
ஒவ்வொரு வீடுகளிலும் புளி ரசம், தக்காளி ரசம், மிளகு ரசம், கடுகு ரசம், தூதுவளை ரசம் என விதவிதமாக ரசம் வைத்து சாப்பிடுவோம். சீக்கிரம் சமைக்கும் ரெசிபி என்பதால் அவசர நேரத்தில் பெரும்பாலான வீடுகளில் அடிக்கடி ரசம் இடம் பெற்றிருக்கும்.
உடல் சோர்வு, காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் வந்தாலே முதலில் மாத்திரைகள் சாப்பிடுகிறோமோ? இல்லையோ? காரசாரமாக ரசம் வைத்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தான் தோன்றும். செரிமான பிரச்சனைக்கும் தீர்வு காணும் என்பதால் சில வீடுகளில் தினமும் ஒரு சிறிய பாத்திரத்தில் ரசம் வைப்பது வழக்கம்.
Also Read : வெண்டைக்காயின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்! Crispy Lady Finger Roast Recipe: Easy and Delicious!
ஒவ்வொரு அம்மாக்களும் ரசம் வைத்து அதை குழைந்த சாதத்தில் கரைத்துக் கொடுப்பார்கள். இதில் சேர்க்கப்படும் மிளகு, பூண்டு, சீரகம், போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி அதிளவில் இருப்பதால் உடலுக்கு ஆற்றலை அளிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. இந்த வரிசையில் இன்றைக்கு இந்த ரசத்தையே கொஞ்சம் வித்தியாசமான சுவையில் அதுவும் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல் கத்தரிக்காய் ரசம் எப்படி செய்வது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய் – 5 ( பிஞ்சு கத்தரிக்காயாக இருந்தால் சுவை இருக்கும்)
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1 கப்
- பச்சை மிளகாய் – 2
- உப்பு – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- வெல்லம் – 2 தேக்கரண்டி
- கொத்தமல்லி இலை
- புளி கரைசல் – அரை கப்
- எண்ணெய்- தேவையான அளவு
- கடுகு – அரை டீஸ்பூன்
- சீரகம்- அரை டீஸ்பூன்
- மிளகாய் வத்தல் – 2
- பெருங்காய தூள் – சிறிதளவு
- கறிவேப்பிலை – தாளிப்பிற்கு ஏற்ப.
Also Read : தள்ளுவண்டி கடை தண்ணி சட்னி! டிபன் பிரியர்களின் முதல் சாய்ஸ் இதுவாகத்தான் இருக்கும்!
செய்முறை:
கத்தரிக்காய் ரசம் செய்வதற்கு முதலில் கத்தரிக்காயை அடுப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். ஆறியவுடன் அதன் மேல் உள்ள தோலை நீக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு நைஸாக மசித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய மிளகாய், சிறிதளவு மஞ்சள் தூள், உப்பு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை, பொடியாக்கிய வெல்லம் போன்றவற்றை சேர்த்து கைகளால் நன்கு மசித்து விட வேண்டும். காரம், உப்பிற்கு அளவில்லை. உங்களின் சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளவும்.
இதையடுத்து எடுத்து வைத்துள்ள புளியை கரைத்து அந்த கரைசலை மசித்த கத்தரிக்காய் மசாலா கலவையுடன் கலந்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்த்து ரசம் வைக்கும் பதத்திற்கு கலந்துக் கொள்ளலாம்.
இறுதியாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, சீரகம், மிளகாய் வத்தல், சிறிதளவு பெருங்காய தூள் சேர்த்து வதக்கிக் கொண்டு புளி மற்றும் கத்தரிக்காய் கரைசலுடன் சேர்த்தால் போதும். சுவையான மற்றும் காரசாரமான ஆந்திர ஸ்பெஷல் கத்தரிக்காய் ரசம் ரெடி.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry