மெடிக்கல் இன்ஷுரன்ஸ் உங்களுக்கு மட்டுமானதல்ல…! செல்லப் பிராணிகளுக்கும் மருத்துவக் காப்பீடு எடுப்பது அவசியம்! Pet Insurance!

0
49
Insurance policies for your cats & dogs, coverage options and more | Pet insurance is suitable for pet owners who seek peace of mind, confident that their beloved animals are covered for medical expenses. Here are details on the policies on offer and what they cover.

செல்லப்பிராணிகள் (Pets) என்றாலே பலருக்கு மிகவும் பிரியம். ஏனெனில், அவை நம் வாழ்வில் விலைமதிக்க முடியாத பங்களிப்பை வழங்குகின்றன. நம்முடைய குடும்பங்களில் ஒருவராக, பாசமிகு உறுப்பினர்களாக, விளங்கும் செல்லப்பிராணிகளின் நலமும் ஆரோக்கியமும் நம்முடைய நலனுக்கு ஈடானதுதான். அதனால்தான் நாம் எப்போதும் அவற்றைப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க முயற்சி செய்கிறோம்.

செல்லப்பிராணிகள் நம் மீது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அளவு கடந்த அன்பை செலுத்தக்கூடியவை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் நம்முடைய அன்பும், அரவணைப்பும் தான். இப்படிப்பட்ட செல்லப் பிராணிகளின் ஆரோக்கியம் மற்றும் நலன் என்று வரும்போது நாம் ஒரு சில கூடுதல் முயற்சிகளை ஏன் எடுக்கக்கூடாது? அதற்கான சிறந்த ஆப்ஷன்தான் பெட் இன்சூரன்ஸ் (Pet Insurance).

செல்லப்பிராணிகளை வளர்ப்பது சாதாரண காரியம் அல்ல. அவைகளுக்கான தடுப்பூசிகள், உண்ணி சிகிச்சைகள், குடற்புழு நீக்கம், மெருகேற்றுதல் மற்றும் பிற பராமரிப்பு போன்றவை ஒரு வருடத்திற்கு ரூ.10,000 முதல் ரூ.54,000 வரை ஆகலாம். இதற்கான மருத்துவம் அல்லது அறுவை சிகிச்சை செலவுகளின் விலை அதிகமாக இருக்கும். பெட் இன்சூரன்ஸ் பாலிசியை நீங்கள் எடுத்துவிட்டால் எதிர்பாராத சூழ்நிலைகளில் உங்களுக்கு சிறந்த மருத்துவ மற்றும் சட்டரீதியான ஆதரவு கிடைக்கும்.

Also Read : அரசுப் பள்ளிகளை பலவீனப்படுத்த மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு பாராட்டு விழாவா? அண்ணாமலை சுளீர் கேள்வி!

பெட் இன்சூரன்ஸ் பெறுவதால் கிடைக்கும் பலன்கள்

உங்களுடைய செல்லப்பிராணிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டாலோ அதற்கான பொருளாதார பாதுகாப்பை பெட் இன்சூரன்ஸ் வழங்குகிறது. எதிர்பாராத சூழ்நிலையில் உங்களுடைய செல்லப்பிராணிக்கு விபத்து ஏற்பட்டால் அதற்கான பொருளாதார சுமையை இந்த பெட் இன்சூரன்ஸ் எடுத்துக் கொள்கிறது. உங்களுடைய செல்லப்பிராணி மூன்றாம் தரப்பினர்கள் அல்லது அவர்களுடைய சொத்துகளுக்கு ஏதேனும் சேதங்களை ஏற்படுத்தும் பட்சத்தில் அதற்கான காப்பீட்டையும் இந்த பெட் இன்சூரன்ஸ் மூலமாக நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.

உங்கள் செல்லப்பிராணியின் ஆரோக்கியத்தை பராமரிப்பதற்கு வழக்கமாக நீங்கள் செய்யக்கூடிய ஹெல்த் செக்கப் போன்றவற்றையும் இந்த பெட் இன்சூரன்ஸ் மூலமாக க்ளைம் செய்யலாம். செல்லப் பிராணிகளுக்கான விலை உயர்ந்த சிறப்பு மற்றும் நவீன சிகிச்சைகள் போன்றவற்றிற்கான காப்பீட்டை பெட் இன்சூரன்ஸ் அளிக்கிறது. இன்னும் சில பெட் இன்சூரன்ஸ் பாலிசிகள் ஒருவேளை உங்களுடைய செல்லப்பிராணிகளை நீங்கள் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றால் கூட அதற்கான காப்பீட்டையும் வழங்குகிறது. இவை நாய்கள், பூனைகள், குதிரைகள், முயல்கள், குதிரைகள், பன்றிகள் மற்றும் பிற கால்நடைகள் போன்ற விலங்குகளை உள்ளடக்கியது. இருப்பினும், ரேபிஸ் மற்றும் டிஸ்டெம்பர் போன்ற நோய்கள் பொதுவாக விலக்கப்படுகின்றன.

Also Read : மத்திய அரசின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ்! ஆண்டுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?

பெட் இன்சூரன்ஸ் பாலிசியின் கீழ் கிடைக்கும் காப்பீடுகள்

1. அறுவை சிகிச்சைச் செலவுகள்.
2. விபத்து அல்லது நோய் காரணமாக இறப்பு.
3. மருத்துவமனையில் அனுமதித்தல் காரணமாக ஏற்படும் செலவு.
4. செல்லப்பிராணிகள் தொலைந்து போனாலோ அல்லது அவை திருடப்பட்டு விட்டாலோ அதற்கான இழப்பை பெற்றுக் கொள்ளலாம்.

பெட் இன்சூரன்ஸ் பாலிசியில் எந்தெந்த விஷயங்களை உங்களால் கிளைம் செய்ய முடியாது

1. அவசியமற்ற அறுவை சிகிச்சைகள்.
2. பிறவி குறைபாடுகள்.
3. கர்ப்பம் சம்பந்தமாக செய்யப்படும் அறுவை சிகிச்சைகள்.
4. செல்லப்பிராணிகளை அழகுப்படுத்துவதற்காக செய்யப்படும் அறுவை சிகிச்சைகள்.
5. காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சைகள்.
6. விபத்து காரணமாக ஏற்படாத பல் சம்பந்தமான அறுவை சிகிச்சைகள்.

பெட் இன்சூரன்ஸ் பாலிசி பெறுவதற்கான தகுதி வரம்புகள்

2 மாதங்கள் முதல் 10 வருடங்கள் வரையிலான செல்லப்பிராணிகளுக்கு நீங்கள் பெட் இன்சூரன்ஸ் பெற்றுக் கொள்ளலாம். இந்த பெட் இன்சூரன்ஸ் பாலிசிக்கான பிரீமியம் என்பது செல்லப்பிராணியின் வயது, அதன் வகை மற்றும் அளவை பொறுத்து அமையும். 1) New India Assurance Dog Insurance Policy 2) Oriental Insurance Dog Insurance 3) Bajaj Allianz Pet Dog Insurance Policy 4) Future Generali India Dog Health Insurance 5) HDFC Ergo உள்ளிட்ட நிறுவனங்கள் செல்லப்பிராணிகளுக்கான இன்சூரன்ஸ் வழங்குகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry