
மொபைல் போன்கள், லேப்டாப்கள், டிவி போன்ற பல தொழில்நுட்ப சாதனங்கள் நாளுக்கு நாள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்று வருகிறது. இவைகள் ஒவ்வொருவரது வாழ்விலும் இன்றியமையாததாகி வருகிறது. இதிலிருந்து வெளிவருவது என்பது ஒவ்வொருவருக்கும் பெரும் சவாலாக அமையும். இவற்றில் ஒன்றாக ப்ளூ டூத் ஹெட்போன்கள் குறித்தும், இதன் பயன்பாடு எப்படி பல்வேறு விதமான உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் தெரிந்து கொள்வோம்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கழுத்துகளிலும், காதுகளிலும் நாள் முழுவதும் ஒட்டிக் கொண்டிருக்கும் ஒரு தொழில்நுட்ப சாதனமாக உள்ளது ப்ளூ டூத் ஹட்போன்கள். நடந்து சென்றாலும், பேருந்து, ரயில் போன்றவற்றில் பயணம் செய்தாலும், ஹெட்போன்களைப் பயன்படுத்திப் பாடல்களைக் கேட்போம். மற்றவர்களுக்கு இடைஞ்சல் தரக்கூடாது என்பதற்காக ஹெட்போன்களைப் பயன்படுத்தினாலும் இதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் அனைத்தும் மிகவும் மோசமாக இருக்கும். பல விதமான மாடல்கள் மற்றும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் பல ஹெட்போன்கள் சந்தைகளில் விற்பனையாகிறது. இதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் சற்றே யோசிக்க வேண்டும்.
Also Read : இட்லியில் இவ்வளவு சத்துக்களா உள்ளன? தவிர்க்கவே முடியாத இட்லியின் பூர்வீகம் தெரியுமா..?
- அதிகநேரம் ஹெட்போன் பயன்படுத்தினால், காதினுடைய காற்றுப் பாதை அடைத்து காதிற்குள் பாக்டீரியா அதிகமாகிவிடும். இதனால் காதில் நோய்த்தொற்று, காது கேளாமல் போதல், Tinnitus(காதில் ஒருவித ஒலி கேட்பது) போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
- ஹெட்போனில் இருந்து வெளியாகும் காந்த அலைகள் மூளையை பாதித்து தலைவலியை உண்டாக்கும். அதிக நேரம் ஹெட்போனை சத்தமாக வைத்துக் கேட்பது ஒற்றை தலைவலி மற்றும் நீங்காத பொதுவான முழு தலைவலி வருவதற்கு காரணமாக அமையும்.
- அதிகநேரம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால், கவனச்சிதறல் ஏற்படும். எனவே, ஸ்கூல் மற்றும் காலேஜில் படிக்கும் மாணவர்கள் ஹெட்போனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.
- ஹெட்போனில் இருந்து வரும் அதிகப்படியான சத்தம் இதயத்தை வேகமாக துடிக்க வைத்து நாளடைவில் இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும் என்று சொல்லப்படுகிறது.
- புளூடூத்தில் இருந்து வெளியாகும் Radio Frequency Radiation ஆல் கேன்சர் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கான சான்றுகள் இன்னும் சரியாக நிரூபிக்கப்படவில்லை. எனவே, அதிக நேரம் போனில் பேச வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் ஸ்பீக்கரை பயன்படுத்துவது சிறந்தது.
- கர்ப்பகாலத்தில் அதிகமாக ப்ளூடூத் ஹெட்போனை பயன்படுத்தும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு Attention Deficit Hyperactivity Disorder (ADHD) என்னும் பிரச்னை ஏற்படுவதாக சொல்லப்படுகிறது.
- ஹெட்போன்களை தலையில் அதிக நேரம் மாட்டிக்கொள்வதால் முடி உடைந்து முடிக்கொட்டுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. ஒருநாளைக்கு குறைந்தது 60 முதல் 90 நிமிடங்கள் ஹெட்போனை தகுந்த இடைவேளையில் பயன்படுத்தலாம் என்று சொல்லப்படுகிறது.
- குழந்தைகளுக்கு ஹெட்போன் பயன்படுத்த கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் ஹெட்போன் பயன்படுத்துவதை விட அதிகம் கவனித்து கேட்பதற்கு கற்றுத்தருவது சிறந்தது.
- ப்ளூடூத் ஹெட்போனில் குறைந்த அளவு ரேடியேஷன் இருந்தாலுமே, அதை அணிந்துக் கொண்டு தூங்குவது சிறந்ததல்ல. இதனால் காதில் நோய்த்தொற்று, காதில் உள்ள Ear Wax அடைத்துக் கொள்ளுதல் ஏற்படும். குறைந்த அளவில் சத்தம் வைத்து வெகுநேரம் பயன்படுத்துவதும் காது கேளாமல் போவதற்கான சாத்தியக் கூறுகளை உண்டாக்கும். எனவே, முடிந்த அளவு பாடல்கள் கேட்க, போன் பேசுவதற்கு ஸ்பீக்கரை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.
- நம்மில் பலர் அதிகமாக சத்தத்துடன் தான் பாடல்களைக் கேட்போம். காலை முதல் இரவு வரை பாடல்களைக் கேட்பதற்கு மற்றும் பேசுவதற்கு என ஹெட்போன்களைப் பயன்படுத்துவதால் செவியில் உள்ள ஜவ்வு பாதிக்கப்படுகிறது. நாளடைவில் காது கேட்கும் திறனும் குறையக்கூடும்.
- மாணவர்கள், அலுவலகத்தில் வேலைபார்ப்பவர்கள் என்று பலரும் இப்போது பெரும்பாலும் ஹெட்போன்ஸ் பயன்படுத்துகிறார்கள். இதனால், கவனச்சிதறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது. முக்கியமாக வாகனம் ஓட்டும் பொழுது இப்போது பலர் ஹெட்போன்ஸ் அணிந்து செல்கிறார்கள். இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. சில நேரங்களில் உயிரிழப்பே ஏற்படுகிறது. இத்தகைய காரணிகளால் மக்களை அதிக நேரம் ப்ளூடூத் சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Also Read : தமிழை அழித்தொழிக்கும் ‘தங்க்லிஷ்’..! அழிந்துவரும் தாய்மொழி! கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்!
Summary : தினமும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் பயன்பாட்டை 2 மணிநேரத்துக்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒலி சாதனங்களை பயன்படுத்துவதில் இடைவேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.சாதாரண அளவில் ஒலி இருந்தாலும் ஒயர் மூலம் இணைக்கப்பட்ட இயர்போன், புளூடூத், ஹெட்போன், இயர்ப்ளக் ஆகியவற்றின் தேவையற்ற பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இது செவியின் கேட்கும் திறனைக் குறைத்து நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது.

தேவை ஏற்பட்டால் இயர்போன், ஹெட்போன் போன்ற தனிப்பட்ட ஒலி சாதனங்களை 50 டெசிபல் ஒலிக்கு மேல் இல்லாமல் பயன்படுத்த வேண்டும். பொது இடங்களில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பவர்கள், சராசரி ஒலி அளவு 100 டெசிபலுக்கு அதிகமாக இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகள் இணையத்தில் விளையாடும் (online game) விளையாட்டின் நேரத்தை குறைப்பதன் மூலம் அவர்கள் காது அதிக சத்தத்திற்கு ஆட்படுவதை தவிர்க்க முடியும். மழைத்துளி ஓரிடத்தில் விழுந்து கொண்டே இருந்தால் அந்த இடத்தில் குழி போன்ற பாதிப்பு ஏற்படுவதைப் போலவே காதுக்குள் தொடர்ந்து அதிக ஒலிகளைக் கேட்கும் போது பாதிப்பு ஏற்படும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry