ஜாஃபர் சாதிக் நிறுவனத்திற்கும், தமிழ்நாடு பாடநூல் கழக ஒப்பந்ததாரருக்கும் தொடர்பு! ED விசாரணையில் அம்பலம்! சிக்கலில் பள்ளிக்கல்வி அமைச்சர்!

0
149
One of the 21 businesses of Jaffer Sadiq, in which the alleged proceeds of the international drug trafficking operations were infused, supplied geometry boxes and school bags to a contractor of the Tamil Nadu Text Book Corporation, the Enforcement Directorate’s (ED) probe has found.

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாஃபர் சாதிக், போதைப் பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகத்தைப் பயன்படுத்தியுள்ளது அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை சிறப்பு நீதிமன்றத்தில், சாதிக் மற்றும் அவரது சகோதரர் சலீம் உள்பட 11 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஜாஃபர் சாதிக்

சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்ததாகக் கூறப்படும் சட்டவிரோத வருமானங்கள், ஜாஃபர் சாதிக் தான் நடத்தும் 21 தொழில்களில் ஒன்றின் மூலம், தமிழ்நாடு பாடநூல் கழக ஒப்பந்ததாரரின் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாக ED தனது விசாரணை அறிக்கையில் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் மலேசியாவிற்கு சூடோஎபிட்ரைன் மற்றும் கெட்டமைன் போன்ற இரசாயன போதைப் பொருட்களை கடத்தி, அதன் மூலம் பெரும் செல்வம் குவித்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.

எஸ். ரமேஷ் என்பவருடன் இணைந்து 2020 டிசம்பரில் ஜாபர் சாதிக் துவங்கிய Coalescence Ventures என்ற நிறுவனம், நொய்டாவில் உள்ள Matrix என்ற நிறுவனத்திடமிருந்து பொருட்களை வாங்கி, தமிழ்நாடு பாடநூல் கழக ஒப்பந்ததாரரான வடலூரைச் சேர்ந்த Sri Appu Direct என்ற நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளதது. அதாவது Coalescence Ventures என்ற நிறுவனமும் – Sri Appu Direct நிறுவனமும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன. Sri Appu Direct நிறுவனம் ஜியோமெட்ரி பாக்ஸ், பள்ளி பை உள்ளிட்டவைகளை சப்ளை செய்துள்ளது.

Appu Direct நிறுவனம் மீது குற்றஞ்சாட்டப்படாத நிலையில், ED தொடர்ந்து நடத்திய விசாரணையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசின் உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கியதற்கான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இதுகுறித்து கருத்து கேட்டு மின்னஞ்சல் அனுப்பப்பட்டும் Appu Direct நிறுவனம் எந்த பதிலும் சொல்லவில்லை என ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ கூறியுள்ளது.

2022 டிசம்பர் முதல் 2023 ஜனவரி வரையிலான காலக்கட்டத்தில், Coalescence Ventures நிறுவனத்திற்கு, ஜாபர் சாதிக் தனது பங்குதாரரான ரமேஷிடம் 1 கோடியே 90 லட்சம் வரை முதலீடாகக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்தத் தொகை போதைப்பொருள் கடத்தல் வருமானம் என அமலாக்கத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முதலீட்டின் லாபப் பங்கீடு 51:49 என ஜாபருக்கு சாதகமாக முடிவுசெய்யப்பட்டுள்ளது.

ரமேஷுக்கு சொந்தமான ஷெல் நிறுவனமான Green Cosmic Infra மூலம், Sri Appu Direct நிறுவனத்திற்கு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு பாடநூல் கழகத்துக்கான பொருட்கள் Matrix நிறுவனத்திலிருந்து Coalescence Ventures, அதன் பிறகு Green Cosmic Infra மற்றும் பின்னர் Sri Appu Direct நிறுவனத்துக்குச் செல்லும் முறையில் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த Circular Trading சட்டவிரோத வருமானங்களை, வெள்ளையாக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டதாக ED விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Coalescence Ventures நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை ரமேஷ் மேற்பார்வை செய்தாலும், அதன் வங்கி கணக்கு ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் மூலம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. வங்கி விவரங்கள் மற்றும் OTP-கள் அனைத்தும் சலீம் பயன்படுத்திய மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டதாக ED விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Also Read : அதிமுக தலைமையில் அனைவரும் எதிர்பார்க்கும் கூட்டணி! 200 தொகுதிகளில் வெற்றி உறுதி! ஜனவரி மாத இறுதியில் சூறாவளி சுற்றுப்பயணம்! பொதுக்குழுவில் ஈபிஎஸ் அறிவிப்பு!

சாதிக்கின் ஆஸ்திரேலிய போதை வணிக நடவடிக்கைகளுக்கான நபர்களை ஏற்பாடு செய்பவராக ரமேஷ் இருந்துள்ளார் என்று ED மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு (NCB) கூறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமேஷின் கணக்கில் முதலீடாக வந்த ₹15 லட்சம், சுரேஷ் மோகன் எனும் நபரிடமிருந்து வந்ததாக ED அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சாதிக் தனது போதைப்பொருள் வணிகத்தை நியூசிலாந்தில் நடத்துவதற்காக அனுப்ப முயன்றவர்களில் சுரேஷ் மோகனும் ஒருவர்.

இந்த வணிகம் நடைபெற்ற காலகட்டத்தில், திமுக நிர்வாகியாக இருந்த ஜாஃபர் சாதிக், போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்த பணத்தை, வெள்ளையாக்குவதற்கு, தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் மறைமுகமாக உதவி செய்துள்ளதாகவே இதன் மூலம் தெரிய வருகிறது. இதனால் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Source : The New Indian Express

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry