உடல்நலக் குறைவால் புகைபிடிப்பதை நிறுத்த விரும்பினாலும் அல்லது புகைபிடிப்பதால் உடலில் ஏற்படும் தீமைகள் குறித்து அறிந்திருந்தாலும், பலரால் அதை நிறுத்த முடியவில்லை. இதற்கு முக்கியக் காரணம் நிகோடின். நிக்கோடின் மூளைக்கு அனுப்பும் செய்திகள் பழக்கத்தை உருவாக்குவதிலும், பராமரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. புகைப்பிடித்தல் அல்லது புகையிலை பயன்படுத்தும்போது, மூளை நிகோடினின் விளைவுகளுக்கு பழகிவிடுகிறது, எனவே அதே அளவு மகிழ்ச்சியை அடைய அதிக அளவு நிகோடின் தேவைப்படுகிறது.
நிகோடினுக்கு அடிமையானவர்கள் அதை எளிதில் விட்டுவிட முடியாது. உடலில் அதிக அளவு சேரும் நிகோடின் புற்றுநோய், சுவாசம், இருமல் மற்றும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிக அளவு நிகோடின் குருட்டுத்தன்மை, பக்கவாதம் மற்றும் காது கேளாத தன்மையை ஏற்படுத்தும். சில ஆரோக்கியமான உணவுகள் உடலில் உள்ள நிகோடின் உள்ளடக்கத்தை அகற்ற உதவுகின்றன.
* டோபமைன்: நிக்கோடின் மூளையில் டோபமைன்(Dopamine) அளவை அதிகரிக்கிறது. டோபமைன் என்பது மகிழ்ச்சி, திருப்தி போன்ற உணர்வுகளுடன் தொடர்புடைய ஒரு நரம்பியக்கடத்தல். இதனால், புகைப்பிடித்தல் அல்லது புகையிலையை பயன்படுத்துவதால் தற்காலிகமாக நன்றாக உணர வைக்கிறது.
* நிக்கோடினிக் அசிடைல்கொலின் ஏற்பி (Nicotinic Acetylcholine Receptor): நிக்கோடின் மூளையில் உள்ள இந்த ஏற்பிகளுடன் பிணைந்து, பல்வேறு உடல் செயல்பாடுகளை பாதிக்கிறது. இதனால், இதயத் துடிப்பு அதிகரிப்பு, இரத்த அழுத்தம் அதிகரிப்பு, சுவாசம் அதிகரிப்பு போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.
* நரம்பியக்கடத்தல் பாதைகள் (Neurotransmitter Pathways): நிக்கோடின் மூளையில் உள்ள பல்வேறு நரம்பியக்கடத்தல் பாதைகளை பாதிக்கிறது. இது மனநிலை, கவனம், நினைவாற்றல் மற்றும் பசியை பாதிக்கிறது.
மருந்து,மாத்திரை இல்லாம Lungsஐ காப்பாத்திக்கோங்க|Breathing Exercise for #Lungs|AkilaBalaji
உடலில் நீங்கள் சேமித்து வைத்திருக்கும் நிகோடினை வெளியேற்றுவதற்கான சில சிறந்த உணவுகள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், புகைக்கும் பழக்கத்தை விடாமல், புகையிலை பயன்படுத்துவதை நிறுத்தாமல், இந்த உணவுகளை உட்கொள்வது மட்டும் பயன்தராது. மேலும் நீண்ட ஆண்டுகளாக புகையிலையின் பிடியில் சிக்கியிருப்போருக்கு, இந்த உணவுகள் சற்றே ஆறுதல் தரலாமே தவிர, முழுமையான தீர்வைத் தந்துவிடாது.
1. ஆரஞ்சு
ஆரஞ்சு சாப்பிடுவது உடலில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்தின் சரியான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. இது குடல் இயக்கத்தின் போது உடலில் உள்ள நிகோடின் உள்ளடக்கத்தை ஓரளவு வெளியேற்றுகிறது.
2. இஞ்சி
நிகோடின் உள்ளடக்கம் உடலில் சேர்க்கப்படும்போது, அதனை தடுக்க இஞ்சி உதவுகிறது. புகைபிடிப்பதால் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு இஞ்சி மருந்தாகும். நீங்கள் புகைபிடிப்பதை நிறுத்த விரும்பினால், உங்கள் வாயில் சிறிது இஞ்சியை அடக்கிக் கொள்ளவும். உணவில் அதிகமாக இஞ்சி சேர்த்துக்கொள்வது சிகரெட் பிடிக்கும் ஆசையை குறைக்கும்.
3. கேரட்
கேரட்டில் வைட்டமின் ஏ, சி, பி மற்றும் கே உள்ளன. இது புகைபிடிப்பதால் சேதமடைந்த நரம்புகளை சரி செய்கிறது. சிகரெட் பிடிப்பதால் சருமம் மங்கிவிடும். சிகரெட் புகைப்பதை நிறுத்துங்கள். கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் உள்ள நிகோடின் உள்ளடக்கத்தை குறைக்க முடியும்.
4. எலுமிச்சை
புகைப்பிடித்தல் உடலில் உள்ள செல்களை சேதப்படுத்துகிறது. சேதமடைந்த செல்கள் மற்றும் நரம்புகளை சரிசெய்யவும் எலுமிச்சை உதவுகிறது. புகைப்பிடித்தல் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. எலுமிச்சை சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
5. ப்ரோக்கோலி
ப்ரோக்கோலியில் வைட்டமின் பி5 மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை வளர்சிதை மாற்றத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். இது உடலில் உள்ள நிகோடின் உள்ளடக்கத்தை நீக்கி, பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கக்கூடும்.
6. குருதிநெல்லி
இந்த பழம் உண்மையில் புகைபிடிப்பதை நிறுத்துகிறது. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்களுக்கு சிகரெட் பிடிக்கும் ஆசையும் குறையும்.
7. கிவி பழம்
கிவி பழத்தில் உள்ள வைட்டமின் ஏ, சி மற்றும் ஈ உடலில் உள்ள நிகோடின் உள்ளடக்கத்தை அகற்ற பெரிதும் உதவுகிறது. புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடிக்கும்போது மனச்சோர்வடைந்திருப்பார்கள், அதைப் போக்க இந்த கிவி பழம் உதவுகிறது.
8. கீரை வகைகள்
புகைப்பிடிப்பவர்களுக்கு தூக்கம் வராது. அதனால் உங்கள் உணவில் கீரையை சேர்த்துக்கொள்ளுங்கள். கீரையில் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் B9 உள்ளது, இது உங்களை நன்றாக உணர வைக்கிறது. கீரைகள் உடலில் உள்ள நிகோடின் அளவை குறைக்கும், இதனால் நன்றாக தூங்கவும் முடியும்.
9. மாதுளை
மாதுளைப் பழம் உண்பதால் உடலில் இரத்த அணுக்கள் அதிகரித்து இரத்தம் சுத்தமாகும். மாதுளை ஒரு கரையாத நார்ச்சத்து என்பதால், குடலில் செரிமானத்திற்குப் பிறகு கழிவுகளுடன் எளிதில் உறிஞ்சப்படுகிறது. மாதுளையின் உட்புற விதையில் நார்ச்சத்து சேமிக்கப்படுவதால், உடலில் உள்ள நிகோடின் உள்ளடக்கம் குறைகிறது.
10. உடற்பயிற்சி
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி செய்யும்போது, ரத்த ஓட்டம் சீராகத் தொடங்கும், வியர்வை அதிகமாக வெளியேறும். வியர்வை வெளியேறும்போது, அதன் வழியாக நிக்கோட்டினும் வெளியேற்றப்படும். சீராக உடற்பயிற்சி செய்தால், சுவாசப் பிரச்னைகள் மற்றும் அதை ஏற்படுத்தும் தொற்றுகள் அனைத்தும் சரியாகும்.
தண்ணீருக்கும் கேன்சருக்கும் உள்ள ஆச்சரியமான தொடர்பு! Powerful Truth about Cancer | Listen Fully
Disclaimer : This information is intended for informational purposes only and should not be construed as medical advice. Please consult with your healthcare provider for personalised advice and support regarding smoking cessation and overall health management.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry