தத்தளிக்கும் பெங்களூரு மக்கள்! கொள்ளை லாபம் பார்க்கும் தங்கும் விடுதிகள்! மழை நீடிக்கும் என எச்சரிக்கை!

0
188

வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், பெங்களூரில் செப்டம்பர் 10ம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூருவுக்கு அடுத்த 3 நாட்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேங்கிய மழை நீரே இன்னும் வடியாத நிலையில் இன்னும் மழை தொடரும் என்ற அறிவிப்பு பெங்களூருவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்த‌து. திங்கள்கிழமை இரவு 131.6 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவானது. 1947-ம் ஆண்டுக்கு பின் தற்போது 130 மில்லிமீட்டருக்கு மேல் மழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. அதிலும் எலக்ட்ரானிக் சிட்டி, ஒயிட் ஃபீல்ட், மாரத்தஹள்ளி, பொம்மனஹள்ளி, மகாதேவபுரா, சர்ஜாப்பூர் உள்ளிட்ட 80க்கும் மேற்பட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். கட்டில், டிவி, குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் நீரில் மூழ்கி நாசமாகின. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசம் அடைந்துள்ளன.

Also Read : காரின் பின் சீட்டில் அமர்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம்! தவறினால் ரூ.1000 அபராதம்!

வெள்ளத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான மக்களை தேசிய பேரிடர் மீட்பு படையினரும், கர்நாடக பேரிடர் மீட்பு குழுவினரும் ரப்பர் படகுகளின் மூலம் மீட்டு வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்புகள், சாலைகள் என எங்குப் பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், பேருந்து, ஜேசிபி, டிராக்டர் மூலம் ஊழியர்கள் அலுவலகத்துக்கு சென்ற வீடியோக்கள் வைரலாயின.

கனமழை காரணமாக ஆங்காங்கே மரங்கள், மின்கம்பங்கள்சாய்ந்த தால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் எலக்ட் ரானிக் சிட்டி, ஒயிட் ஃபீல்ட் போன்றஇடங்களில் குடிநீர் விநியோகமும் தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் பெங்களூருவில் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை வெள்ள நீர் கணிசமாக வடிந்ததால் ஒருசில பகுதிகளில் போக்குவரத்து சற்று இயல்புக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் இன்னும் மழை தொடரும் என்ற அறிவிப்பு பெங்களூருவாசிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

பெங்களூருவின் பல்வேறு பகுதிகளிலும் மின் தடை இன்னும் சீரமைக்கப்படவில்லை. குறிப்பாக வெள்ளம் அதிகம் சூழ்ந்துள்ள பகுதிகளில் மின் விநியோகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடை செய்யப்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் குடிநீர் விநியோகமும் தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் சில இடங்களில் மாநகராட்சியே போர்வெல் இயந்திரங்கள் கொண்டு சென்று சில பகுதிகளில் குடி தண்ணீர் விநியோகம் செய்து வருகிறது. டேங்கர்கள் மூலம் தண்ணீர் விநியோகமும் செய்யப்படுகிறது.

Also Watch : யார் அந்த 10 திமுக எம்.எல்.ஏக்கள்? தூக்க ரெடியான ஈபிஎஸ் | சசிகலாவை சேர்க்கவே முடியாது

தங்கும் விடுதிகள் கொள்ளை லாபம் பார்க்கத் தொடங்கிவிட்டன. ஐடி நிறுவனம் மற்றும் பெரும் பணக்காரர்கள் வாழும் பகுதிகளை சுற்றியிருக்கும் விடுதிகளில் வாடகையாக பெரும் தொகையை வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. 4 பேர் கொண்ட ஒரு குடும்பம் ஓரிரவு மட்டும் தங்க ரூ.42,000 வரை வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry