சிந்து சமவெளி நாகரிகத்தைச் சேர்ந்த தமிழக இருளர் பழங்குடிகள்! தொல் திராவிட மொழி பேசியதாக ஆய்வாளர்கள் தகவல்!

0
51
The idea of dividing the sky into twenty seven (3x3x3) divisions (nakshatra) is found in the Vedas but not in the Avesta. This was clearly a Harappan memory. The months of the Hindu calendar are named after star clusters near which the full moon occurred when the calendar was being formulated.

5.00 Mins Read : ‘Ahimsa: 100 Reflections on the Harappan Civilization’ என்ற தலைப்பில் புத்தகம் வெளியாகியுள்ளது. இந்த நூலை எழுதியவர் மும்பையைச் சேர்ந்த 53 வயதான தேவ்தத் பட்நாயக். இதற்கு முன்பாக இந்துத் தொன்மங்கள் குறித்த பல நூல்களை இவர் எழுதியுள்ளார்.

சிந்து சமவெளி நாகரிம் எனப்படும் ஹரப்பா நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது இந்திய வரலாற்றின் துவக்கத்தை மாற்றிப்போட்டது எப்படி? என அவர் சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார். அந்த புத்தகத்தில், “பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பாக, ‘பாரதம் அல்லது ஜம்புதீபம்’ என்ற இந்த நாட்டில் ஏழு நதிகள் ஓடின. மனு வழியில் வந்த முனிவர்களும், அரசர்களும்தான் இந்த நாட்டை காலம்காலமாக ஆட்சி செய்தனர்.

Devdutt Pattanaik

அவர்கள் சமஸ்கிருதம் பேசியதோடு, சனாதனத்தையும், வேதங்களில் கூறப்பட்ட வர்ணாசிரமத்தையும் பின்பற்றினர். இந்தியா மீது படையெடுத்த யவனர்கள், இஸ்லாத்தை இங்கே பரப்பியதோடு கோவில்களை இடித்து, மசூதிகளைக் கட்டினர். சமஸ்கிருதத்திற்குப் பதிலாக பாரசீக மொழியைப் பரப்பினர்.

மொழியியலில் நடந்த ஆய்வுகளில், சமஸ்கிருதத்திற்கும் லத்தீன் மொழிக்கும் இருக்கும் தொடர்பு கண்டறியப்பட்டு இந்தோ – ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்ற புரிதல் உண்டானது. விந்திய மலைகளுக்குத் தெற்கே, புதிய மொழிக் குடும்பங்கள் இருந்ததும் கண்டறியப்பட்டதால், சமஸ்கிருதம் ஒன்றும் இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளின் தாய் அல்ல என்ற புரிதல் கிடைத்தது.

Getty Image

1924-இல் சிந்துச் சமவெளி நாகரிகத்தை கண்டுபிடித்து அறிவித்தார் ஜான் மார்ஷல். சுமேரிய நாகரிகத்தோடு இருந்த சில ஒற்றுமைகள் காரணமாக, இதன் காலகட்டம் சுமார் 4,500 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று முடிவானது. ஆகவே, இந்தியாவின் வரலாறு 4,500 அல்லது 5,000 ஆண்டுகளுக்கு முன்பு துவங்குகிறது என்பது உறுதியானது.

இந்த நிலையில், வேதங்களையும் ஹரப்பா சிதைவுகளையும் வைத்து பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் ஒரு கருத்தை முன்வைத்தனர். அதாவது “சமஸ்கிருதம் பேசிய வேத கால மக்கள், திராவிட மொழி பேசக்கூடிய ஹரப்பர்களை ஒடுக்கினார்கள். அப்படித்தான் ஜாதி உருவானது” என்றார்கள். இது ஒரு பிரபலமான கருதுகோள். ஆனால், இதில் ஒரு பிரச்னை இருக்கிறது. அதாவது வேத காலத்திற்கும், ஹரப்பா நாகரிகம் முடிவுக்கு வந்ததற்கும் இடையில் சுமார் 500 வருட இடைவெளி இருந்தது.

Also Read : பால்பாயின்ட் பேனா வரலாறு! பேனாவை கண்டுபிடித்து புரட்சி ஏற்படுத்திய பத்திரிகையாளர்!

ஆகவே, தாமிர காலத்தைச் சேர்ந்த ஹரப்பா நாகரிகம் கி.மு. 2500லிருந்து 2000வது ஆண்டுவரை செழித்திருந்தது என்பதும், சுமேரியாவுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்தது என்பதும் உறுதி. அந்த நாகரிகம் அழிந்து போனதற்கு காலநிலை மாற்றம், ஆறுகள் இடம் மாறியது, பருவமழையில் ஏற்பட்ட மாற்றம், புதிய வணிகப் பாதைகள் கண்டறியப்பட்டது, சுமேரியாவில் தேவை குறைந்தது போன்ற பல காரணங்கள் இருக்கலாம்.

ஆகவே, ஆரியர்கள் படையெடுப்பால் ஹரப்பா நாகரிகம் அழியவில்லை. ஹரப்பா நாகரிகத்தின் அழிவிற்கு சில நூற்றாண்டுகளுக்குப் பிறகே, ஆரியர் வருகை நிகழ்ந்தது. இவர்கள் குறுக்குக் கம்பிகளுடன் கூடிய சக்கரங்களையும், குதிரைகளையும் இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார்கள். ஆகவே, பிரிட்டிஷாரைப் போலவே, முகலாயர்களைப் போலவே, வேதங்களை இயற்றிய ஆரியர்களும் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவர்கள்தான்.

மொழிகளை அறிவியல் ரீதியாகப் படிப்பது, பொருட்களின் பழமையை ஆய்வு செய்வது போன்றவற்றில் ஐரோப்பியர்கள் முதலில் ஈடுபட்டதற்குக் காரணம், “பைபிளை உண்மை என்று நிறுவுவதற்காகத்தான், உலகம் கி.மு. 4004ல்தான் தோன்றியது என நிரூபிப்பதற்காகத்தான். ஆனால், விரைவிலேயே வேதங்கள் அதைவிடப் பழமையானவை எனத் தெரிந்தது. ஹரப்பா நாகரிகம் இவை இரண்டையும்விட பழமையானது, ஹரப்பாவைவிட பழமையானது சுமேரிய நாகரிகம்.

பிரிட்டிஷ் அகழ்வாராய்ச்சியாளர்கள் கிறிஸ்தவர்கள் என்பதால் கடந்த காலத்தை படையெடுப்புகளின் பார்வையிலேயே பார்த்தார்கள். ஹரப்பா நாகரிகத்தை துறவிகளால் கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நாகரிகமாக பார்க்க இயலவில்லை. விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருவாயை வைத்து, கோவில்களை அடிப்படையாகக் கொண்ட இந்து மதம் உருவாவதற்கு முன்பாக, இந்தியாவின் வளம் என்பது வர்த்தகத்திலிருந்துதான் வந்தது.

ஹரப்பா நாகரிகம் என்பது தனித்த ஒன்றல்ல. கி.மு. 3000லிருந்து கி.மு. 1200 வரை நிலவிய மிகப் பெரிய வர்த்தக நடவடிக்கையின் ஒரு பகுதி. கி.மு. 2500லிருந்து கி.மு. 2000வரை சுமார் 500 ஆண்டுகள் இந்த நாகரிகம் உச்சத்தில் இருந்தது. இந்த காலகட்டத்தில், லாபிஸ் லாஸுலி எனப்படும் அரிய நீலக்கற்களும், வெள்ளீயமும் இங்கே மட்டுமே கிடைத்தன.

ஐரோப்பிய கிழக்கிந்தியக் கம்பனிகள் செய்ததுபோல, சந்தைகளை வசப்படுத்த ஹரப்பா வர்த்தகர்கள் ஒருபோதும் படைபலத்தைப் பயன்படுத்தவில்லை. வன்முறைக்கு எதிரான முதல் கலைப்படைப்பை இவர்களே உருவாக்கி இருக்கலாம். ஹரப்பா நகரங்களுக்குள் யுத்தம் நடந்ததாக எவ்வித ஆதாரமும் கிடைக்காத நிலையிலும், ஒப்பீட்டு அளவில் அந்த நாகரிகம், ஒரு அமைதியான நாகரிகமாக இருந்திருக்கலாம் என்பதில் தொல்லியலாளர்களுக்கு முழு நம்பிக்கை இல்லை.

ஹரப்பாவில் இருந்த சமூகம், வர்த்தகமும், துறவும் இணைந்த ஒரு சமூகமாக இருந்திருக்கலாம். வர்த்தக வெற்றி, செல்வம் இவற்றின் மூலம் அதிகாரம் கிடைக்கும் அதே நேரத்தில், அவற்றைத் துறப்பதன் மூலமாக தார்மீக அதிகாரம் அந்த சமூகத்தில் கிடைத்திருக்கலாம். ஒட்டுமொத்த நாகரிகமும் துறவிகளால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கலாம். இந்தத் துறவிகள், வர்த்தகப் பின்னணியில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம். இவர்கள் வன்முறையை நாடாத, சமூக ரீதியான கட்டுப்பாடுகளில் சிக்காதவர்களாக இருந்திருக்கலாம்.

சுமேரிய, எகிப்திய நாகரிகம் போல அச்சுறுத்தும் வகையிலான மிகப் பெரிய கட்டடங்கள், அரண்மனைகள், கல்லறைகள் ஹரப்பாவில் இல்லை. ஹரப்பாவில் காதல் சார்ந்த சித்திரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஹரப்பா மக்கள் வண்ணமயமான ஆடைகளை, நகைகளை விரும்பினார்கள். வாசனை திரவியங்களையும் பயன்படுத்தினார்கள். விளையாட்டு, இசை போன்றவை அவர்களுக்குப் பிடித்திருந்தன. இருந்தபோதும் பாலியல், காதல் போன்றவற்றை தங்கள் கலைகளில் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.

பல பழைய கலாசாரங்களில், ஆகாயத்தின் வடபகுதியில் தெரியும் பிரபலமான ஏழு நட்சத்திரத் தொகுப்பின் சுழற்சியை ஹரப்பர்கள் அறிந்திருந்தனர். இந்த நட்சத்திரங்கள் சப்தரிஷி மண்டலமாகவும், இதன் சுழற்சியின் வடிவம் ஸ்வஸ்திகாவாகவும் வேதங்களில் குறிப்பிடப்படுகிறது. ஹரப்பா முத்திரைகளிலும் இந்த ஸ்வஸ்திகா சின்னம் காணப்படுகிறது. ஆனால், இதன் பொருள் இன்னமும் புரியவில்லை.

வானத்தை 27 பகுதிகளாக பிரிப்பது வேதங்களில் இருக்கிறது. பௌர்ணமிக்கு அருகில் எந்த நட்சத்திரம் இருக்கிறதோ, அந்த நட்சத்திரங்களின் பெயர்கள் இந்து மாதங்களுக்குச் சூட்டப்பட்டன. இப்படி மாதங்களுக்கு பெயர் சூட்டும் வகையிலான நட்சத்திர அமைப்பு கி.மு. 3,000வாக்கில் இருந்திருக்கலாம் என்கிறார்கள் வானியலாளர்கள். அந்த காலகட்டத்தில் வேதங்கள் உருவாகவில்லை. ஆகவே ஹரப்பர்கள்தான், பிற்காலத்தில் இங்கு வந்த ஆரியர்களுக்கு வானத்தை நட்சத்திரங்களின் அடிப்படையில் பிரிக்கும் முறையைச் சொல்லியிருக்க வேண்டும்.

ஹரப்பா நாகரிகத்தை சிந்து – சரஸ்வதி நாகரிகம் என பலர் அழைக்கின்றனர். இவர்களைப் பொருத்தவரை தற்போது பாகிஸ்தானிலும், இந்தியாவின் ஹரியானாவிலும் பாயும் கக்கர் – ஹக்ரா நதியே, ஹரப்பா நாகரிக காலத்தில் சரஸ்வதி நதியாக ஓடியது என்கிறார்கள். ரிக் வேதத்தில் சரஸ்வதி என்ற நதி ஐம்பது இடங்களில் குறிப்பிடப்படுகிறது.

இப்போதும் தரைக்கு அடியில் இந்த சரஸ்வதி நதி ஓடுவதாகவும், திரிவேணி சங்கமத்தில் கங்கை – யமுனையுடன் சங்கமிப்பதாகவும் அவர்கள் நம்புகிறார்கள். ஆகவே, ஹரப்பா நாகரிகத்தை வேதகால நாகரிகம் என குறிப்பிட வேண்டும் என்கிறார்கள் இவர்கள். ஆனால், காலவரிசை இந்தக் கருத்துக்குப் பொருத்தமாக இல்லை. ஹரப்பா நாகரிகம் கி.மு. 2,000வது ஆண்டுக்கு முன்பு செழிப்பாக இருந்த நாகரிகம். வேதப் பாடல்கள் கி.மு. 1,000வது ஆண்டில்தான் இயற்றப்பட்டன.

பருத்தி ஆடைகள், நல்லெண்ணெய், தைப்பதற்கான ஊசி, செங்கல் செய்வதற்கான அச்சு, மழை நீர் சேகரிப்பு, பொதுவான குளியல் இடங்கள், மையப்படுத்தப்பட்ட வடிகால் வசதிகள், பொது இடத்தில் குப்பைத் தொட்டிகள், திறந்தவெளி அரங்குகள், தங்கத்திற்கான உரைகல், சிலைகளைச் செய்வதற்கான மெழுகு அச்சு, மசாலா பொருட்கள், தந்தத்தால் ஆன பொருட்கள், சேவல் சண்டை, தாயம் போன்றவை ஹரப்பா நாகரிக காலத்தில்தான் உருவாயின.

ஹரப்பாவின் வாழ்வாதாரமே சுமேரியாவுடனான வர்த்தகத்தைத்தான் சார்ந்திருந்தது. சுமேரியக் கோவில்களுக்குத் தேவையான பொருட்களைத் தயாரித்து அளிப்பதற்காக சிந்து நதிக்கரையில் தொழிற்சாலைகள் இயங்கின. அக்கேடிய சாம்ராஜ்யம் கி.மு. 2300 வாக்கில் சுமேரியாவைக் கைப்பற்றிய போதும் ஹரப்பாவில் இருந்து ஏற்றுமதி தொடர்ந்தது. ஆனால், அக்கேடிய சாம்ராஜ்ஜியம் கி.மு. 2,000ல் வீழ்ந்த போது, சுமேரிய நகரங்களால் தனித்துச் செயல்பட முடியவில்லை. இதனால் ஹரப்பாவின் பொருட்களுக்கான தேவை குறைந்து, அந்த நாகரிகம் வீழ்ச்சியடைய ஆரம்பித்தது.

ஹரப்பா நாகரிகத்தின் பரப்பளவு எகிப்திய நாகரிகத்தின் பரப்பைப்போல இருபது மடங்கு பெரியது. சுமேரிய நாகரிகத்தைப் போல பத்து மடங்கு பெரியது. இதில் சிறிதும் பெரிதுமான பல குடியிருப்புகள் அடங்கியிருந்தன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான தரப்படுத்துதலை சுமார் 20 தலைமுறைகளுக்குப் பின்பற்றின.

அதாவது ஒரே மாதிரியான நகர வடிவமைப்பு, வீடு வடிவமைப்பு, முத்திரைகள், தயாரிப்பு முறைகள், பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய உற்பத்தியாளர்கள், விநியோகிஸ்தர்கள், பொருட்களை எடுத்துச் செல்பவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய குறியீடுகள், புதைக்கும் முறைகள், பானைகள் ஆகியவற்றை இவர்கள் கொண்டிருந்தார்கள். ஆனால், சுமேரிய நாகரிகம் வீழ்ந்தபோது, இவை எதற்கும் தேவையில்லாம்ல போனது.

Bathing platforms, a well, drains, and the remains of a curved drainage wall at Harappa. | Photo Credit: N. Ram
Image – Britannica

ஹரப்பா நாகரிகத்தின் மிகவும் ஆர்வமூட்டக்கூடிய பகுதி, இங்கு கிடைத்த எழுத்துகள். மொத்தம் 400 – 600 தனித்துவமிக்க எழுத்து வடிவங்கள் இருந்தாலும், சுமார் 50 எழுத்துகளே திரும்பத் திரும்ப பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஒரு வரியில் ஐந்து முதல் 20 வார்த்தைகளே இருக்கின்றன. இந்த எழுத்துகளோ, சின்னங்களோ விருப்பப்படி பதிக்கப்படவில்லை. அவற்றில் ஒரு ஒழுங்கு (இலக்கணம்?) இருந்தது. வர்த்தகம், மதம் தொடர்பாகவே இவை எழுதப்பட்டிருந்தன. ஆனால், ஈமக் குழிகளில் எழுத்துகள் இல்லை.

Indus Valley Script

டிஎன்ஏ ஆதாரங்களின்படி, ஹரப்பர்கள் 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கங்கை நதி சமவெளியிலிருந்து தென்பகுதிவரை பரவி வாழ்ந்தனர். இவர்களில் சிலர் தொல் திராவிட மொழியைப் பேசியிருக்கலாம். 3,500 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரியர்களின் மரபணுக்கள் வந்து சேர்ந்தன. 2,000 ஆண்டுகளுக்கு முன்பாக ஜாதிக்குள் திருமணம் செய்யும் வழக்கம் துவங்குகிறது.ராக்கிடியில் ஹரப்பா நாகரிகத்தைச் சேர்ந்த பெண்ணின் உடலில் இருந்து கிடைத்த டிஎன்ஏ, தமிழ்நாட்டின் இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர்களின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போகிறது.

மொழிகளைப் பொறுத்தவரை, இந்த நாகரிகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மொழியைப் பேசியிருக்கலாம். வட பகுதியில் வசித்தவர்கள் திபெத்திய மொழியையும், மத்தியப் பகுதியில் வசிப்பவர்கள் முண்டாவை ஒத்த ஒரு மொழியையும், தென் பகுதியில் வசித்தவர்கள் தொல் திராவிட மொழியைப் பேசியிருக்கலாம். பலூசிஸ்தானில் ஆடு, மாடு மேய்க்கும் இனத்தவரின் ப்ராஹுயி மொழியில் இப்போதும் தனித்த திராவிட மொழி அடையாளங்கள் உண்டு. மெஸபடோமியாவில் எள், தந்தம் ஆகியவற்றுக்கு தொல் திராவிட மொழி வார்த்தைகளே புழங்கின.” இவ்வாறு தமது புத்தகத்தில் தேவ்தத் பட்நாயக் எழுதியுள்ளார்.

Source : BBC

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry