
காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி குடிப்போம். சிலர் எழுந்தவுடன் படுக்கையிலேயே காபி அல்லது தேநீர் அருந்துகிறார்கள். ஆனால், ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது, காபியா அல்லது தேநீரா? மருத்துவ கூற்றுப்படி, காபி அல்லது தேநீர், எது ஆரோக்கியத்திற்கு சிறந்த பானம் என்பதை பார்க்கலாம்.
Also Read : வேகமாக ஆனா ஆரோக்கியமா உடல் எடையை குறைக்கனுமா..? இப்படி காபி போட்டு குடிங்க!
காபியின் நன்மைகள்
- காபியை அளவாகக் குடிப்பது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, காபி குடிப்பது இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
- காபியில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகின்றன.
- காபியில் உள்ள காஃபின், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. மனநலப் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு இதுவும் ஒரு சிறந்த தேர்வு. அமெரிக்க நரம்பியல் அகாடமியின் கூற்றுப்படி, தொடர்ந்து காபி குடிப்பது அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
- காபி குடிப்பது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். காலையில் காபி குடிப்பதால் சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

தேநீர் நன்மைகள்
- பொதுவாக, தேநீரில் பிளாக் டீ, கிரீன் டீ, நார்மல் டீ, இஞ்சி டீ, ப்ளூ டீ, ஹெர்பல் டீ, மசாலா டீ என பல வகைகள் உள்ளன. இவை உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
- தேநீரில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
- அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கிரீன் டீயில் இரத்த அழுத்தத்தைக் குறைக்கக்கூடிய பாலிபினால்கள் உள்ளன.
- கிரீன் டீ அல்லது இஞ்சி டீ குடிப்பதால் செரிமானம் மேம்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். தேநீர் கொழுப்பை எரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது.
- பிளாக் மற்றும் கிரீன் டீ குடிப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த தேநீர்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும். இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Also Read : காலையில் டீ, காபியோடு பிஸ்கட் சாப்பிடுவது நல்லதா? அச்சுறுத்தும் உண்மை..!
ஒரு நாளைக்கு எத்தனை கப் குடிக்க வேண்டும்?
பலருக்கு டீ அல்லது காபி குடிக்கும் பழக்கம் இருக்கும். அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு அல்லது ஏழு கப் டீ அல்லது காபி குடிப்பார்கள். இது சரியல்ல, இதனால் கடுமையான பாதிப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். காபி அல்லது டீ அதிகம் அருந்துவதால், அஜீரணம், வாயு மற்றும் தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். அதிகமாக தேநீர் அல்லது காபி குடிப்பது எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். கூடுதலாக, கொழுப்பு அதிகரித்து இதய ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.
அதனால்தான் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு கப் தேநீர் அல்லது காபி குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒரு கப் என்பது 100 முதல் 150 மில்லி வரை இருக்கலாம். அதற்கு மேல் குடிப்பது உங்கள் உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள். ஒரு நாளைக்கு 4 முதல் 5 கப்புக்கும் அதிகமாக காபி, டீ குடிக்கும்போது நம் உடலில் நீர்ச்சத்து வறண்டு போகும். சிலருக்கு பற்கள் கறையாகலாம். வேறு சிலருக்கு செரிமானம் தொடர்பான தொந்தரவுகள் வரலாம்.
ஃபில்டர் காபி என்றால் தோராயமாக ஒரு தனிநபர் இரண்டு கப் குடிக்கலாம், இன்ஸ்டன்ட் காபி என்றால் மூன்று அல்லது மூன்றரை கப் வரை குடிக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு தனிநபர் அதிகபட்சம் 300 மில்லிகிராம் வரை கஃபைன் எடுத்துக்கொள்ளலாம். குளிர்பானங்களில்கூட காஃபீன் கலக்கப்பட்ட பொருட்கள் உள்ளன. ஆகையால், காபி, டீ ஆகிய இரண்டை மட்டுமே வைத்து கஃபைன் உட்கொள்ளும் அளவை கணக்கிடக்கூடாது.
கஃபைன் கலந்த பானங்களைக் குடிப்பதில் சில சாதகங்களும் உள்ளன, பாதகங்களும் உள்ளன. ஒவ்வொருமுறை நீங்கள் குடிக்கும் காபி, டீயில் சேரும் சர்க்கரையும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. முறையாக வொர்க் அவுட் செய்யும் பழக்கமுள்ள நபர்கள், வொர்க் அவுட்டுக்கு முன் பால் சேர்க்காத பிளாக் காபி குடிப்பது நல்லது. அது வொர்க் அவுட்டுக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும். அதுவே களைப்பு, படபடப்பு போன்றவை உள்ளவர்கள் கஃபைன் அளவைக் குறைக்க வேண்டியது மிக முக்கியம்.
Also Read : பேப்பர் கப்பில் டீ, காபி அருந்துவதில் உள்ள ஆபத்துகள்! குடல் புற்றுநோய் வரை வரக்கூடும் என எச்சரிக்கை!
எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்?
அமெரிக்க இதய சங்கத்தின் கூற்றுப்படி, காலையில் காபி அல்லது தேநீர் குடிப்பது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இருப்பினும், காபி அல்லது டீயை வெறும் வயிற்றில் குடிக்கக்கூடாது. தேநீர் அல்லது காபி குடிப்பதற்கு முன் இரண்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது நல்லது. இல்லையெனில், காலை உணவுக்குப் பிறகு டீ அல்லது காபி குடிப்பது நல்லது. இருப்பினும், வழக்கமான தேநீர் அல்லது காபிக்கு பதிலாக கிரீன் டீ, பிளாக் காபி, பிளாக் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தேநீர், காபி இரண்டிலுமே டன்னின் (Tannin) என்ற வேதிப்பொருள் இருக்கிறது. “உணவிலிருந்து இரும்புச்சத்து போன்ற நுண்ணூட்டங்களை உடல் கிரகித்துக்கொள்ளும் செயல்முறையில் இந்த வேதிப்பொருள் குறிக்கிடும்.” ஆகையால், உணவு உண்பதற்கு ஒரு மணிநேரம் முன்னரும் பின்னரும் தேநீர், காபி ஆகியவற்றை அருந்தக்கூடாது என்கிறது ஐசிஎம்ஆரின் இந்திய உணவுமுறை குறித்த வழிகாட்டுதல் அறிக்கை. உணவுக்கு ஒரு மணிநேரம் முன்பு வரையிலோ அல்லது உணவுக்குப் பிறகு ஒரு மணிநேரம் வரையிலோ தேநீர், காபி அருந்தும்போது, அந்த உணவில் இருந்து நமது உடலுக்குக் கிடைக்கும் நுண்ணூட்டங்கள் கிடைக்காமல் போய்விடும்.

இரண்டில் எது சிறந்தது?
உங்கள் தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், உடல் நலம் உள்ளிட்டவைகளைக் கருத்தில் கொண்டு, நீங்கள் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யலாம். இரண்டையும் குடிக்கும் பழக்கம் இருந்தால், காலையில் காபியும், மதியம் தேநீரும் அருந்தலாம். மாலையில் கிரீன் டீ மற்றும் மூலிகை டீயை முயற்சி செய்யலாம். இருப்பினும், எதையும் அதிகமாகக் குடிப்பது உடல்நலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அதிகமாக டீ அல்லது காபி குடிப்பது, அளவுக்கு அதிகமாக காஃபின் உட்கொள்ள வழிவகுக்கும். அதிகப்படியான காஃபின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அதிக அளவில் காபி, டீ குடிப்பவர்களுக்கு இரும்புச்சத்துக் குறைபாடு ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். காபியில் உள்ள டானின், உடலில் இரும்புச்சத்து கிரகிக்கப்படுவதைத் தடுத்து ஹீமோகுளோபின் குறைபாட்டுக்கு காரணமாகும். குறிப்பாக பெண்களுக்கு பொதுவாகவே ரத்தச்சோகை பாதிப்பு அதிகம் இருக்கும் என்பதால், அவர்கள் காபி, டீயின் அளவைக் குறைப்பது அல்லது அறவே தவிர்ப்பது அவசியமாகும்.
செரிமானம் தொடர்பான பிரச்னை இருப்பவர்கள், பால் தவிர்த்து பிளாக் காபி, பிளாக் டீ எடுத்துக்கொள்ளலாம். இப்போது கடைகளில் நட்ஸ் வைத்துத் தயாரித்த பால் வகைகள் கிடைக்கின்றன. அவற்றை மாட்டுப் பாலுக்கு மாற்றாகச் சேர்த்துக்கொள்ளலாம்.
பால் சேர்த்த காபி, டீ கூடாதா?
ஐசிஎம்ஆர் வழிகாட்டுதலின்படி, பிளாக் டீ, கிரீன் டீ என எதுவாக இருப்பினும், அதில் காஃபீன் இருப்பது போலவே தியோப்ரொமைன், தியோஃபில்லின் போன்ற வேதிப்பொருட்களும் உள்ளன. இவை உடலின் ரத்தக் குழாய்களைத் தளர்த்துவதோடு, ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
அதுமட்டுமின்றி, “தேநீரில் இருக்கக்கூடிய ஃபிளவனாய்டுகள் மற்றும் பிற ஆக்ஸிஜனேற்ற பாலிபினால்கள் இதய நோய், வயிற்றுப் புற்றுநோய் ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. ஆனால், இதற்கு தேநீர் குடிக்கும்போது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் செய்யக்கூடாது. அதாவது, தேநீரில் பால் சேர்த்துப் பருகக்கூடாது. அதோடு, தேநீரை மிதமான அளவில் மட்டுமே பருகவேண்டும்.
பாலை தனியாகப் பருகுவதில் எந்தவித பிரச்னையும் இல்லை. இருப்பினும், தேநீருடன் சேர்க்கும்போது, “அதில் அதிகளவில் பால் மட்டுமே இருக்கும். தேநீரின் தனித்துவமான அளவு என்பது குறைந்துவிடும். ஆகையால், அதன்மூலம் கிடைக்கும் பலன்களை முழுதாகப் பெற முடியாது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry