இதய அறுவை சிகிச்சை நிபுணரின் பகீர் எச்சரிக்கை: ‘இந்த 4 உணவுகள் விஷம்’ – கட்டாயம் தவிர்க்க வேண்டும்!

0
132
Want a healthier heart and body? Discover the 4 "poisonous" foods a heart surgeon strongly advises against, and learn how to make mindful dietary choices for a longer life. Getty Image.

நாம் தினமும் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்கள் நமது உடல் நலனை நேரடியாகப் பாதிக்கின்றன. இந்த நிலையில், டிக்டாக் மூலம் பிரபலமான இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி லண்டன், உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு கட்டாயம் தவிர்க்க வேண்டிய 4 வகையான உணவுகள் மற்றும் பானங்கள் குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அவரது இந்த எச்சரிக்கை தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ’தி ஹார்ட்டி சோல்’ இணைய இதழில் வெளியான கட்டுரையின் தமிழாக்கத்தை பார்ப்போம்.

Dr. Jeremy London, MD is a board certified cardiothoracic surgeon with over 25 years of clinical experience.

1. துரித உணவுகள் (Fast Food): சுவையானது, ஆனால் ஆபத்தானது!

டாக்டர் லண்டன் முதலில் குறிப்பிடுவது துரித உணவுகளைத்தான். துரித உணவுகள் அதிக கலோரிகள் கொண்டவை மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளவை என்பது நாம் அறிந்ததே. 2017 ஆம் ஆண்டு அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் லைஃப்ஸ்டைல் மெடிசின் (American Journal of Lifestyle Medicine) இதழில் வெளியான ஒரு கட்டுரையின்படி, துரித உணவுகளில் பொதுவாக ரசாயனங்கள், செயற்கை பொருட்கள், கூடுதல் கார்ன் சிரப், சர்க்கரை, செயற்கை இனிப்பூட்டிகள், உப்பு மற்றும் செயற்கை நிறமிகள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடல் நலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பவை. எனவே துரித உணவுகள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

A leading heart surgeon reveals 4 types of foods and drinks you should always avoid to prevent “poisoning” your body and ensure optimal health. Pixabay.

2. குளிர்பானங்கள் (Soft Drinks): திரவ மரணம்(Liquid Death)!

டாக்டர் லண்டன், சாதாரண மற்றும் டயட் சோடாக்களை “திரவ மரணம்” என்று குறிப்பிடுகிறார். குளிர்பானங்களில் அதிக சர்க்கரை சேர்க்கப்படும். இது உடல் பருமன், இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு இல்லாமை மற்றும் நீரிழிவு போன்ற பல உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையது. UCLA ஹெல்த் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஒரு நாளைக்கு ஒரு சோடா குடிப்பது கூட டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும்.

மேலும், ஆரோக்கியமான மாற்றாக விளம்பரப்படுத்தப்படும் டயட் சோடாக்கள் கூட பசியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தைக் சீர்குலைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது சாதாரண சோடாக்களால் ஏற்படும் உடல்நலக் கேடுகளுக்கு ஒத்த பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு குளிர்பானங்களை முழுமையாகத் தவிர்ப்பது நல்லது.

Also Read : இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்..! வயிற்றுப் பிரச்சனைக்கும் ‘குட் பை’ சொல்லுங்க!

3. பால் பொருட்கள் (Milk Products): நீங்கள் நினைப்பது போல் ஆரோக்கியமானதல்ல!

பால் மற்றும் பால் பொருட்களை உட்கொள்வது மற்றொரு சர்ச்சைக்குரிய விஷயம். டாக்டர் லண்டன், மனிதர்கள் மட்டுமே குழந்தைப்பருவத்திற்குப் பிறகும், மற்ற உயிரினங்களிடமிருந்தும் பால் அருந்தும் ஒரே பாலூட்டி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்கிறார். (இதே கருத்தைத்தான் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.எம். ஹெக்டேவும் பல ஆண்டுகளாக கூறிவருகிறார்)

பொறுப்புள்ள மருத்துவக் குழு (Physicians Committee for Responsible Medicine) குறிப்பிடுவதன் படி, பால் பொருட்கள் அமெரிக்க உணவுமுறையில் நிறைவுற்ற கொழுப்பின் முக்கிய ஆதாரமாக உள்ளன. இது இதய நோய், டைப் 2 நீரிழிவு மற்றும் அல்சைமர் நோய்க்கு பங்களிக்கிறது.

கொழுப்பு இல்லாத அல்லது குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் அவற்றின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தால் நன்மை பயக்கும் என்று சில ஆய்வுகள் கூறினாலும், பாலின் ஆரோக்கியத் தாக்கங்களை முழுமையாகப் புரிந்துகொள்ள இன்னும் அதிகமான ஆராய்ச்சி தேவை. இதய அறுவை சிகிச்சை நிபுணரின் கூற்றுப்படி, பால் பொருட்களைக் கட்டுப்படுத்துவது அல்லது முற்றிலும் தவிர்ப்பது பாதுகாப்பான அணுகுமுறையாக இருக்கலாம்.

Shutterstock.

4. ஆல்கஹால் (Alcohol): உடலுக்கு விஷம்!

கடைசியாக, டாக்டர் லண்டன் ஆல்கஹால் உட்கொள்வது குறித்துப் பேசுகிறார். அவர் அதை “நமது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களையும் முற்றிலும் நச்சுத்தன்மையாக மாற்றும்” என்று கூறுகிறார். உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆல்கஹாலை குரூப் 1 கார்சினோஜென் (Group 1 carcinogen) என்று வகைப்படுத்துகிறது. புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் இது உள்ளடக்கியது. மிதமான அல்லது எப்போதாவது ஆல்கஹால் பயன்படுத்துவது கூட தீங்கு விளைவிக்கும், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

உணவியல் நிபுணர் நிகோல் ஆண்ட்ரூஸ் மற்றும் டாக்டர் வக்காஸ் டாய் போன்ற புற்றுநோயியல் நிபுணர்களும் ஆல்கஹால் உடலுக்கு குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்கும் என்பதால் அதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று திட்டவட்டமாக கூறுகின்றனர்.

Also Read : உங்க இதயம் ஆரோக்கியமாக இருக்குதா? வீட்டிலேயே இந்த சோதனைகளை செய்து பாருங்க!

முடிவுரை:

இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜெர்மி லண்டனின் இந்த பரிந்துரைகள், இதய ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் பேணுவதில் உணவுத் தேர்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. துரித உணவுகள், குளிர்பானங்கள், பால் பொருட்கள் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை ஒருவரின் உணவுமுறையிலிருந்து முழுமையாக நீக்குவது சவாலாக இருந்தாலும், அவ்வாறு செய்வது குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகளைத் தரும்.

Credit: Shutterstock

காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் மற்றும் பீன்ஸ் நிறைந்த உணவில் கவனம் செலுத்துவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்தவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும். கவனமான உணவுத் தேர்வுகளை மேற்கொள்வதன் மூலம், இந்த தீங்கு விளைவிக்கும் உணவுகள் மற்றும் பானங்களுடன் தொடர்புடைய ஆபத்துகள் இல்லாத நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை நோக்கி நாம் செயல்பட முடியும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry