சாமிக்கு தேங்காய், வாழைப்பழம் படைப்பதன் பின்னணி! முன்னோர்கள் சும்மா சொல்லிட்டு போகலைங்க..!

0
81
Offering bananas and coconuts to God symbolizes purity, simplicity, and the nourishment of life. These fruits are seen as auspicious and are offered to express devotion and gratitude in many spiritual traditions.Pic Courtesy - Kalki.

பொதுவாக நாம் செய்யும் அனைத்து பூஜைகளிலும் கடவுளுக்கு வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், தேங்காய் போன்றவற்றை தவறாமல் படைப்பதுண்டு. மற்ற பழங்கள் பல இருக்கும்போது, அது ஏன்  குறிப்பாக வாழைப்பழமும், தேங்காயும்  கடவுளை  வழிபடும்போது  படைக்கப்படுகிறது என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?

கடவுள், பக்தி, பிரசாதம், கோவில் என்று ஆன்மிகமாக நாம் பார்க்கும் அனைத்துக்குள்ளும் நம் முன்னோர்கள் ஒரு அறிவியலை மறைத்து வைத்திருக்கிறார்கள். இந்த பூமியில் வாழ்வதற்கென்று ஏதாவது ஒரு காரணம் மற்றும் நோக்கம் இருக்குமல்லாவா? அதேபோல், அந்த கடவுளுக்கு படைக்கப்படும் படையலுக்குப் பின்னும் அறிவியல் மற்றும் ஆன்மிகம் சார்ந்த சில காரணங்கள் உள்ளன.

அந்த வகையில் கடவுள் வழிபாட்டில் வாழைப்பழம் மற்றும் தேங்காய் முக்கியமாக இடம்பெறுவதற்கும் சில காரணங்கள் உள்ளன. பொதுவாக, ஒரு பழத்தை உண்டபின், அதன் கொட்டையை எறிந்தாலோ அல்லது முழுமையாக அந்தப் பழத்தை வீசினாலோ அது மீண்டும் முளைத்துவிடும்.

Also Read : தினமும் நாக்கை சுத்தம் செய்வது அவசியமா? நாக்கை க்ளீன் பண்ணுவதால இவ்வளவு நன்மைகளா? Boost oral health by cleaning tongue!

ஆனால், வாழைமரத்தில் இருந்து புதிதாக வாழைக்கன்று தோன்றுமே தவிர, வாழைப்பழத்தை மண்ணில் வீசினாலோ அல்லது சாப்பிட்டு  விட்டு தோலை எறிந்தாலோ அது மீண்டும் முளைக்காது. இறைவா மீண்டும் பிறவாத நிலையைக் கொடு என வேண்டவே நாம் கடவுளுக்கு வாழைப்பழம் படைக்கிறோம். அதுபோல்தான், தேங்காயும். அதை கடவுளுக்கு உடைத்து படைத்தபின், நாம் சாப்பிட்டுவிட்டு அதன் ஓட்டை மண்ணில் வீசினால் அது மறுபடியும் முளைக்காது.

உரிக்காத முழுத் தேங்காயில் இருந்துதான் தென்னங்கன்று வரும். மா, பலா, கொய்யா இப்படி எந்த பழத்தை எடுத்துக்கொண்டாலும் அது ஒரு கொட்டையில் இருந்தே முளைக்கிறது. ஒரு மாம்பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு கொட்டையைப் போட்டால் அந்த விதையிலிருது மாமரம் உருவாகிறது. ஆனால் தேங்காயை சாப்பிட்டுவிட்டு ஓட்டைப்  போட்டால் அது முளைக்காது. தேங்காய், முக்கண்களைக் கொண்டிருப்பதால் ஆணவம், கன்மம், மாயைதனை உடைப்பது என்பதால்தான் தேங்காயை படைக்கிறோம் என்றும் சொல்வார்கள்.

Also Read : கர்ப்பிணிக்கான சிறந்த உணவுகள்: தாய்க்கும் குழந்தைக்குமான சத்தான தேர்வுகள்! Nutritious Food Guide for Pregnant Women!

எனவே தான், இந்த வாழைப்பழமும், தேங்காயும் பிறவி அடையாத முக்தி நிலையோடு ஒப்பிடப்பட்டு அவை கடவுளுக்கு படைக்கப்படுகின்றன. அதாவது,  நாம் இவற்றை கடவுளுக்கு படைத்து, முக்தி வேண்டும் என்று வேண்டும்போது, நமக்கு முக்தி கிடைக்கும் என்ற ஆன்மிக நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்கள் இவற்றை கடவுளுக்கு படைத்து வழிபடும் வழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அது மட்டுமல்ல தேங்காய், வாழைப்பழம் இரண்டும் நமது எச்சில் படாதவை.

மற்ற பழங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சீசனில் மட்டுமே அதிகமாக கிடைக்கக்கூடியவை. சீசன் அல்லாத நேரங்களில் அதன் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. ஆனால், வாழைப்பழம் அனைத்து சீசன்களிலும் மலிவாக கிடைக்கக்கூடியவை.மனிதர்களோ அல்லது பூமியில் உள்ள பிற உயிரினங்களோ மற்ற பழங்களை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையையோ அல்லது விதையையோ கீழே வீசும்போது அதிலிருந்து அவை மீண்டும் முளைக்க வாய்ப்புள்ளது. இதை எச்சில் பட்டது எனக் கருதி கடவுள் வழிபாட்டில் அவற்றிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆனால்,  வாழைப்பழமும், தேங்காயும் பிற உயிரினங்கள் சாப்பிட்டு வீணாக்கியத்திலிருந்து முளைப்பதில்லை. எனவே தான், அவை கடவுளுக்குப்  படையலாக படைக்கப்படுகின்றன. இவ்வாறு, ஒரு பழத்தின் முளைக்கும் தன்மையை முக்தி, தூய்மை, புனிதம் என்ற ஆன்மிக சிந்தனையோடும், காலநிலை, மக்களுக்கு எளிதாக, மலிவானதாக கிடைக்கக் கூடியவை  என்ற அறிவியலையும் மனதில் வைத்து வாழைப்பழத்தையும், தேங்காயையும் கடவுளுக்கு படைத்து வழிபடும் வழக்கத்தை நம் முன்னோர்கள் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

நமது பாவங்களை எண்ணி மனம் வருந்தி கடவுளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும். இதனால் நமது ஆன்மா தூய்மையாகித் துன்பங்கள் ஒழிந்து, மீண்டும் பிறக்காத நிலையை அடையலாம் என்பதே தேங்காய், வாழைப்பழம் நமக்கு உணர்த்தும் ரகசியம். எனவே, முன்னோர்கள் காரணம் இல்லாமல் தேங்காய் பழத்தை கடவுளுக்குப் படைக்கவில்லை என்பதை உணர்வோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry