத்துக்களை உடல் சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry