காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில், புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வைசியால் வீதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
Also Read : உறவினர் நிறுவனத்துக்கு அரசு ஆவணத்தை தூக்கிக் கொடுப்பதா? முதலமைச்சர் ராஜினாமா செய்ய அதிமுக வலியுறுத்தல்!
கூட்டம் முடிந்து கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே வந்த மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை கட்சியினர் முற்றுகையிட்டனர். அப்போது, மாநில தலைவர் வாகனத்தில் ஏறிப் புறப்பட முயன்ற மேலிடப் பொறுப்பாளரை, கட்சியினர் போக விடாமல் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இதனால், காங்கிரஸ் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் மாநில காங்கிரஸ் தலைவரை மாற்றக்கோரி மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவை கட்சியின் சுற்றிவளைத்து கெரோ செய்தனர். மேலும் அவர் சென்ற காரையும் கட்சியினர் தாக்கினர். @VNarayanasami @KS_Alagiri @VelsMedia @INCTamilNadu @Selvakumar_IN @jkgche @Pandidurai274 pic.twitter.com/PKTwFg0vNV
— VELS MEDIA (@VelsMedia) August 21, 2022
முன்னதாக, இந்த கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அவரது ஆதரவாளரான மாநில தலைவர் சுப்ரமணியன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது, கூட்டத்தில் ஒரு தரப்பினர் மாநில தலைவரின் பதவிக் காலம் முடிந்து விட்டதால் அவரை மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி அமளியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் கூச்சலில் ஈடுபட்டதால் கூட்டத்திலிருந்து நாராயணசாமி பாதியில் வெளியேறினார். பின்னர் மாநில தலைவரை மாற்ற வலியுறுத்தி நாராயணசாமிக்கு எதிர் தரப்பினர் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry