
பல் மருத்துவம் என்பது பழமையான மருத்துவத் தொழில்களில் ஒன்றாகும். கி.மு. 7000களில் சிந்து பள்ளத்தாக்கு நாகரிகத்துடன்கூட காணப்படுகிறது. இருப்பினும்கூட கி.மு 5000 வரை இது ஒன்றும் பெரிதாகப் பேசப்படவில்லை. அதன் பின்னரே பல் மற்றும் பற்சிதைவு தொடர்பான தகவல்கள்/பதிவுகள் கிடைத்தன. சமீப காலமாகத்தான், பல்லின் ஆரோக்கியம், உடலின் ஆரோக்கியத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பது பல ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளன. நவீன பல் மருத்துவத்தின் வளர்ச்சி என்பது பல நூறு ஆண்டுகளுக்கான தொடர்ச்சி ஆகும்.
பல்மருத்துவத் துறையே வேறு. இது பொதுவாக மருத்துவத்தின் கீழ் முன்பெல்லாம் கொண்டுவரப்படுவது இல்லை. பல் மருத்துவர் மற்றும் மருத்துவர் இருவரும் வேறு வேறு படிப்பை படிக்கின்றனர். பெரும்பாலும் எக்ஸ் கதிர்கள் மற்றும் பல் பராமரிப்பு போன்றவை மருத்துவ திட்டங்களின் கீழ் இல்லை. கி.மு.2686களில் எகிப்தில் வாழ்ந்த டாக்டர் ஹெஸி-ரா(Dr Hesy-Ra) என்பவரே உலகின் முதல் ஆவணப்படுத்தப்பட்ட மருத்துவர் ஆவார். பல் மருத்துவத்தின் தந்தை என வால்ஷ் ஜே. ஃபசார்ட்(Walsh J . Fauchard) என போற்றப்படுகிறார். இந்தியாவில் நவீன பல் மருத்துவத்தின் தந்தை என நினைவுகூரப்படுபவர் ரபியுதீன் அகமது.
Also Read : பற்களை எந்த பேஸ்ட்டில், எவ்வளவு நேரம், எப்படி துலக்க வேண்டும்? பல் துலக்கும் தெளிவான வழிமுறைகள்!
பண்டைய பல் மருத்துவம்:
சற்றேறக்குறைய கி.மு. 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பல் மருத்துவம் நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. பழைய சிந்து சமவெளி நாகரிகம் தொட்டு இது பின்பற்றப்பட்டு வந்துள்ளது. தொல்லியல் ஆராய்ச்சிகளின் மூலம் பண்டைய பற்களை ஆராய்ச்சி செய்ததில் கூர்மையான பொருட்களைக் கொண்டு பற்களை துளையிட்டத்திற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. சுமேரிய நாகரிகத்தில் ‘பற்சிதைவு’ என்பது ‘பல் புழுக்கள்’ என்று விவரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனர்கள் ‘அக்குபஞ்சர்’ முறையில் பல் சிகிச்சை செய்து வந்துள்ளனர். ஆரம்ப பல்துலக்கிகளை கண்டுபிடித்த பெருமையும் சீனர்களையே சேரும்.
பண்டைய தமிழர்களுக்கான பல் பராமரிப்பு:
“பல்போனால் சொல் பேச்சு”, “ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி” என்ற பழமொழிகளின் மூலம் பல் பற்றிய புரிதலும், அதனை சுத்தம் செய்ய ஆலங்குச்சி, வேலங்குச்சி போன்ற மரக் குச்சிகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தி உள்ளனர் என்று அறிய முடிகிறது. நவீன மருத்துவத்தில் பல் பராமரிப்பின் முக்கிய அம்சமாக உள்ள, ‘வாய் கொப்பளித்தல்’ என்னும் முறையை நம் முன்னோர்கள் தினசரி வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதிலும் எண்ணெய் கொண்டும், ஆலம்பால் கொண்டும், கொப்பளித்து வந்துள்ளனர். ஆனால் பிற்காலத்தில் செங்கல் தூள், சாம்பல், கரி ஆகியவற்றை பயன்படுத்தி உள்ளனர். இதனை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.
Also Read : வெயிட் குறைக்கனுமா..? இதை டிரை பண்ணுங்க, கைமேல ரிசல்ட்..! மரணத்தையே தள்ளிப்போடும் கருஞ்சீரகம்…!
மாயன் நாகரிகத்தில் பற்களின் பங்கு:
மெசோ அமெரிக்காவின் பாரம்பரிய நாகரிகங்களில் மிகவும் பிரபலமானவர்கள் மாயன்கள். இவர்கள் தங்களின் பற்களை, துளையிட்டு வைரம், வைடூரியம் போன்ற விலை உயர்ந்த கற்களை பதித்து வைத்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இன்று நவீன மருத்துவத்தில் இது போன்ற அழகியல் முறைகளின்பால் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
தடயவியல் பல் மருத்துவம்:
மரணத்திற்குப் பிறகும் நீண்ட ஆண்டுகளுக்கு அழியாமல் இருக்கக்கூடிய ஓர் உறுப்பாக பற்கள் இருப்பதினால், இது தொல்லியல் மற்றும் தடவியல் மருத்துவத்தில் பெரும் பங்கு வகித்து வருகிறது. இதற்கு எடுத்துக்காட்டாக 35 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கற்கால மனிதனின் பல்லை கொண்டு அவன் வாழ்ந்த காலகட்டத்தையும், வயதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. பல குற்ற வழக்குகளில், பற்களின் தடயத்தை கொண்டு குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிகிறது . பெரும் இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் அழிவுகளின் மூலம் இறந்தவர்களை அடையாளம் காண பற்கள் பயன்படுகிறது.
Also Read : மத்திய அரசின் மெடிக்கல் இன்ஷுரன்ஸ்! ஆண்டுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு பெறுவது எப்படி?
ஜார்ஜ் வாஷிங்டன்:
வரலாற்றில் பல் மருத்துவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுபவர் அமெரிக்க அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன். இவர் அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட ‘பல் செட்டை’ அணிந்து இருந்ததாக மக்கள் நம்பினர். ஆனால் அவர் மாற்றுப் பற்கள் பொருத்தி இருந்தார் என்றும், யானை தந்தங்களால் செய்யப்பட்ட பற்களையும் தங்கத்தினால் செய்யப்பட்ட பற்களையும் பொருத்தி இருந்தார்.
கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்:
பழைய நாகரிகங்களில் ஒன்றான மெசபடோமியாவில் ஆட்சி புரிந்த ஹமுராபி என்ற அரசன் முதன்முதலில் சட்ட நெறிமுறையை கல்வெட்டில் பொறித்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவர் குற்றம் செய்தால் அதற்கு தண்டனையாக அவர்களின் உறுப்புகளை வெட்டி எடுப்பதை பழக்கமாகக் கொண்டு இருந்துள்ளனர். அதனை சட்ட நெறிப்படுத்தி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இதனைக் குறிக்கும் விதமாக “கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்” என்று எழுதப்பட்டுள்ளது. இன்றளவும் மக்களிடத்தில் இந்த சொலவடை பயன்பாட்டில் உள்ளது.
கட்டுரையாளர் : டாக்டர் செந்தில் குமார், MDS (வாய், தாடை, முகம் அறுவை சிகிச்சை நிபுணர்), மூத்த உதவிப் பேராசிரியர், தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை.
தொடர்புக்கு : No : 15/1, சன்னதி தெரு, வில்லிவாக்கம், சென்னை.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry