இந்துவாக இருப்பவர்கள் விபச்சாரியின் மகன்கள்! தி.மு.க. எம்.பி. ஆ.ராசா சர்ச்சை பேச்சு!

0
305

தி.க தலைவர் வீரமணிக்கான பாராட்டு விழா மற்றும் விடுதலை பத்திரிகை சந்தா வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் வேப்பேரி பெரியார் திடலில் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் திமுக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.



இந்த விழாவில் பேசிய ஆ.ராசா, “உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது? நீ கிறிஸ்தவனாக இல்லாமல் இருந்தால், இஸ்லாமியனாக இல்லாமல் இருந்தால், பெர்சியனாக இல்லாமல் இருந்தால், நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபசாரியின் மகன். இந்துவாக இருக்கும்வரை நீ பஞ்சவன், ஹிந்துவாக இருக்கும்வரை நீ தீண்டத்தகாதவன்.

Also Read : சட்டத்தின் சந்து பொந்துகளில் நுழைய திமுக அமைச்சர்களா? ரெய்டு குறித்து ஈபிஎஸ் கருத்து!

எத்தனை பேர் விபசாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? எத்தனை பேர் தீண்டத் தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள்? என்கின்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திமுக.வும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது”. இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, ‛திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளார். மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே அவர் குறிக்கோளாக கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது.’ எனப் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ஹிந்துக்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆ.ராசா இப்படி இந்துக்கள் மீது தொடர்ந்து வன்மத்தை கக்குவது சரியா? அவரது பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் என்ன பதில் சொல்ல போகிறார்? என்று இந்து சமூகத்தினர் கேள்வி எழுப்புகின்றனர். இந்துக்களின் ஓட்டுகளை மட்டும் எதிர்பார்க்கும் திமுக, ஹிந்துக்கள் மீது அவதூறு பரப்புபவர்களை கண்டிப்பதே இல்லையே எனவும் அவர்கள் வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

Also Watch : வேகமாகப் பரவும் காய்ச்சல்! எச்சரிக்கும் மருத்துவர்! – Dr. Subramanian Swaminathan

அதுமட்டுமின்றி தங்கள் கட்சியில் உள்ள 90% பேர் இந்துக்கள் என திமுக தலைமை கூறுவதை சுட்டிக்காட்டும் நடுநிலையாளர்கள், திமுக முதல் குடும்பம் இந்து இல்லையா எனவும் வினவுகின்றனர்.

தனது பேச்சு சர்ச்சையான நிலையில், ஆ.ராசா தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‛சூத்திரர்கள் யார்? அவர்கள் இந்துக்கள் இல்லையா? மனுஸ்மிருதி உள்ளிட்ட நூல்களில் ஏன் இழிவுபடுத்தப்பட்டு, கல்வி – வேலைவாய்ப்பு – கோவில் நுழைவு மறுக்கப்பட்டது. அரசியல் அதிகாரத்தாலும் – பரப்புரையாலும் 90 சதவீத ஹிந்து மக்களின் இவ்வுரிமைகளை மீட்ட திராவிட இயக்கம் எப்படி ஹிந்துக்களுக்கு எதிரியாகும்!’ எனப் பதிவிட்டுள்ளார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry