பழநியில் முத்தமிழ் முருகன் மாநாடு! ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்தல், பார்வையாளராக கலந்துகொள்வது எப்படி?

0
71
International conference on Lord Murugan to be held on August 24, 25 in Palani

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை, உலக முருக பக்தர்களையும் சிந்தனையாளர்களையும் ஒருங்கிணைத்து வரும் ஆகஸ்ட் மாதம் 24, 25-ம் தேதிகளில் பழநியில் முத்தமிழ் முருகன் மாநாட்டை நடத்த உள்ளது.

இந்த மாநாட்டின் மூலம் முருக வழிபாட்டின் உள்ளுறை நெறிகளை உலகெங்கிலும் பரப்புதல், முருகத் தத்துவக் கோட்பாடுகளை யாவரும் எளிமையாக அறிய உதவுதல், மேன்மை பொலியும் முருகனடியார்களை உலகளாவிய அளவில் ஒருங்கிணைத்தல், முருக வழிபாட்டு நெறியை புராணங்கள், இலக்கியங்கள், திருமுறைகள், திருப்புகழ், சைவ சித்தாந்த சாத்திரங்கள் ஆகியவற்றிலிருந்து ஆழ்ந்தெடுத்து அதன் கருத்துகளை உலகறியப் பரப்புதல், முருகக் கோட்பாடுகளை இளைஞர்கள் மனத்தில் பதித்து வைத்து உலகை உயர்த்த வழி வகுத்தல் என்னும் சீரிய கொள்கைகளை முன்வைத்து இந்த மாநாடு நடத்தப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சின்ன வயசுல புத்தகத்துல மயிலிறகை வைத்த அனுபவம் இருக்கா? ஆமான்னா இது உங்களுக்கானதுதான்!

இந்தக் கருத்தரங்கில் முருகப்பெருமான் தொடர்புடைய ஆய்வுக்களங்களை மையமாகக் கொண்டு கட்டுரைகள் சமர்ப்பிக்கலாம். உதாரணமாக, உலகெங்கும் நிலவும் முருக வழிபாடு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முருகன், சங்க இலக்கியங்களில் சேயோன், இலக்கியங்களில் முருகன் வழிபாடு, கல்வெட்டுகளில் முருகவேள், வேத மரபிலும் – தமிழ் மரபிலும் முருக வழிபாடு, சித்தர்கள் தலைவன், செந்தமிழ் முருகன், நாட்டார் வழக்காறுகளில் முருக வழிபாடு, முருகன் அடியார்கள் குறித்த தகவல்கள் போன்ற தலைப்புகளில் கட்டுரைகள் அமையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுரைகள் சமர்ப்பிப்பது எப்படி?

மாநாட்டுக்கான ஆய்வுக்கட்டுரைகள் முருகன் தொடர்பானவையாக மட்டுமே இருக்க வேண்டும். கட்டுரைகள் 6 பக்கங்களுக்கு மிகாமல் அமைய வேண்டும். A4 அளவில், அச்சில் 1.5 வரி இடைவெளியில், எழுத்தளவு 12-ல் (Font Size 12) அமைதல் வேண்டும். கட்டுரைகள் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்கலாம். கட்டுரைகள் மின்னச்சு (word file) வடிவில் இருத்தல் வேண்டும்.

தமிழ் யூனிக்கோடு (Unicode) எழுத்துருவிலும், ஆங்கிலம் டைம்ஸ் நியூ ரோமன் (Times New Roman) எழுத்துருவிலும் அமைதல் வேண்டும். கட்டுரையில் மேற்கோள் குறிப்புகள், சான்றெண் விளக்கம், பார்வை நூல்கள் ஆய்வு நெறிமுறைப்படி அமைதல் வேண்டும். கட்டுரையின் முன்பக்கத்தில் கட்டுரைத் தலைப்பு, கட்டுரையாளரின் பெயர் மற்றும் தகுதிப்பாடுகள் போன்ற விவரக்குறிப்புகள் அளிக்கப்பட வேண்டும். வேண்டிய விவரங்கள் – பெயர், முகவரி, எந்த நிறுவனம், கடவுச் சீட்டு எண் (Passport Number), தொடர்பு எண், E-Mail முகவரி. கட்டுரையில் மின்னஞ்சல் முகவரி, கைபேசி எண், புலன எண் (WhatsApp) மற்றும் புகைப்படம் மிக அவசியம் இடம்பெற வேண்டும்.

Also Read : குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!

சுருக்கக்குறிப்பு மற்றும் முழுக் கட்டுரை இணையதளம் வாயிலாக வந்து சேர வேண்டிய இறுதி நாள்: 30.06.24.
கூடுதல் விவரங்களுக்கு mmm2024palani@gmail.com மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
கீழ்க்கண்ட எண்களில் தொடர்புகொண்டும் கட்டுரை சமர்ப்பிப்பது தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம்.

முனைவர் வாசுகி – +91 96989 38862
முனைவர் தமிழரசி – +91 90950 32564
முனைவர் சசிக்குமார் – +91 94986 65116
முனைவர். எஸ்.கார்த்திகேயன்- +91 7397521683
முனைவர். மா. மீனாட்சி சுந்தரம் – +91 7010408481

மேலும் விவரங்களுக்கு 1800-425-1757 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையாளர்கள் மட்டுமே பதிவுக் கட்டணம் இல்லாமல் அனுமதிக்கப்படுவர். கட்டுரை தேர்வு செய்யப்பட்டது குறித்த தகவல் கட்டுரையாளர்களுக்கு பின்னர் தெரிவிக்கப்படும்.

கட்டுரை சமர்ப்பிக்க வேண்டிய முகவரி: https://hrce.tn.gov.in/eservices/mmic_registration.php?id=1

மாநாட்டில் பார்வையாளராகக் கலந்துகொள்ளவும் முன்பதிவு அவசியம்.
பார்வையாளர் பதிவுப் படிவம்: https://hrce.tn.gov.in/eservices/mmic_registration.php?id=2

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry