
சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காமல், வசதிக்காகவே பலரும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளை (Ultra-Processed Foods – UPFs) உட்கொள்வது அதிகரித்துவிட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். UPF உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் நாள்பட்ட நோய்களின் அபாயத்தை 60% வரை குறைக்க முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
Also Read : சமைத்த உணவுகளை ஃப்ரிட்ஜில் வைத்துச் சூடுபடுத்தி சாப்பிடுவதால் ஆபத்தா? செய்யக் கூடாதவை என்ன தெரியுமா?
பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்றால் என்ன?
அதிகமாக அல்லது தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள் (UPF) என்பது தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள். இவற்றில் செயற்கை சேர்க்கைகள் மற்றும் வீட்டில் சமைக்கும்போது பயன்படுத்தாத பல பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நொறுக்குத் தீனிகள், குளிர்பானங்கள், உடனடி உணவு வகைகள் மற்றும் சில வகை ரொட்டி, பால் பொருட்கள் கூட UPF வகையைச் சேர்ந்தவைதான். இவை “அதிகம் உட்கொள்ளத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன”. மேலும், இவை அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்புகள்(unhealthy fats) மற்றும் பாதுகாக்கும் ரசாயனங்கள் (preservatives) நிறைந்துள்ளன.
UPF-க்கும் நோய்களுக்கும் உள்ள தொடர்பு
UPF நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் இதய நோய், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் சில வகை புற்றுநோய்கள் உள்பட பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. “புகைப்பழக்கத்தை விட நவீன உணவுமுறை ஆபத்தானது” என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உணவுப்பழக்கமே உலகளவில் அகால மரணத்திற்கான முக்கிய காரணமாக உள்ளது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read : புற்றுநோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த 8 சிறந்த உணவுகள் – இப்போதே உங்கள் உணவில் சேர்க்கத் தொடங்குங்கள்!
60% நோய்களைத் தடுக்கலாம்
தீவிரமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம் நாள்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கலாம். மோசமான உணவுப் பழக்கமே உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணம். மன அழுத்தம், பதற்றம் போன்ற மனநல பாதிப்புகளும் இதனால் ஏற்படுகின்றன.
உணவு நிறுவனங்களின் பங்கு
உலக அளவில் மக்கள் எடுத்துக்கொள்ளும் கலோரிகளின் சதவிகிதத்தில் 75% ஆறு பெரிய நிறுவனங்களிடமிருந்துதான் வருகின்றன. இந்த நிறுவனங்கள் மக்களின் ஆரோக்கியத்தை விட லாபத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றன. அதனால், அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உற்பத்தி செய்து சந்தையில் விற்பனை செய்கின்றன. இந்த முறையை மாற்றுவது உலகளாவிய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

ஆரோக்கியமான மாற்றுகள்
பழைய, பதப்படுத்தப்படாத உணவுகளுக்கு மாறுவது சிறந்த ஆரோக்கியத்தை தரும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள், புரதச்சத்து நிறைந்த உணவுகள் – குறிப்பாக மத்திய தரைக்கடல் உணவு (Mediterranean Diet) போன்றவை உடலின் வீக்கத்தைக் குறைத்து, இதய பிரச்சினைகள் மற்றும் டைப் 2 நீரிழிவு போன்ற நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
மத்திய தரைக்கடல் உணவின் நன்மைகள்
* எடை இழப்பு: நார்ச்சத்து அதிகம் உள்ளதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.
* இதய ஆரோக்கியம்: கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.
* நீரிழிவு மேலாண்மை: இரத்த சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது.
* புற்றுநோய் தடுப்பு: சில வகை புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
எப்படி உணவுகளைத் தேர்ந்தெடுப்பது?
* காலை உணவு: தயிர், பெர்ரி பழங்கள், கொட்டைகள் அல்லது வெண்ணெய் டோஸ்ட்.
* மதிய உணவு: குயினோவா கலவை அல்லது கீரை சாலட்.
* இரவு உணவு: காய்கறிகளுடன் மீன் அல்லது காய்கறி லசான்யா.
* நொறுக்குத் தீனிகள்: புதிய பழங்கள், கொட்டைகள் அல்லது காய்கறி துண்டுகள்.
Also Read : இரத்த சர்க்கரையை குறைக்கும் ஸ்வீட்டான 5 உணவுகள்! சுகர் பேஷன்ட் சாப்பிடவே கூடாத உணவுகள் லிஸ்ட்!
விழிப்புணர்வு அவசியம்
UPF என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். பிளாஸ்டிக் உறையில் அடைக்கப்பட்டும், புரியாத பொருட்கள் சேர்க்கப்பட்டும் இருந்தால், அது UPF ஆக இருக்க வாய்ப்புள்ளது. ஊட்டச் சத்துக்கள் நீங்கி, அதிகளவு இரசாயனப் பொருட்கள் சேர்த்து, மூலப்பொருளின் குணங்கள் முழுவதுமாக மாற்றப்படுவதால் மெட்டபாலிசம், ஜீரணம் உள்ளிட்ட உடலின் எல்லா செயல்பாடுகளிலும் குறையேற்படும் அபாயம் உண்டாகிறது.
ஒபிஸிட்டி, டைப் 2 நீரிழிவு நோய், இரத்த நாளங்களில் கோளாறு ஆகிய நோய்கள் தோன்றவும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகள் வழிவகுக்கின்றன. எனவே, இப்படி அதிகமாகப் பதப்படுத்தப்படும் உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தைக் குறைத்து எப்பொழுதும் ஃபிரஷ்ஷான உணவுகளை உண்பதை வழக்கமாக்கிக் கொண்டால் நம் உடல் நல்ல ஆரோக்கியம் பெறும்.
UPF உணவுகளைக் குறைப்பது தனிப்பட்ட ஆரோக்கியத்திற்கான தேர்வு மட்டுமல்ல, சமூகத்திற்கானதும் கூட. ஏழ்மையைக் குறைத்து, புதிய, பதப்படுத்தப்படாத உணவுகளை அணுகுவதை எளிதாக்குவதன் மூலம் உணவு தொடர்பான நோய்களைக் குறைக்கலாம். என்ன சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் செலுத்தி ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
அதிகம் பதப்படுத்தப்படும் உணவுகளில் சில..!
பதப்படுத்திய இறைச்சி வகைகள், இனிப்பூட்டிய செரியல், தானிய கட்டிகள், உடனடியாக அருந்தும் சூப்கள், சர்க்கரைச் சத்து மிகுந்த குளிர்பானங்கள், சிக்கன் இறைச்சித் துண்டுகள், கேக், சாக்லெட், ஐஸ்கிரீம், பேக் செய்யப்பட்ட கேக்குகள் மற்றும் பிஸ்கட்டுகள், அதிக அளவில் தயாரிக்கப்பட்ட ரொட்டி, பீஸ் பிஸா , போன்ற “சாப்பிடுவதற்குத் தயாராக” உள்ள உணவுகள், மதிய உணவுக்கு மாற்றான பானங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருட்கள்:
புரோப்பிலீன் கிளைகோல் (Propylene Glycol), குவார் கம், ஜெலட்டின்: ஈரப்பதத்தை தக்கவைக்கவும், குழம்பாக்கிகளாவும் பயன்படுகிறது. மேலும், எண்ணெய், சேக்ரின், சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம், சர்க்கரை, உப்பு, கொழுப்பு, நிறமூட்டிகள், சுவையூட்டிகள் சேர்க்கப்படும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry