என்னதான் வெயில் தாக்கத்தில் இருந்து சற்று நிவாரணம் கிடைத்தாலும், மழை காலத்திலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இதை சமாளிப்பது மிகவும் கடினமாகவே உள்ளது. காற்று மாசுபாடு, வெப்பம் காரணமாக காற்றில் ஈரப்பதம் இல்லாதது ஆகியவை நம்மை வெகுவாக பாதிக்கிறது. இது நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் கெடுதலை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற சூழலில் தலைமுடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், முடி தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. முடி உதிர்தல், பொடுகு மற்றும் உச்சந்தலை தொடர்பான பிரச்சினைகளும் இதில் அடங்கும். கோடை காலமோ அல்லது குளிர் காலமோ, தவறாமல் தலைமுடியை அலச வேண்டும். முடியை அலசும்போது முடியின் ஒட்டும் தன்மை நீங்குகிறது. இது தானாகவே முடி உதிர்தல் பிரச்னையை குறைக்கிறது.
Also Read : எந்த ராசிக்காரர்கள் கருங்காலி மாலை அணியலாம்? ஒரிஜினலா என கண்டுபிடிப்பது எப்படி? அணிந்துகொள்ளும் முறை என்ன?
முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் நீண்ட காலமாக சில மருந்தை உட்கொள்வதால் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இருப்பினும், முடி உதிர்தலில் இருந்து விடுபட நீங்கள் தினமும் தலைமுடியை அலசினால், முடி உதிர்வதை கொஞ்சம் தடுக்க முடியும். ஒருவர் தலைமுடியை குறைவாக அலசினாலும் சரி, அதிகமாக அலசினாலும் சரி, இரண்டுமே ஆபத்து தான்.
1: முடி வெட்டினால் வேகமாக வளரும் என்பது தவறு. முடி வெட்டும்போது பிளவு முனைகள் அகற்றப்பட்டு, உங்கள் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும். ஆனால் இது புதிய முடி வளர்ச்சி அல்லது முடி கொட்டுவதில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
2: உச்சந்தலையில் அதிகப்படியான எண்ணெய்ப்பசை உற்பத்தியாகி அதை நீங்கள் அகற்றாதபோது அல்லது சுத்தம் செய்யாதபோது, தலைமுடி அதிகமாக உதிர்வதை காணலாம். ஏனென்றால், எண்ணெய்ப்பசை (sebum) உங்கள் தலைமுடியை அழுக்கு ஆக்குகிறது மற்றும் நுண்ணறைகளை மூடுகிறது. எனவே தலைக்கு குளிக்கும்போது உச்சந்தலையிலும் கவனம் செலுத்துங்கள். உங்கள் முடி வகைக்கு ஏற்ற மென்மையான ஷாம்புகள் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
3: முடி தன்னை புதுப்பித்துக்கொள்ளும்போது, இயற்கையாகவே முடி உதிரும். இது கோடைக்காலத்தில் தொடங்கலாம். இக்காலத்தில் நுண்ணறைகள்(Follicles) பலவீனமடைந்து, தண்டுகள்(Shafts) உடைபடுவதால் முடி கொட்டுகிறது.
4: கவலை மற்றும் மன அழுத்தம் முடி உதிர்தலை ஏற்படுத்தும். தலைமுடி நிறைய உதிர்வதை கவனிக்கும்போது, நீங்கள் இன்னும் அதிகமாக கவலைப்படலாம். முடி கொட்டுதல், கவலை மற்றும் மன அழுத்தம் என்பது உணர்வுகளின் சுழற்சியாகும். ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் வரை இழப்பது இயல்பானது. முடி உதிர்தல் சராசரிக்கு மேல் இருப்பதாக நினைத்தால் மருத்துவரை சந்திக்கவும்.
5: தினமும் தலைக்குக் குளிப்பதால் முடி அதிகமாக உதிரும் என்பது தவறு. உங்கள் தலையில் தினமுமே எண்ணெய்ப் பசை இருப்பதை உணர்ந்தால், அது நுண்ணறைகளை அடைத்துவிடும். எனவே தினமும் தலைக்கு குளிப்பது நல்லது. நீங்கள் குளிக்கும்போது முடி உதிர்வதை பார்த்து கவலைப்பட வேண்டாம், ஏனென்றால் எப்படியாகினும் அந்த முடி உதிர்ந்துவிடும், அதைத்தடுக்க முடியாது. இதுபோன்ற முடி உதிர்வுக்கும் குளிக்கும் பழக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
6: தலைமுடி ஈரமாக இருக்கும்போது துவட்டினால் முடி அதிகமாக உதிரும் என்பதும் தவறானது. முடி ஈரமாக இருக்கும்போது அதிக மீள்தன்மை உடையதாக இருக்கும். மேலும் இது பிளவுபடுவதற்கான சாத்தியமும் அதிகம். எனவே தலையை துவட்டும்போது உடைந்திருந்த முடிதான் உதிருமே தவிர, துவட்டுவதால் முடி கொட்டாது. இது உண்மையில் முடி உதிர்தலை ஏற்படுத்தாது.
7: மது குடிப்பதும், புகைப்பதும் உங்கள் தலைமுடியை மேலும் உதிரச் செய்யும். நமது பழக்கவழக்கங்கள் நாம் நினைப்பதை விட நம் தலைமுடியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு முடிக்கும் அதன் சொந்த வாழ்க்கைச் சுழற்சி (வளர்ச்சி, பராமரிப்பு மற்றும் இழப்பு) உள்ளது என்றாலும், சில காரணிகள் முடிகளின் வேர்களை பாதிக்கின்றன. குடிப்பழக்கம் மற்றும் புகைபிடித்தல் உங்கள் தலைமுடியின் உயிர்ச்சக்தியை இழக்கச் செய்யலாம். மேலும் முடியின் இயற்கையான வயதான செயல்முறையை விரைவுபடுத்துவதன் மூலம், சேதம் அல்லது முடி உதிர்தல் அதிகமாகும்.
8: எப்போதும் தொப்பி அணிவது, அல்லது ஜெல், ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்துவது வழுக்கையை ஏற்படுத்துகிறது என பலர் சொல்லி கேட்டிருப்போம். முடியின் தண்டுகளை பாதிக்கும் விஷயங்கள் உங்கள் உச்சந்தலையை பாதிக்க வேண்டிய அவசியமில்லை. சில ஷாம்புகள் உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும், ஆனால் அவை முடி உதிர்தலை அதிகரிக்கும் என்று அர்த்தமல்ல. எப்போதும் ஒரு தொப்பியை அணிந்திருத்தல் அல்லது ஸ்ப்ரேக்கள், ஜெல் போன்ற தயாரிப்புகளை அதிகமாகப் பயன்படுத்தினால், உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் பிசுசிசுப்பு ஆகலாம், இதுதான் முடி கொட்டுதலுக்கு வழிவகுக்கும்.
9: தலைக்குக் குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்தினால் முடி மற்றும் உச்சந்தலை வறண்டுவிடும். எனவே தலைக்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்த வேண்டும். நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி பலனை பெறலாம். மேலும் கூந்தலை ஒரு முறையாவது குளிர்ந்த நீரால் அலச வேண்டும்.
10: பலர் தங்கள் தலைமுடியை முழுவதுமாக ஈரமாக்கும் முன் ஷாம்பூவால் அலசுகிறார்கள். அது முற்றிலும் தவறு. ஷாம்பு போடுவதற்கு முன் முடியை குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்.
11: தலைமுடி பளபளப்பாக இருக்க பலர் அதிகளவு ஷாம்பூவை பயன்படுத்துகின்றனர். ஆனால் இது மிகப்பெரிய தவறு. அதிக ஷாம்பு பயன்படுத்துவதால் முடி சுத்தமாகாது. எனவே ஷாம்பூவை துளி அளவுகளில் பயன்படுத்த வேண்டும். போதவில்லை என்றால், இரண்டாவது முறை குறைந்த அளவு ஷாம்புவை பயன்படுத்தவும்.
12: அளவுக்கு அதிகமாக ஷாம்பு உபயோகிக்கக் கூடாது. சிறிது நேரம் உச்சந்தலையில் தேய்த்து, முடியை விரல்களால் மசாஜ் செய்து நல்ல பலனைப் பெறலாம். ஷாம்பு போட்டு குளித்த பிறகு உச்சந்தலையில் இயற்கையாக கிடைக்கும் எண்ணெய் பசையை இழக்க நேரிடும். இதனால் முடி வறண்டு போகும். எனவே உங்கள் தலைமுடிக்கு கண்டிஷனர் கட்டாயம் தேவை. கண்டிஷனரைப் பயன்படுத்துவது முடி உடைவதைத் தடுக்கிறது.
Also Read : கீரையை விட இரும்புச்சத்து அதிகமுள்ள 10 வெஜ் உணவுகள்! யார் யாருக்கு எவ்வளவு இரும்புச்சத்து தேவை?
13: பலர் பலவிதமான ஷாம்புகளை முயற்சி செய்கிறார்கள். தாங்கள் பயன்படுத்தும் ஷாம்பு நல்ல பலனைத் தரவில்லை என சிலர் அடிக்கடி வேறு ஷாம்புக்கு மாறுகிறார்கள். இது தவறு. மைல்டு ஷாம்புவை தேர்ந்தெடுப்பதுதான் சிறந்தது.
14: இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை தலைக்கு குளிக்குமாறு அழகு நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இருந்தாலும் தலைமுடி வறண்டுள்ளதாக உணரும் போதெல்லாம் நீங்கள் தலைக்கு குளிக்கலாம். உங்கள் தலைமுடி எண்ணெய் பசையாக மாறினால், தினமுமோ அல்லது 2,3 நாட்களுக்கு ஒருமுறையோ தலைக்குக் குளித்தால் முடிக் கொட்டுவதை நிறுத்தலாம். ஷாம்பு போட்டு குளிக்கும் முன் தலைமுடிக்கு எண்ணெய் தடவுவது நல்லது. இது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.
15: L’OREAL PROFESSIONNEL PARIS Absolut Repair Shampoo, L’Oréal Professionnel Xtenso Care Shampoo, Tresemme Keratin Smooth, Khadi Natural Amla & Bhringraj Shampoo, Kesh King Ayurvedic Anti Hairfall Shampoo, Dabur Vatika Health Shampoo, Mamaearth Onion Hair Fall Shampoo, Matrix Opti.Care Professional Shampoo, Biotique Ocean Kelp Anti Hairfall Shampoo, Indulekha Bringha, Shampoo போன்ற இந்த ஷாம்புகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திப் பார்க்கலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry