சாப்பிடும் முறைக்கும் உடல் பருமனுக்கும் உள்ள தொடர்பு தெரியுமா? பேசிக்கொண்டே சாப்பிடுவதில் உள்ள ஆபத்து..!

0
66
Break bad eating habits! This article reveals the link between how you eat and weight gain, emphasising the risks of talking while eating and promoting mindful consumption.

மெதுவாகவும், முழு கவனத்தையும் உணவில் செலுத்தி உண்பதால் உடலில் உண்மையான மாற்றம் ஏற்படும் என்கிறது அறிவியல். உணவை வேகமாகச் சாப்பிடும் வழக்கமானது, செரிமானம் நடைபெறும் விதம், உணவில் திருப்தி அடைதல், எடை மேலாண்மை மற்றும் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என அனைத்திலும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

உணவை மெதுவாக மென்று உண்பதால், அது சிறிய துண்டுகளாக உடைந்து, செரிமானம் எளிதாக நடக்கிறது. வயிற்றில் பற்கள் இல்லாததால், உணவு பெரிய துண்டுகளாகச் செல்லும்போது, செரிமானம் மெதுவாகவும், குறைந்த செயல்திறனுடனும் நடைபெறும். உணவை நன்றாக் மென்று உண்ணும்போது, உமிழ்நீரில் செரிமானத்துக்கு உதவும் வேதியியல் கூறுகளின் உற்பத்தியைத் தூண்டுவதுடன், ஊட்டச்சத்துகள் உடலில் சிறப்பாக உறிஞ்சப்படவும் உதவுகிறது.

Also Read : இளநீருக்குள் தண்ணீர் எப்படி செல்கிறது தெரியுமா? 90 சதவிகிதம் பேருக்கு தெரியாத ரகசியம் இதுதான்!

உணவைச் சரியாக மென்று உண்ணவில்லை என்றால், அதைச் செரிக்க வயிறு அதிகமாக உழைக்க வேண்டும். இதனால் வயிறு வீங்குதல், மற்றும் மந்தமான செரிமானம் ஏற்படலாம். அதனால்தான் சிலர் உணவு உண்டு பல மணிநேரம் கழிந்த பின்னரும், வயிறு சற்று வீங்கியது போலவும், மந்தமாகவும் உணர்கிறார்கள்.

எத்தனை முறை மெல்ல வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவதைவிட, உணவை விழுங்குவதற்கு முன் அது மென்மையாகவும், எளிதாக செரிமானம் செய்யக்கூடிய நிலையை அடைந்துவிட்டதையும் உறுதி செய்வதே முக்கியம். சாப்பிடும்போது தொலைக்காட்சி பார்ப்பது, தொலைபேசியைப் பயன்படுத்துவது அல்லது பேசிக்கொண்டே சாப்பிடுவது போன்றவை நாம் உணவை மெல்லும் செயல்முறையைப் பாதிக்கக்கூடும். இதனால் நாம் வேகமாகச் சாப்பிடுவதுடன், அதிகமான காற்றையும் விழுங்க நேரிடும். இது வயிறு வீக்கத்துக்கான முக்கியக் காரணமாகிறது.

Learn about the connection between obesity and how you eat. Find out why talking during meals is harmful and how it can sabotage your weight loss efforts.

நாம் உணவை மெல்லும் வேகத்தைப் பொறுத்து, செரிமானம் மற்றும் எடை அதிகரிப்பு தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். விரைவாக உணவை உட்கொள்வதால், உடலுக்குள் ஆற்றல் அதிக வேகத்தில் செல்லும். இதனால் ஒரு நிமிடத்திற்குள் நாம் அதிக கலோரிகளை உட்கொள்கிறோம். இந்தச் சூழ்நிலை, நாம் தேவைக்கு அதிகமாகச் சாப்பிடுவதை மேலும் எளிதாக்குகிறது” என ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

மெதுவாகச் சாப்பிடுவதால், உணவு வாயில் இருக்கும் நேரம் நீடிக்கிறது. இது செரிமானத்தின் தொடக்க நிலைச் செயற்பாடுகளையும், ஹார்மோன் வெளியீட்டைத் தூண்டும் சமிக்ஞைகளையும் மேம்படுத்துகிறது. திருப்தியாகச் சாப்பிட்டு விட்டோம் என்ற மனநிறைவு பெறுவதற்குத் தேவையான ஹார்மோன்களை வெளியிட மூளைக்குச் சில நிமிடங்கள் தேவைப்படும்.

அதனால், மிக வேகமாக உண்பவர்கள், உண்மையாகத் தேவைப்படும் அளவைவிட அதிகமாக உண்ணத் தொடங்குவர். ஏனெனில், அவர்களது வயிறு நிறைந்துவிட்டதாக உடலுக்குத் தெரியப்படுத்தப் போதுமான நேரம் கிடைப்பதில்லை என்கிறார் சாண்டர். இதன் விளைவாக, அதிகமான கலோரிகள் உட்கொள்ளப்படுகின்றன. அவை இறுதியில் உடலில் சேமிக்கப்படும் கொழுப்பாக மாற்றப்படுகின்றன.

Also Read : நீங்கள் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? உணவு பாதுகாப்புத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

வேகமாக உண்பது, உணவு எதுக்களித்தல் எனப்படும் ஆசிட் ரிஃபெளக்ஸ் மற்றும் காஸ்ட்ரைடிஸ் போன்ற செரிமானப் பிரச்னைகளைத் தீவிரமாக்கும். உணவு பெரிய துண்டுகளாக குடலை அடையும்போது, அது குடல் நுண்ணுயிரிகளின் (பாக்டீரியாவின்) சமநிலையைச் சீர்குலைத்து, ஒட்டுமொத்த செரிமான அமைப்பையும் பாதிக்கும்.

வேகமாக உண்ணும் பழக்கத்துடன், மற்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களையும் தொடர்ச்சியாகக் கடைபிடித்தால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும். இது, டைப் 2 நீரிழிவு நோய், கல்லீரலில் கொழுப்பு படிவது, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற வளர்சிதை மாற்றச் சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், பெருங்குடல், மார்பகம் மற்றும் கணைய புற்றுநோய் போன்ற சில வகையான புற்றுநோய்களின் அபாயமும் அதிகரிக்கக்கூடும்.

Is your eating style contributing to your weight? Explore the relationship between eating habits and obesity, focusing on the dangers of distracted eating like talking.

உணவை மெதுவாக சாப்பிட உதவும் டிப்ஸ்

  • ஒவ்வொரு முறை உணவை விழுங்கிய பின்னரும், சிறிது இடைவெளி எடுத்து உண்ண வேண்டும்.
  • முட்கரண்டி அல்லது கரண்டியை முழு நேரமும் பிடித்துக் கொள்ளாதீர்கள். ஏனென்றால் அது உங்களை அறியாமலேயே உங்களை மிக வேகமாகச் சாப்பிட வைக்கும்.
  • நீங்கள் உண்ட உணவு, உங்கள் வாய்க்குள் மென்மையான, கிட்டத்தட்ட மெல்லிய அமைப்பாக மாறும் வரை உணவை மெல்ல வேண்டும். அதுதான் நீங்கள் முழுமையாக மென்று சாப்பிடுவதை உறுதி செய்கிறது. மேலும் அது இயற்கையாகவே நீங்கள் உண்ணும் வேகத்தையும் குறைக்கிறது.
  • உணவு உண்ணும்போது கவனச் சிதறல்களைத் தவிர்ப்பதும் அவசியம். தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே அல்லது செல்போனை உபயோகித்துக் கொண்டே சாப்பிட்டால், நீங்கள் எவ்வளவு வேகமாகச் சாப்பிடுகிறீர்கள் என்பதைக் கண்காணிக்க முடியாமல் போகலாம்.
  • உண்ணும்போது அதிகமாகப் பேசாமல் இருக்க முயலுங்கள். உரையாடல்கள் உங்களைத் திசை திருப்பலாம், நீங்கள் அறியாமலே அதிகமாக உண்ண நேரிடலாம்.

Disclaimer: Please note that this article provides general information and should not be taken as medical advice. Consult a healthcare professional for personalized guidance on chewing and its impact on your health.

Image Source : Getty Images

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry