உங்கள் ஆயுளைக் கணிக்கும் இரத்தப் பரிசோதனை! முதுமை எப்படி இருக்கும் என்பதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்ளலாம்!

0
55
Can a simple blood test predict your lifespan? Explore the new study on Intrinsic Capacity (IC) and DNA methylation. Understand its implications for healthy aging. Image credit: Santi Nuñez/Stocksy.

மனித வாழ்வில் முதுமை என்பது தவிர்க்க முடியாத கட்டம். ஆனால் அந்த முதுமை ஆரோக்கியமாக இருக்குமா அல்லது நோய்கள் நிறைந்தவையாக இருக்குமா என்பதை முன்கூட்டியே அறிவது சாத்தியமாகியுள்ளது. உடலும், மனதும் வயதாகும் பொழுது என்ன நிலைக்கு செல்லும் என்பதை கணிக்க முடியும் என்றால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்? ஆம், தற்போதைய அறிவியல் வளர்ச்சி இது சாத்தியம் என நிரூபித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் (WHO) ஒரு நபரின் உடல் மற்றும் மனநலத்தின் ஒருங்கிணைந்த திறனையே “உள்ளார்ந்த திறன்” (Intrinsic Capacity – IC) என்று குறிப்பிடுகிறது. இதில் நினைவாற்றல், சிந்தனை, பார்வை, கேள்வி, நடக்கும் திறன் போன்றவை அடங்கும். வயதானவர்களுக்கு இந்த திறன் நாளடைவில் குறையத் தொடங்கும். இந்தக் குறைபாடுகள் ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படுமானால், அவற்றை திருத்துவதும், சரியான வழிகாட்டலுடன் முன்னேறவும் வழி இருக்கிறது. உடல்நலத்தை பராமரிக்க சில வழிகளை கடைப்பிடிப்பதன் மூலம் இந்த திறனைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம்.

Also Read : இந்த இரத்த வகை உடையவர்கள் இளமையாகவே இருப்பார்களாம்! உங்க பிளட் குரூப் அதுதானான்னு செக் பண்ணுங்க..!

பழைய முறைகளில் இந்த திறனை மதிப்பீடு செய்ய நிபுணர்களும், மருத்துவ உபகரணங்களும் தேவைப்பட்டன. ஆனால், தற்போது DNA மெத்திலேஷன் (DNA methylation) எனும் முறையில், இரத்தம் அல்லது உமிழ்நீர் மாதிரியின் அடிப்படையில் DNA-வில் நிகழும் சிறிய மாற்றங்களை வைத்து இந்த திறனை மதிப்பீடு செய்யலாம். இதை DNAm IC (DNA methylation-based Intrinsic Capacity) என்று அழைக்கிறார்கள். இதை வைத்து உங்கள் உடல் எப்படி முதுமையை எதிர்கொள்கிறது என்பதைக் கணிக்கிறது.இந்த முறையை “Nature Aging” என்ற அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளனர்.

இந்த சோதனை மூலம் உங்கள் உடலின் உள்ளார்ந்த திறனை மட்டும் இல்லாமல், எதிர்காலத்தில் நீங்கள் எவ்வாறு முதுமையை எதிர்கொள்வீர்கள் என்பதையும் கணிக்க முடிகிறது. DNAm IC மதிப்புகள் அதிகமாக இருந்தால், அந்த நபர்கள் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இது சாதாரண சோதனைகளுக்கு மாறாக, மிக நுணுக்கமான தகவல்களை தரக்கூடியது. குறிப்பாக:

* உங்கள் நடையின் வேகம் என்ன?
* நுரையீரல் நன்றாக இயங்குகிறதா?
* நினைவாற்றல் எவ்வளவு உறுதி வாய்ந்தது?
* நோய்கள் எதிர்க்கும் சக்தி இருக்கிறதா?

இவ்வாறு உங்கள் உடல், முதுமை காலத்தில் சோர்ந்து விடுமா அல்லது உற்சாகமாக இயங்குமா என்பதை DNAm IC சோதனை முன்பே கணிக்கிறது. இந்த மதிப்புகளில் குறைவாக உள்ளவர்களை விட அதிக மதிப்புள்ளவர்கள் சராசரியாக 5.5 ஆண்டுகள் கூடுதலாக வாழ்ந்தனர்.

Also Read : உங்க இதயம் ஆரோக்கியமாக இருக்குதா? வீட்டிலேயே இந்த சோதனைகளை செய்து பாருங்க!

இதைப் படித்து நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்கலாம். உங்களது DNAm IC மதிப்பை நேரடியாக தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும், அதை மேம்படுத்த நாம் எடுக்கும் வாழ்வியல் மாற்றங்கள் மிகவும் முக்கியமானவை: இந்த DNAm IC மதிப்பை மேம்படுத்த சில வழிகள் இருக்கின்றன.

* உணவில் மாற்றம்: மீன், முட்டை, பழங்கள், காய்கறிகள், முழுதானியங்கள் ஆகியவை உடலை வலுப்படுத்தும்.
* உடற்பயிற்சி: நடக்க, யோகா, நீச்சல், எளிய உடற்பயிற்சி ஆகியவை மிகச்சிறந்த தேர்வுகள்.
* மனநல பராமரிப்பு: மன அழுத்தம் குறைக்கும் செயல்கள் – தியானம், பாடல் கேட்கல், சமூக உறவுகளை பேணுதல்.
* தூக்கம் மற்றும் ஓய்வு: சரியான தூக்க நேரம் மற்றும் ஓய்வு உடலுக்கு அவசியம்.

இந்த புதிய விஞ்ஞான அறிவு நமக்கென்ன சொல்கிறது என்றால், “நம் முதுமையை நாமே கட்டுப்படுத்தலாம்” என்பதே. நமது DNA பேசத் தொடங்கும் முன்பே, நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும். DNAm IC போன்ற தொழில்நுட்பம் நமக்கு வழிகாட்டும் ஒளியாக இருக்கலாம். ஆனால் அதை பயனுள்ளதாக்குவது நம் வாழ்நெறிகள்தான்.

இந்த DNAm IC பரிசோதனை, இரத்தம் அல்லது உமிழ்நீர் மாதிரி மூலம் மேற்கொள்ள முடியும் என்பதால், இது விரைவில் மருத்துவமுறையில் முக்கிய கருவியாக மாறும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். உங்கள் உடலின் உள்ளார்ந்த திறனை பராமரிப்பது, நீண்ட ஆயுளுக்கும், ஆரோக்கியமான முதுமைக்கு வழிவகுக்கும்.

Source : Medical News Today

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry