சமக்ர சிக்ஷா திட்டத்தில் பணியாற்றுவோருக்கு தமிழக அரசு ஊதியம் வழங்க வேண்டும்! முதலமைச்சருக்கு ஐபெட்டோ வலியுறுத்தல்!

0
279
Over 25,000 teaching and non-teaching staff associated with Samagra Shiksha (SS) scheme are staring at trouble as their September month salary has not been paid yet. AIFETO Annamalai demands Tamil Nadu govt to pay salaries to Samagra Shishya scheme employees.

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தேசியக் கல்விக் கொள்கை, விஸ்வகர்மா திட்டம், நீட் தேர்வு, பிஎம்ஸ்ரீ பள்ளி, எல்லாவற்றையும் எதிர்ப்பதோடு மட்டுமன்றி, WE REJECT NEP 2020 என கொள்கை ரீதியாக எதிர்த்து போராடி வருகிறோம்.

இருமொழிக் கொள்கையினை மட்டும்தான் ஏற்றுக்கொள்வது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். மத்திய நிதிஅமைச்சர் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்தபோது கூட தமிழ்நாடு என்ற பெயர் வராமல் பார்த்துக் கொண்டார்கள். தமிழக ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் இயக்கங்கள் அப்பொழுதே எதிர்ப்பினை தெரிவித்தோம். நிதி ஒதுக்கீட்டில் ஒருதலைபட்சமாக இன்று வரை நடந்து வருகிறார்கள்.

AIFETO Annamalai

தேசியக் கல்வி கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும்; பிஎம்ஸ்ரீ பள்ளிகளை தொடங்கிட வேண்டும்; மும்மொழிக் கொள்கை திட்டத்தை ஏற்றுக் கொண்டு ஹிந்தி கற்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் அந்த கொள்கைப் போரில் சமரசம் இல்லாமல் தாங்கள் உறுதியினைக் காட்டி வருகிறீர்கள்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கான நிதியினை விடுவிக்காமல் மோடி அரசு பழிவாங்கி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் நேரில் சென்று பாரதப் பிரதமரை சந்தித்து வலியுறுத்தியும், மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதியை ஒதுக்கீடு செய்தார்களே தவிர, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்திற்கான நிதியை அவர்கள் ஒதுக்கீடு செய்யவில்லை.

Also Read : கற்பனையில் மிதக்கும் தொடக்கக் கல்வித்துறை..! பள்ளி தொடங்கி மூன்று மாதங்களில் மாணவர்களுக்கு இவ்வளவு பெரிய சோதனையா..?

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தில் ஆசிரியர்கள் பணியாற்றினாலும், தமிழ்நாடு மாநில அரசின் கீழ் பள்ளிக்கல்வித் துறையில்தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இதுவரை வழங்கப்படாததால், அவர்கள் குடும்பம் நடத்துவதற்கும், தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும் பெரிய பாதிப்பிற்கு உள்ளாகி வருகிறார்கள்.

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், இயன்முறை மருத்துவர்கள், சிறப்பு பயிற்றுநர்கள், கணக்காளர்கள், தணிக்கை மேலாளர்கள், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் என 25000க்கும் மேற்பட்டவர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் கிடைப்பதற்கு ஆணை வழங்கி உதவிட வேண்டுமாய் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் முதலமைச்சரை பெரிதும் வேண்டுகிறோம்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry