இட்லி பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. ஹோட்டல்களுக்குச் சென்றாலும் நிறைய உணவுகளின் லிஸ்ட்டுகளை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். அத்தனையும் காதுக் கொடுத்து கேட்டு விட்டு இட்லி இருக்கா? என்ற கேள்வியோடு நம்முடைய உணவுகளை ஆர்டர் செய்வோம்.
அதுவும் காலை உணவாக இட்லி சாப்பிடுவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும் எனவும், மற்ற உணவுகளை விட சிறந்த காலை உணவாக நிச்சயம் இது இருக்கும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இட்லியின் மற்றொரு தனிச்சிறப்பு என்னவென்றால், அது ஜீரணிக்க மிகவும் எளிதானது. அதனால் கர்ப்பிணிகள், அறுவை சிகிச்சை செய்தவர்கள் இட்லி சாப்பிடுவது நல்லது என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
Also Read : மிரட்டத் தயாராகும் மழைக்கால நோய்கள்! தடுக்கும் வழிகள் குறித்த பயனுள்ள டிப்ஸ்!
தென்னிந்திய உணவான இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், க்ளுட்டன் இல்லாமலும் உள்ளது. இட்லி மாவை நொதிக்க வைக்கும் முறையினால், அதில் புரதங்களின் இருப்புத்தன்மை அதிகமாகும் மற்றும் வைட்டமின் பி சத்தின் அளவு மேம்பட்டு இருக்கும்.
ஒரு இட்லியில் 60 – 70 கலோரிகள், 2 கிராம் புரதம், 8 கிராம் கார்போஹைட்ரேட், 2 கிராம் நார்ச்சத்து, 1 மில்லி கிராம் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ ஆகியன உள்ளன. தினமும் 4 இட்லி சாப்பிட்டால் 300 – 350 கலோரிகள் நம் உடலுக்குக் கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இட்லியுடன் சாம்பார், சட்னி சேர்த்து சாப்பிடுவதனால் அனைத்து சத்துக்களும் சரியான அளவில் நமக்குக் கிடைக்கிறது.
உடல் வலிமை அதிகமாகும்
உடல் வலிமையை அதிகரிக்கும் உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில் உணவாக எடுத்து வந்தால், நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், சுறுசுறுப்புடனும் செயல்பட முடியும்.
கொழுப்புக்கள் குறைவு
வேக வைக்கும் முறையில் சமைக்கப்படும் இட்லியில் கொழுப்புக்கள் சுத்தமாக இருக்காது. இதனால் உடலில் தேவையற்ற கொழுப்புக்கள் சேர்வதைத் தடுக்கலாம்.
செல்கள் புதுப்பிக்கப்படும்
உடலினுள் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள செல்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்னும் அமினோ அமிலாம் இட்லியில் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.
சிறுநீரக ஆரோக்கியம்
சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் காமா அமினோபட்ரிக் என்ற அமினோ அமிலம் 10 மடங்கு அதிகமாக இட்லியில் உள்ளது.
எளிதில் செரிமானமாகும்
காலையில் மற்ற உணவுகளை விட இட்லியை உட்கொண்டால், செரிமான மண்டலத்தினால் எளிதில் செரிக்கப்படும். இதனால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.
எடை குறையும்
முக்கியமாக உடல் எடையைக் குறைக்க நினைப்போருக்கு இட்லி மிகவும் சிறப்பான காலை உணவு. அதிலும் இதனை சிட்ரஸ் அமிலம் நிறைந்த தக்காளி சட்னியுடன் சேர்த்து உட்கொண்டால், சிட்ரஸ் அமிலமானது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்து, கார்போஹைட்ரேட்டுகள் உடலில் தங்குவதைத் தடுக்கலாம்.
கோதுமை இட்லி சிறந்தது
அரிசியினால் உடல் பருமனடைவது போல் உணர்ந்தால், கோதுமையைக் கொண்டு இட்லி செய்து சாப்பிடலாம். இது செரிமானத்திற்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் நல்லது. ஏனெனில் அரிசியினால் இரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகும். எனவே நீரிழிவு நோயாளிகள் கோதுமையைக் கொண்டு இட்லி செய்து சுவைக்கலாம்.
Also Read : தூக்கத்துக்கான 3-2-1 ரூல்! இந்த விதியைப் பின்பற்றினால் விரைவான, ஆழமான தூக்கம் வருமா?
சாப்பிடுவதற்கு இட்லி மென்மையாக இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் சாப்பிடக்கூடிய வகையில் உள்ளது. என்ன தான் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த திட உணவுகளைக் கொடுத்தாலும், பிறந்த 6 மாதங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு இட்லியில் இருந்து தான் திட உணவை ஆரம்பிப்பார்கள்.
உடல் நல குறைபாடு உள்ள வயதானவர்கள் கூட இட்லியை அவர்களின் காலை உணவாக மட்டுமல்ல இரவு நேரங்களில் கூட சாப்பிடலாம். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் எளிதில் ஜீரணமாவதற்கு உதவியாக உள்ளது. இதில் உளுந்து சேர்க்கப்படுவதால் பெண்களுக்கு ஏற்படக்கூடிய முதுகுவலி போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வாக உள்ளது இட்லி. இனி மறக்காமல் இட்லியை சாப்பிடுங்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry