
“2026-ல் கோட்டையில் கொடியேற்றுவது எடப்பாடியார் தான்!” என்ற ஒற்றை இலக்கோடு, அதிமுக தலைமை அலுவலகமான ‘புரட்சித்தலைவி அம்மா மாளிகை’ விழாக்கோலம் பூண்டுள்ளது. டிசம்பர் 15 தொடங்கி நடைபெற்று வரும் விருப்பமனு விநியோகத்தில், மூன்றாம் நாளான இன்றும் தொண்டர்களும் நிர்வாகிகளும் கட்டுக்கடங்காத உற்சாகத்துடன் குவிந்து வருகின்றனர்.
கட்சியின் மூத்த தூண்களான கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நேற்று முன்தினம் இந்தத் தேர்தல் திருவிழா எழுச்சியுடன் தொடங்கியது.
எடப்பாடியாருக்காகக் குவிந்த மனுக்கள்: சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பெரும்பாலான நிர்வாகிகள் தங்கள் தொகுதியில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களே போட்டியிட வேண்டும் என அவர் பெயரில் விருப்பமனுக்களைப் போட்டி போட்டுக்கொண்டு தாக்கல் செய்து வருகின்றனர்.
வேளச்சேரி & மயிலாப்பூர் அதிரடி: தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி எம்.கே. அசோக், வேளச்சேரி மற்றும் மயிலாப்பூர் தொகுதிகளில் எடப்பாடியாருக்காகவும், வேளச்சேரி தொகுதிக்கு தனக்காகவும் மனுத்தாக்கல் செய்து களத்தை சூடாக்கியுள்ளார். வேளச்சேரி தொகுதியில் கழகத்தின் வெற்றிக் கொடியை ஏற்றும் முனைப்போடு நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். மயிலாப்பூர் மத்திய பகுதி செயலாளரும், பிரபல தொழிலதிபருமான பி. கணேஷ்பாபு, மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட திரளான தொண்டர்கள் புடைசூழ தனது விருப்பமனுவைத் தாக்கல் செய்தார்.


வேட்பாளர்களுக்கு அக்னிப் பரீட்சைகள்:
வெறுமனே மனு கொடுத்தால் போதாது! கட்சிக்காகச் சிறை சென்றது முதல், மொழித்திறன் மற்றும் சமூகப் பின்புலம் வரை பல அதிரடி கேள்விகள் மூலம் வேட்பாளர்களைச் சல்லடை போட்டுத் தூக்கத் தயாராகிவிட்டது அதிமுக தலைமை. டிசம்பர் 23 வரை இந்த விருப்பமனுத் திருவிழா நடைபெற உள்ளது.
Subscribe to our channels on YouTube & Telegram &
Tamilnadu &
Pondicherry
