“சிலிண்டர் தட்டுப்பாட்டால் மூடுவிழா காணும் ஹோட்டல்கள்: சமையலறையைக் காக்க மத்திய அரசு ‘அதிரடி’ சட்டம்!”

0
13
lpg-cylinder-essential-commodities-act-news-tamil
To prevent LPG cylinder shortage amid the Middle East conflict, the Indian government has invoked the Essential Commodities Act 1955. Learn how this law prevents hoarding, regulates prices, and ensures steady gas supply despite global oil market volatility.

மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவில் எல்.பி.ஜி (LPG) சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க மத்திய அரசு 1955-ம் ஆண்டின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை (Essential Commodities Act) அமல்படுத்தியுள்ளது.

சர்வதேச சூழல்: போர் ஏன் எரிபொருளைப் பாதிக்கிறது?

தற்போது ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் காரணமாக மத்தியக் கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ளது.
* விநியோகச் சங்கிலி பாதிப்பு: உலக நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவில் பெரும்பகுதி இந்த நாடுகளிலிருந்துதான் வருகின்றன. போர் காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், உலக சந்தையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
* இந்தியாவின் முன்னெச்சரிக்கை: இந்தியா தனது எரிசக்தி தேவைக்கு இறக்குமதியை அதிகம் நம்பியிருப்பதால், உள்நாட்டில் தட்டுப்பாடு வராமல் தடுக்க அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தை கவசமாகப் பயன்படுத்துகிறது.

“மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் (Brent Crude) விலை ஒரே நாளில் $120 டாலரை நெருங்கியுள்ளது. இது கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத உச்சமாகும். இதனால் இந்தியா போன்ற இறக்குமதியை நம்பியிருக்கும் நாடுகளுக்கு எரிபொருள் வாங்குவதில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.”

“ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால், இந்தியா தனது எல்பிஜி இறக்குமதிக்கு 85% நம்பியிருக்கும் ஹார்மோஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிற்கு வரவேண்டிய எரிவாயு வரவில்லை.”

அலார்மிங் ரிப்போர்ட்:

இந்தத் தட்டுப்பாட்டின் முதல் பாதிப்பு வணிக ரீதியான எரிவாயுவில் (Commercial LPG) தெரியத் தொடங்கியுள்ளது. மும்பை, பெங்களூரு, சென்னை, டெல்லி போன்ற நகரங்களில் வர்த்தக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய சிலிண்டர் முன்பதிவுக்கு 21 நாள்கள் இடைவெளி இருக்கவேண்டும். இந்த இடைவெளியை மத்திய அரசு 25 நாள்களாக அதிகரித்து இருக்கிறது.

சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால், பெங்களூருவில் உள்ள 3,000-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் இன்று (மார்ச் 10) முதல் தங்கள் சமையலறை செயல்பாடுகளை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளன. இதே நிலை சென்னையிலும் நீடிப்பதால், ஐடி ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் உணவுத் தேவை கேள்விக்குறியாகியுள்ளது.”

இது குறித்து அகில இந்திய ஹோட்டல்கள் மற்றும் உணவக சங்கத்தின் தலைவர் விஜய் ஷெட்டி கூறுகையில், ”பற்றாக்குறை வேகமாக பரவி வருகிறது. விரைவில் ஹோட்டல் துறை முடக்கப்படக்கூடும். இந்த பற்றாக்குறை தொடர்ந்தால் மும்பையில் உள்ள அனைத்து உணவகங்களும் அடுத்த இரண்டு நாட்களில் மூடப்படும்” என்று தெரிவித்தார்.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் என்றால் என்ன?

இது மத்திய அரசு 1955-ல் உருவாக்கப்பட்ட ஒரு வலிமையான சட்டமாகும். பொதுமக்களுக்கு மிக அவசியமான பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையைக் கட்டுப்படுத்த இது அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

1. சமமான விநியோகம்: நாட்டின் மூலை முடுக்கெல்லாம் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்தல்.
2. விலைக் கட்டுப்பாடு: நியாயமான விலையில் மக்கள் சிலிண்டர்களைப் பெறுவதை உறுதி செய்வது.
3. பதுக்கல் தடுப்பு: செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதைத் தடுத்தல்.

அரசின் அதிகாரங்கள் என்னென்ன?

* இருப்பு வரம்பு (Stock Limit): ஒரு வணிகர் அல்லது நிறுவனம் எவ்வளவு சிலிண்டர்களை அல்லது எரிவாயுவை இருப்பு வைக்கலாம் என்பதை அரசே தீர்மானிக்கும்.
* விலை நிர்ணயம்: சர்க்கரை, சமையல் எண்ணெய் போல இனி எல்.பி.ஜி விலையையும், விநியோகத்தையும் இந்தச் சட்டத்தின் கீழ் அரசு இன்னும் கடுமையாக ஒழுங்குபடுத்தும்.
* மாநில அரசுகளுடன் ஒருங்கிணைப்பு: மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து எந்தப் பொருட்களைப் பட்டியலில் சேர்ப்பது அல்லது நீக்குவது என்பதை முடிவு செய்யும்.

விதிகளை மீறினால் என்ன நடக்கும்?

அரசின் உத்தரவை மீறி பதுக்கலில் ஈடுபட்டாலோ அல்லது விதிகளை மீறினாலோ கடும் தண்டனைகள் உண்டு:
* சிறைத்தண்டனை: 3 மாதங்கள் முதல் 7 ஆண்டுகள் வரை.
* பறிமுதல்: முறைகேடாக வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் மற்றும் அவற்றைக் கடத்தப் பயன்படுத்தப்படும் வாகனங்களைப் பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உண்டு.

முன்னுதாரணம்: உக்ரைன் போரும் ESMA-வும்

ஏற்கனவே உக்ரைன் போரின்போது, எரிபொருள் நிறுவனங்கள் அதிக லாபத்திற்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் ஆர்வம் காட்டின. அப்போது மத்திய அரசு ESMA (Essential Services Maintenance Act) விதிகளைப் பயன்படுத்தி, “முதலில் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யுங்கள், பிறகு ஏற்றுமதி செய்யுங்கள்” என்று நிறுவனங்களுக்குக் கடிவாளம் போட்டது. அதே போன்றதொரு பாதுகாப்பு நடவடிக்கையைத்தான் தற்போதும் மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், சர்வதேசப் போர்ச் சூழலால் சிலிண்டர் விலை எகிறாமலும், தட்டுப்பாடு ஏற்படாமலும் தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள ஒரு ‘தற்காப்பு நடவடிக்கை’ தான் இது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry