
இந்தியாவில் 80 சதவீத மக்கள் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பல் துலக்குகின்றனர். அதிலும் கிராமப்புறத்தில் இருக்கக்கூடிய 55 சதவீத மக்கள் தங்களது அன்றாட பல்துலக்கும் வழக்கத்தை பின்பற்றுவது இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
காலையில் எழுந்தவுடன் பல் துலக்கினாலும், அதன்பிறகு நாள் முழுவதும் பல்வேறு வகையான உணவு மற்றும் பானங்களை உட்கொள்கிறோம். இருப்பினும், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பெரும்பாலானோர் பல் துலக்க மறந்து விடுகிறார்கள். சிலர் மட்டுமே ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள்.
Also Read : பற்களை எந்த பேஸ்ட்டில், எவ்வளவு நேரம், எப்படி துலக்க வேண்டும்? பல் துலக்கும் தெளிவான வழிமுறைகள்!
பல் துலக்குவது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். பகலில் பல் துலக்குவது எவ்வளவு முக்கியமோ, அதேயளவிற்கு இரவில் பல் துலக்குவதும் மிகவும் முக்கியம். ஏனென்றால் நாள் முழுவதும் பல வகையான உணவு மற்றும் பானங்களை உட்கொள்வதால், பாக்டீரியா, மற்றும் உணவுத் துகள்கள் நம் பற்களில் குவிந்து பற்களில் கசடுகளை அதிகரிக்கின்றன. இந்த கசடுகள் அங்கேயே சேர்ந்து பல் சொத்தை மற்றும் பல் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே, எவ்வளவு வேலைகள் இருந்தாலும் இரவில் பல் துலக்குவதை மறந்துவிடாதீர்கள்.
ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது சிலர் மட்டுமே பின்பற்றும் பழக்கமாகும். காலையில் எழுந்ததும், இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பும் பல் துலக்குவது நல்லது. இருப்பினும், இரவில் பல் துலக்குவது உங்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு மட்டுமல்ல, உங்கள் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
Also Read : வரலாற்றில் பல் மருத்துவம்! 7000 ஆண்டுகளுக்கு முன்பே ரூட் கேனால்(Root Canal) செய்து அசத்தியுள்ள முன்னோர்கள்!
இரவில் பல் துலக்காவிட்டால், வாயில் பாக்டீரியாக்கள் வளரும் அபாயம் உள்ளது என்றும், அவை உங்கள் இரத்தத்தில் கலந்து உங்கள் இதயத்தைப் பாதிக்கும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 2023 -ம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வின்படி, இரவில் பல் துலக்காமல் இருப்பது இதய நோய் வரும் அபாயத்தை அதிகரிப்பதற்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக கூறுகிறது.
மேலும், ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவதற்குப் பதிலாக மூன்று முறை பல் துலக்குபவர்களுக்கு இதய ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. பல் துலக்குவது ஈறு நோய் மற்றும் பல் இழப்பு போன்ற பிரச்சனைகளைக் குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இரவில் பல் துலக்குவது பிளேக் மற்றும் உணவுத் துகள்களை நீக்கி, பல் சிதைவு மற்றும் துவாரங்கள் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இது மட்டும் அல்லாமல் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டென்டல் அண்ட் கிரானியோஃபேஷியல் ரிசர்ச் நடத்திய மருத்துவ ஆய்வில், ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்குவது பல் சிதைவு அபாயத்தை 25% குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் பல் துலக்கும் பொழுது சொத்தைப்பல் ஏற்படுவதற்கான வாய்ப்பு 50 சதவீதம் குறைகிறது. படுப்பதற்கு முன்பு நாம் பல்துலக்கி விடுவதால் வாயில் இருக்கக்கூடிய கிருமிகள், உணவு துகள்கள் போன்றவை சுத்தம் செய்யப்பட்டு பற்கள் சேதம் அடைவது தவிர்க்கப்படுகிறது. எனவே இரவு நேரத்தில் பல் துலக்குவதை ஒரு சாய்ஸாக எடுக்காமல் அதனை கட்டாயமாக பின்பற்றுவதை செய்யுங்கள்.
படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு பல் துலக்குவது துர்நாற்றத்தை சமாளிக்கவும், பற்காறையை தடுக்கவும் உதவும். மேலும், காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருக்க விரும்பினால் இரவில் பல் துலக்குவது அவசியம். இரவில் பல் துலக்குதல் பற்களுக்கு மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க, ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பல் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். அதோடு உங்கள் குழந்தைகளுக்கும் இந்தப் பழக்கத்தை பின்பற்ற சொல்லிக் கொடுங்கள்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry