மத்திய கைலாஷ் மேம்பால ஊழல்: அன்புமணி ராமதாஸ் எழுப்பும் 4 முக்கிய கேள்விகள்!

0
21
Madhya-kailash-bridge-corruption-anbumani-ramadoss
PMK leader Anbumani Ramadoss raises serious concerns over the poor construction quality and alleged corruption in the newly opened ₹60.68 crore L-shape flyover at Chennai Madhya Kailash. Read more about the structural risks and the demand for a high-level probe.

லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் மேம்பாலத்தைக் கூட தரமற்ற வகையில் ஊழல் திமுக அரசு கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவு அறிக்கையின் முழு விவரம்:

பாலத்தின் தற்போதைய நிலை மற்றும் அச்சம்

* தரம் குறித்த கேள்வி: சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் இரு வாரங்களுக்கு முன் திறக்கப்பட்ட ‘எல்’ (L) வடிவ மேம்பாலத்தின் தரம் குறித்து நான் ஏற்கனவே வினா எழுப்பியிருந்தேன்.
* வாகன ஓட்டிகள் தவிர்ப்பு: தற்போது பாலத்தின் தரம் குறித்த அச்சம் அதிகரித்து, அப்பாலத்தில் பயணம் செய்வதையே வாகன ஓட்டிகள் தவிர்க்கும் நிலை உருவாகியுள்ளது. லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் மேம்பாலத்தைக் கூட தரமற்ற முறையில் ஊழல் திமுக அரசு கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது.

பாலத்தின் விபரங்கள்

* அமைப்பு: மத்திய பிளாஸ்டிக் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கி, ராஜீவ் காந்தி சாலை வரை மொத்தம் 652 மீட்டர் நீளத்திற்கு ‘எல்’ வடிவத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.
* செலவு: மொத்தம் ரூ.60.68 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தப் பாலத்தை கடந்த 15-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

கள ஆய்வு மற்றும் புகார்கள்

* மேடும் பள்ளமும்: கடந்த 18-ஆம் தேதி அந்த மேம்பாலத்தில் பயணம் செய்த போது, 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களைத் தூக்கிப் போடும் அளவுக்கு மேடும் பள்ளமுமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினேன். அது உண்மை என்பதை ஒட்டுமொத்த சென்னையும் ஒப்புக்கொண்டுள்ளது.
* ஆபத்தான வளைவு: எல் வளைவு மிகவும் குறுகலாக இருப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் நிலை தடுமாறி கீழே விழும் ஆபத்து இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
* தோல்வியடைந்த நோக்கம்: பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பாலத்தைத் தவிர்த்துவிட்டு கீழே சாலை வழியாகவே செல்வதால், இந்தப் பாலத்தின் நோக்கமே படுதோல்வி அடைந்து விட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

Is the New Chennai L-Shape Bridge Safe? Construction Defects Exposed,

தரம் குறைவதற்கான 4 முக்கிய காரணங்கள் (வல்லுநர்கள் கருத்து)

1. வலுவற்ற இரும்புக்கம்பிகள்: பாலத்தைத் தாங்குவதற்காகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புக் கம்பிகள் போதிய வலுவற்றவையாக இருக்கக்கூடும். இதனால் வாகனங்கள் செல்லும்போது அவை விலகி தூக்கிப் போடக்கூடும்.
2. தரமற்ற சிமெண்ட்: பொதுவாக பாலங்களுக்கு M90 கிரேடு அல்லது குறைந்தபட்சம் M50 கிரேடு கான்க்ரீட் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால், இங்கே M40 கிரேடு பயன்படுத்தப்பட்டதே பாலம் தரமற்றதாக இருக்கக் காரணமாக இருக்கலாம். இது பாலத்தை வலுவிழக்கச் செய்து, அடிப்பக்கத்தில் விரிசல்களையும் வெடிப்புகளையும் ஏற்படுத்தும்.
3. சமமற்ற கான்க்ரீட் பரப்பு: பாலத்தின் மேற்பரப்பில் கான்க்ரீட் கலவை சம அளவில் பரப்பப்படாததால் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டுள்ளன.
4. தூண்களில் ஏற்றத்தாழ்வு: பாலத்தைத் தாங்குவதற்காகக் கட்டப்பட்டுள்ள தூண்கள் ஏற்றத்தாழ்வுகளுடன் இருப்பது அதன் வலுவற்ற தன்மைக்கு நான்காவது காரணமாகக் கூறப்படுகிறது.

ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்கேடு

* துறைகளின் அவலம்: தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைத் துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
* தண்டராம்பட்டு பாலம்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே ரூ.15.90 கோடியில் கட்டப்பட்ட பாலம் மூன்றே மாதங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் இன்று வரை தண்டிக்கப்படவில்லை.
* ஒப்பந்த முறைகேடு: திருவான்மியூர் – உத்தண்டி உயர்மட்டச் சாலைப் பணியை ரூ.700 கோடி குறைவாகச் செய்ய முன்வந்த நிறுவனத்தை நிராகரித்துவிட்டு, ரூ.2,100 கோடியில் செய்வதாகக் கூறிய நிறுவனத்திற்கு திமுக அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளது. இதன் மூலம் நெடுஞ்சாலைத் துறையில் ஊழல் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

வலியுறுத்தல்

அனைத்து ஒப்பந்தப் பணிகளிலும் நடைபெறும் ஊழலை விட, இந்த எல் வடிவ மேம்பாலத்தில் கூடுதலாக ஊழல் நடந்ததன் விளைவே தரம் இவ்வளவு மோசமானதற்கு காரணம். இதன் பின்னணியில் உள்ள ஊழல்கள் வெளிக்கொண்டு வரப்பட்டு, காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பால ஊழல் குறித்து உயர்நிலை விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry