முருங்கை செடி அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்து மதிப்புக்கு பெயர் பெற்றது. முருங்கை இலை, ஈர்க்கு, பூ, காய், பிஞ்சு, பிசின், பட்டை, வேர் என அனைத்துப் பாகங்களும் மருந்தாகப் பயன்படுகின்றன. முருங்கைக் கீரையில், நார்ச்சத்து, இரும்புச் சத்து என நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
தினமும் ஒரு ஸ்பூன் அளவு முருங்கை கீரை பொடியை உட்கொள்வது மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும், வயதானதை தாமதப்படுத்தும், வீக்கத்தைக் குறைக்கும், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் முருங்கை கொண்டிருக்கிறது.
Also Read : தினமும் இஞ்சி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? மூட்டு வலி தொடங்கி புற்றுநோய் வரை…!
மிகச்சிறந்த மூலிகையான முருங்கை ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. முருங்கையைப் பல்வேறு வடிவில் நாம் எடுத்துக் கொள்வோம். அது மட்டுமல்லாமல் தேநீர், சாலட்கள் மற்றும் பல்வேறு உணவுகளில் முருங்கையைச் சேர்ப்பது அதன் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. அதன்படி, முருங்கையின் ஒவ்வொரு பகுதியும் அதாவது அதன் விதைகள், வேர்கள், பட்டை, இலைகள் மற்றும் பூக்கள் என ஒவ்வொன்றும் தனித்தனி பண்புகளைக் கொண்டுள்ளது.
முருங்கையில் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ, புரதங்கள், ஆக்ஸிஜனேற்றிகள், ஃபோலிக் அமிலம், பைட்டோநியூட்ரியன்கள், ஆக்ஸிஜனேற்றிகள், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்றவை நிறைந்து உள்ளது. முருங்கை இலைகள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நாள்தோறும் 10-12 முருங்கை இலைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம்.
தினமும் முருங்கை இலைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்கும்
முருங்கையில் உள்ள பீட்டா-சிட்டோஸ்டெரால் ஆனது கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது வலுவான ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்டுள்ளது. இது இதய ஆரோக்கியத்திற்கு நன்மை அளிப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. எனவே தினமும் முருங்கை இலைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம்.
வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும்
நீண்ட கால அழற்சியின் காரணமாக நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடையலாம். இது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். முருங்கையானது சில அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டதாகும். மேலும், இது ஆக்ஸிஜனேற்றிகள், பைட்டோநியூட்ரியண்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சேர்மங்களைக் கொண்டுள்ளது. இந்த பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல்கள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்த்துப் போராட உதவுகிறது.
Also Read : குக்கர் சாதம் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? மறந்தும் இந்த 6 உணவுகளை குக்கர்ல சமைச்சுடாதீங்க!
இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்
நீரிழிவு நோய்க்கு சிறந்த ஆயுர்வேத மூலிகைகளில் ஒன்றாக முருங்கை இலை அமைகிறது. இவை இன்சுலின் உணர்திறனை அதிகரிப்பதன் மூலம், இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. எனினும், நீரிழிவு மேலாண்மைக்கு முருங்கை இலைகளை சாப்பிடுவதற்கு முன்னதாக ஆலோசனைகளைப் பெற வேண்டும்.
சருமம், முடி பாதுகாப்பு
முருங்கை இலைகள் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும். எனவே இவை சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்க உதவுகிறது. மேலும், இவை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தைத் தடுக்கிறது. தலைமுடிக்கு முருங்கை விதை எண்ணெயைப் பயன்படுத்துவது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பொடுகுத் தொல்லையைப் போக்க உதவுகிறது.
முதுமையை தாமதப்படுத்துகிறது
முருங்கை இலைகளில் புரதம், கால்சியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் துத்தநாகம் மற்றும் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் பல பி வைட்டமின்கள் நிறைந்துள்ளன. முருங்கையில் குர்செடின், குளோரோஜெனிக் அமிலம் மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலின் பாதுகாப்பை ஆதரிக்கின்றன, ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கின்றன. இதனால் நீங்கள் என்றும் இளமையாக காட்சியளிக்க முடியும்.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமாக இருப்பின், அது மனநலம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. நாள்தோறும் முருங்கை இலைகளை சேர்த்துக்கொள்வது மூளையில் உள்ள நொதிகளின் செயல்பாட்டை மாற்றுவதன் மூலம் இயற்கையாகவே நினைவகத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது நரம்பு கோளாறுகளை நிர்வகிக்க உதவுகிறது.
குழந்தைகளுக்கு 1 ஸ்பூன் முருங்கை கீரை பொடியை உணவில் சேர்த்து கொடுப்பதால் அதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற மற்றும் நரம்பியல் பண்புகள் காரணமாக மூளை ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். நியூரோடிஜெனரேட்டிவ் நோய்களுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு அளிப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வீக்கம் குறைதல்
முருங்கையில் உள்ள இரசாயனங்களில் ஒன்றான ஐசோதியோசயனேட்ஸ், உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. முருங்கைக்காய் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதால், இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. 1 ஸ்பூன் முருங்கை கீரை பொடியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற கலவைகள் இரத்த சர்க்கரையைக் குறைக்கிறது.
Also Read : குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் மற்றும் பழங்களை கொடுக்கலாமா? பெற்றோருக்கான யூஸ்ஃபுல் டிப்ஸ்!
புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது
முருங்கையில் உள்ள அதிக வைட்டமின் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது தொற்று நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் சக்தி முருங்கைக்கு உண்டு. இதனால் தினமும் முருங்கை கீரையை உங்கள் உணவில் சேர்த்து வாருங்கள்.
செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது
முருங்கை இலையில் நார்ச்சத்து உள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது மலச்சிக்கல் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.
எடை இழப்பு
முருங்கை இலைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பசியைக் குறைகக்கும், உடலில் ஆற்றலை அதிகரிக்கும்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்
முருங்கை இலையை தொடர்ந்து உட்கொண்டு வந்தால் மன ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். ஏனெனில் இந்த இலையில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவும்.
உடல் நச்சுக்களை நீக்க
முருங்கை இலைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் உள்ள நச்சுகள் நீங்கும். இது இயற்கையான சுத்தப்படுத்தியாக செயல்படுகிறது. முருங்கையை எந்த வடிவத்திலும் உட்கொண்டாலும், உடலின் ஆற்றல் அதிகரிக்கும்.
உணவில் முருங்கை எப்படி பயன்படுத்துவது? – முருங்கை கீரையை பொரியல் செய்தோ, கூட்டுபோல செய்தோ அல்லது சூப் செய்தோ அருந்தலாம். முருங்கை கீரையை வெயிலில் காய வைத்து பொடி செய்து ஸ்மூத்திகள், சாலட், பானங்களில் கலந்து அருந்தலாம். இட்லி பொடி செய்யும் போது கூட முருங்கை கீரையை அதிகமாக சேர்த்து செய்து சாப்பிட்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
Image Source : Getty Image
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry