மத்திய அரசு ஆயுஷ்மான் பாரத் யோஜனா எனும் மருத்துவ காப்பீடு திட்டத்தை கடந்த 2018ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த திட்டத்திற்கு ரூ.8000 கோடிக்கு மேல் மத்திய அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு பெறலாம். இதை 10 லட்சம் ரூபாயாக உயர்த்துவதற்கான அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெறவுள்ளது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்குத் தேவையான ஆவணங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.
தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வர் காப்பீடு திட்டத்தை போல் மத்திய அரசின் இந்த ஆயுஷ்மான் யோஜனா பாரத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. மொத்தம் 1354 சிகிச்சைகளுக்கு இந்த அட்டையை பயன்படுத்தலாம். 17 ஆயிரம் மருத்துவமனைகள் இந்தத் திட்டத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா முழுவதிலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளிலும், 600க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும் சேவையைப் பெறலாம். 2அறுவை சிகிச்சைகள், மன ஆரோக்கியம், பல் தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்டவைகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற முடியும்.
Click Here : Ayushman Bharat Hospitals List in Tamil Nadu
Click Here : Ayushman Bharat Hospitals List in Tamil Nadu – PDF
இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எளிதுதான். முதலில் https://abha.abdm.gov.in/abha/v3/ என்ற மத்திய அரசின் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த இணையதளத்திற்குச் சென்றதும் Create ABHA Number என இருக்கும். அதை கிளிக் செய்து உங்களுடைய ஆதார் எண் அல்லது டிரைவிங் லைசன்ஸை ஆதாரமாக கொடுக்கலாம். ஆதார் எண்ணை வைத்து உள்நுழையும் போது உங்களுடயை ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி எண் வரும்.
அந்த எண்ணை பதிவிட்டு உள்ளே செல்ல வேண்டும். அங்கு உங்களுக்கான மருத்துவ காப்பீடு அட்டை இருக்கும். அதை டவுன்லோடு செய்து கொள்ளலாம். அடுத்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தனிநபர்களையும் இந்த காப்பீடு திட்டத்தில் சேர்க்கவும், காப்பீட்டுத் தொகையை ஆண்டுக்கு ரூ.10 லட்சமாக உயர்த்தவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 23ந் தேதி பட்ஜெட்டில் இடம்பெறலாம்.
இன்னொரு முறையிலும் மருத்துவ காப்பீடு அட்டையை பெறமுடியும். முதலில் பிளே ஸ்டோரில் PM-JAY செயலியைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்னர் செயலியில் சென்று உள்நுழை என்பதை கிளிக் செய்யவும். ஆயுஷ்மான் செயலியில் பயனாளி விருப்பத்தை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை கொடுத்தால் ஓடிபி வரும்.
அதன் பிறகு செயலியில் கேட்கப்படும் உங்கள் மாநிலம், மாவட்டம் ஆகியவற்றை டைப் செய்து ரேஷன் கார்டு எண் போன்ற தகவல்களை அளித்துவிட வேண்டும். பின்னர் அங்கீகாரம் பெற ஆதாரின் ஓடிபி, கைரேகை, கருவிழி ஸ்கேன், முக அங்கீகாரம் ஆகிய அனைத்து விருப்பங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். ஆதார் அட்டையுடன் மொபைல் எண் இணைக்கப்பட்டிருந்தால் ஆதார் ஓடிபி என்பதை தேர்வு செய்யவும். இணைப்பு இல்லை என்றால் முக அங்கீகாரம் (face recognition)என விருப்பத்தை தேர்வு செய்யவும். யாருடைய பெயரில் கார்டு எடுக்கப்பட வேண்டுமோ அந்த நபரின் புகைப்படத்தை எடுத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு உங்கள் முகவரி, மொபைல் எண்ணை கொடுக்க வேண்டும். இப்போது ஆயுஷ்மான் திட்டம் தயாரிப்பதற்கான உங்கள் eKYC செயல்முறை நிறைவடைந்தது, இதன் மூலம் இந்த திட்டத்தை பெற தகுதி உடையவர் என்றால் தானாக அங்கீகரிக்கப்படும். அதன் பிறகு கார்டை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry