வைட்டமின் B1 மாத்திரை சாப்பிட்டால் கொசு கடிக்காதா? உண்மையை தெரிஞ்சுக்க இதைப் படிக்க மறக்காதீங்க!

0
40
Can taking Vitamin B1 help you avoid mosquito bites? We look at the science and research behind this popular claim to give you an evidence-based answer. Vels Media.

வைட்டமின் Bயை பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். அதில் முதன்முதலில் கண்டறியப்பட்ட தயமின் என்கிற வைட்டமின் B1 தான் நமது உடலின் ஒவ்வொரு திசுவும் இயங்குவதற்கான எனர்ஜியை தருகிறது.

எனவே, வைட்டமின் பி இல்லாவிட்டால் நமது உடல் சோர்ந்து பல விதமான உடல்நல குறைபாடுகளுக்கு வழிவகுக்கும். இந்த நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்து ரத்தத்தில் கலந்து உடலின் இயக்கத்திற்கு பெட்ரோல் போல செயல்படுகிறது. இதில் வைட்டமின் B1 (தயமின் – Thiamine)கொசுவை விரட்டுமா என்ற கேள்வி பெரிதாக எழுகிறது.

Also Read : சிலரை மட்டும் குறிவைத்து கொசுக்கள் கடிப்பது ஏன்? இரத்த வகை, நிறம், வாசனையை அறியும் திறன் கொசுக்களுக்கு உண்டா?

❖ வைட்டமின் B1 – கொசுக்கள் விரும்பாத வாசனையா?

விட்டமின் B1 உட்கொண்டால் நம் உடலிலிருந்து ஒரு தனிப்பட்ட வாசனை வெளியேறும். இந்த வாசனையை கொசுக்கள் விரும்பாததால் அவை நம்மை கடிக்காமல் தள்ளிப்போகும் என்கிற நம்பிக்கையோடு சிலர் மாத்திரைகள் அல்லது பேட்ச்கள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனாலும், இது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டதா? என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

❖ அறிவியல் என்ன சொல்கிறது?

Vitamin B1 கொசுவை விரட்டும் என்ற கருத்து 1940களிலிருந்தே இருந்தாலும், இதுவரை இதை உறுதி செய்யும் எந்த வலுவான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. 2022ஆம் ஆண்டு வெளியான 100க்கும் மேற்பட்ட ஆய்வுகளின் அடிப்படைல், வைட்டமின் பி1 உட்கொண்டவர்களும், இல்லாதவர்களும் எவ்வித வேறுபாடுமின்றி கொசுக்களால் கடிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியவந்தது.

மேலும், 2005ஆம் ஆண்டு அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூட, Vitamin B1 உட்கொண்டவர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லையென கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இது விஞ்ஞான ரீதியாக ஆதரிக்கப்படாத ஒரு நம்பிக்கை மட்டுமே.

Also Read : கழிவறை இருக்கையை விட 40 ஆயிரம் மடங்கு பாக்டீரியாக்கள்..! குடிநீர் பாட்டில் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கும் ஆய்வுகள்!

❖ சிலர் ஏன் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள்?

பலரும் Vitamin B1 பயன்படுத்தியபிறகு கொசு தொல்லை குறைந்துவிட்டது என சொல்கிறார்கள். இது உண்மையில் வைட்டமினின் காரணமா அல்லது உடலின் வேறு ரசாயன மாற்றங்களாலா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. முக்கியமாக, விட்டமின் பி1 உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதால் சிலர் “முயற்சி செய்யலாம்” என்ற அணுகுமுறையில் இதனை பயன்படுத்துகிறார்கள்.

❖ இயற்கையான கொசு விரட்டி எண்ணெய்கள்

  • லெமன் யூக்கலிப்டஸ் ஆயில் – CDC (Centers for Disease Control and Prevention) இந்த எண்ணெயை பரிந்துரைக்கின்றது. இதில் உள்ள PMD என்ற இயற்கை கூறு கொசுக்களை விரட்ட சிறந்ததாக இருக்கிறது.
  • சிட்ரோனெல்லா ஆயில் – வாசனை மூலம் கொசுவை தற்காலிகமாக விரட்டுகிறது. மெழுகுவர்த்தி, ஸ்ப்ரே மற்றும் லோஷன்களில் உபயோகிக்கப்படுகிறது.
  • லாவெண்டர் ஆயில் – கொசுக்களை விரட்டுவதோடு, ஏற்கனவே கடிக்கப்பட்டிருப்பின் அந்த அரிப்பையும் குறைக்க உதவுகிறது.
  • மிளகுக்கீரை, கிராம்பு, இலவங்கப்பட்டை எண்ணெய் – சக்திவாய்ந்தவை, ஆனால் நேரடியாக தோலில் பயன்படுத்தும்போது சிலருக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, தேங்காய் எண்ணெய் அல்லது ஜோஜோபா எண்ணெயுடன் கலந்து பயன்படுத்த வேண்டும்.
  • வேப்ப எண்ணெய் – ஆயுர்வேத முறையில் பரவலாகப் பயன்படுகிறது. கொசுக்களை விரட்டுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
  • டீ ட்ரீ ஆயில், தைம் ஆயில் – இந்த எண்ணெய்கள் காய்ச்சல் ஏற்படுத்தும் கொசு வகைகளின் இனப்பெருக்கத்தையே கட்டுப்படுத்தக்கூடியவை.

Also Read : டெங்கு காய்ச்சலுக்கு ஏற்ற மருத்துவம் எது? Medicine & Treatment for Dengue Fever!

❖ எண்ணெய்களை பாதுகாப்பாக எப்படி பயன்படுத்துவது?

* எண்ணெய்களை நேரடியாக தேய்க்காமல், கரைப்பதற்கான எண்ணெய் (Carrier oil) – போன்று தேங்காய் அல்லது ஜோஜோபா எண்ணெயுடன் கலந்து பயன்படுத்துவது நல்லது.
* கண்கள் மற்றும் அரிப்புள்ள இடங்களை தவிர்க்க வேண்டும்.
* குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், செல்லப்பிராணிகள் உடன் தொடர்பில் இருப்பவர்கள் பயன்பாட்டிற்கு முன் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

❖ ஒரு தீர்வு போதுமா?

* வைட்டமின் B1 ஒரு பாதுகாப்பான முயற்சியாக இருக்கலாம்; ஆனால் நிரூபிக்கபட்டது அல்ல.
* வெளியே செல்லும் போது இயற்கை கொசு விரட்டி எண்ணெய்கள் பயன்படுத்தவும்.
* வீடு சுத்தமாக இருக்க வேண்டும், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
* உடலை மூடிய துணிகள் அணியவும், கொசு வலை பயன்படுத்தவும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry