மா இலைகளில் கொட்டிக் கிடக்கும் மருத்துவ இரகசியங்கள்! படித்துப் பாருங்க, அசந்துபோவீங்க..!

0
82
Young mango leaves are often used in teas and traditional remedies. They are believed to help regulate blood sugar, lower blood pressure, and even possess anti-inflammatory properties.

கோடைக்காலம் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது முக்கனிகளில் ஒன்றான மாம்பழம் தான். மாம்பழங்கள் ஒரு பக்கம் என்றால், மா இலைகள் ஆன்மிகம் மட்டுமல்லாமல், மருத்துவத்திலும் பயன்படுகிறது. மா இலைகளும் உண்ணக்கூடியவைதான்.

இந்த இலைகள் ஆயுர்வேத மருத்துவத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகிறது. பாரம்பரிய சீன மருத்துவத்திலும் மா இலைகள் பயன்படுத்தப்பட்டது. மா இலை தேநீர் ஏராளமான நன்மைகளைத் தருகிறது. மா இலைகள் தெரிந்துகொள்வோம்.

Also Read : சாப்பிட்ட பிறகு டீ, காபி குடிப்பீங்களா? உடல் ஆரோக்கியத்தில் இந்த பழக்கம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா..?

மா இலைகளின் ஊட்டச்சத்துக்கள்

மா மரங்கள் ஆசியா, வங்கதேசம் மற்றும் மியான்மரை பூர்வீகமாகக் கொண்டது. மா இலைகள் ஒரு வளமான ஊட்டச்சத்தைக் கொண்டதாகும். இதில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு அவசியமானதாகும். மா இலைகளின் ஊட்டச்சத்து நன்மைகளைக் காணலாம்.

  • வைட்டமின் ஏ – ஆரோக்கியமான உறுப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது.
  • வைட்டமின் சி – உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது
  • வைட்டமின் ஈ – இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது
  • பொட்டாசியம் – உடலில் திரவ சமநிலையை பராமரிக்க உதவுகிறது
  • கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் – இவை இரண்டுமே எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

மேலும், வைட்டமின்கள் பி, இரும்பு, மக்னீசியம் மற்றும் நைட்ரஜன் போன்றவையும் உள்ளது. இதில் பாலிபினால்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.

மா இலைகளின் ஆரோக்கிய நன்மைகள்

வீக்கத்தை எதிர்த்துப் போராடும்

மா இலைகளில் உள்ள பாலிபினால்கள் மற்றும் டெர்பெனாய்டுகள் போன்ற சேர்மங்கள் நோயிலிருந்து பாதுகாக்கவும் உடலில் ஏற்படும் வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. இதில் டெர்பெனாய்டுகள் பார்வைக்கு முக்கியமானதாகும். மேலும் இது நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நமது உடல் செல்களை தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

அல்சருக்கு சிகிச்சையளிக்கலாம்

மா இலைகளின் பாலிபினால்கள், அதன் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக மா இலைகள் மற்றும் மா மரத்தின் பிற பகுதிகளும் வரலாற்று ரீதியாக வயிற்றுப் புண்கள் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. மேலும் இது குடல் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தூண்டுவதன் மூலம் செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது.

அசாதாரண கொழுப்பு அதிகரிப்பை தடுக்கும்

திசு செல்களில் கொழுப்பு சேருவதைத் தடுக்க மா இலைச் சாறு உதவுகிறது. இது வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் அறிகுறிகளை நிர்வகிக்கவும், கொழுப்பு அதிகரிப்பு, நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

சரும ஆரோக்கியம்

மா இலைச் சாறு சருமத்தின் வயதான அறிகுறிகளைக் குறைக்க பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் கொலோஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இந்த இலைகளில் உள்ள மாங்கிஃபெரின், அரிப்பு, வறண்ட திட்டுகளை ஏற்படுத்தும் ஒரு தோல் நோயான சொரியாசிஸை எதிர்த்துப் போராட உதவுகிறது.

Also Read : உங்கள் சிறுநீரகங்களை பாதிக்கக்கூடிய 6 வகை மருந்துகள் – கவனமாக இருங்கள்!

முடி வளர்ச்சி

மா இலைகளில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் முடி நுண்ணறைகள் சேதமடையாமல் பாதுகாக்கிறது. இந்த இலைகளில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இவை அனைத்துமே முடி வளர்ச்சிக்கு ஏற்றதாகும். இவை முன்கூட்டியே முடி நரைப்பதைத் தடுக்கவும் உதவுகிறது.

மா இலைகளின் பல்வேறு பயன்பாடுகள்

மா இலைகள் தூள், சாறு மற்றும் சப்ளிமெண்ட் என பரவலாகக் கிடைக்கும். மா இலையைப் பொடியாகச் செய்து பயன்படுத்தலாம். மா இலைகளை புதிதாகவோ அல்லது உலர்த்தியோ, தேநீராகவோ, பானமாகவோ உட்கொள்ளலாம். இது பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவும் என்பதால், புதிய இலைகளைக் குளியல் தொட்டிகளில் பயன்படுத்தலாம்.

முன்னெச்சரிக்கை

மா இலைகளை எடுத்துக் கொள்ளும் முன்பாக ஒரு மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக மா இலைப் பொருட்கள் மனித நுகர்வுக்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எனினும் மா இலையை எந்த வடிவில் எந்த அளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான அறிவுரையை பெற வேண்டும்.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry