போனை எடுத்ததும் ஏன் ‘Hello’ என்று சொல்கிறோம் தெரியுமா? சுவாரஸ்யமான வரலாறு இதுதான்…!

0
43
Discover the fascinating history behind the ubiquitous "Hello" we use when answering the phone. Explore the origins of this common greeting and why it remains a staple of telephone conversations to this day.

காலையில் எழுந்தது முதல் இரவு தூக்கம் வருகிற வரை ‘செல்லோடு உறவாடு’ என பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். உடலில் ‘செல்’ இல்லாதவர்கள்கூட இருக்கலாம் போலிக்கிறது, ஆனால் செல்போன் இல்லாதவர்களே இல்லை என்றாகிவிட்டது. விதவிதமான செல்போன்கள் வந்துவிட்டன. இரண்டரை மணி நேர சினிமாவைக் கூட செல்போனில் பார்க்கிற அளவுக்கு வளர்ந்துவிட்டோம்.

உலகை மாற்றிய கண்டுபிடிப்புகளில் தொலைபேசிக்கு முக்கியப்பங்கு உண்டு. வர்த்தகம் தொடங்கி சர்வதேச உறவுகள் வரை அனைத்தும் தொலைபேசியின் வருகைக்குப் பின்னர்தான் மிகப்பெரும் எழுச்சி பெற்றது. தொலைபேசியின் உருவாக்கம் நமது வாழ்க்கை முறையை பல வழிகளில் மாற்றியுள்ளது.

Image Courtesy : Shutterstock

ஆரம்பத்தில் பேசுவதற்காக கண்டறியப்பட்ட தொலைபேசி, இன்று உலகம் பற்றிய அனைத்து தகவல்களையும் கொண்டுள்ள கருவியாக செல்போனாக மாறியுள்ளது. தொலைபேசி நம் பேச்சிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று உலகளவில் அதிகளவு மக்களால் அதிகம் பேசப்படும் வார்த்தை என்றால் அது ‘ஹலோ’ தான். ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 3 முறை ‘ஹலோ’ வார்த்தையை பயன்படுத்துகிறார்கள்.

உலகம் முழுக்க யார் போன் பேசினாலும் அவர்கள் முதலில் சொல்லும் வார்த்தையாக ‘ஹலோ’ இருக்கிறது. இந்த வார்த்தை உபயோகத்திற்குப் பின்னால் ஒரு வரலாறும், பல கட்டுக்கதைகளும் உள்ளது. இந்த வார்த்தை, தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்ஸாண்டர் கிரகம்பெல்லின் மனைவியின் பெயர் என்று பலர் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இது தவறாகும். மேலும் ‘ஹலோ’ வார்த்தைக்கு முன் மற்றொரு வார்த்தை பொதுவான தொலைபேசி சொல்லாக இருந்தது.

Also Read : கண் இமைகளின் அமைப்பு வெளிப்படுத்தும் ஆளுமைப் பண்புகள், குணாதிசயங்கள்!

ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி 1827 வரை “ஹலோ” என்ற வார்த்தையை வெளியிடவில்லை. அந்த காலகட்டத்தில், அந்த வார்த்தை ஒரு வாழ்த்துச் சொற்றொடராக இல்லை, ஆனால் கவனத்தை ஈர்க்கும் ஒரு வார்த்தையாக இருந்தது. உதாரணமாக “ஹலோ, நீங்கள் என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்கவும், ஆச்சரியத்தை வெளிப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது.

தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது, நீங்கள் சரியாக பதிலளித்தீர்களா? என்பதை தெளிவுபடுத்த ஒரு வார்த்தை தேவைப்பட்டது. தொலைபேசியின் தந்தையான கிரஹாம் பெல், தொலைபேசியில் பதிலளிக்கும்போது “அஹோய்” என்பது சரியான வாழ்த்துச் சொல்லாக இருக்கும் என்று நினைத்தார். அவர் தனது முடிவில் மிகவும் உறுதியாக இருந்தார், அவர் தனது வாழ்நாள் முழுவதும் தொலைபேசியில் பேசும் போது “அஹோய்” என்று பதிலளித்தார்.

“அஹோய்” என்ற வார்த்தை சுமார் 100 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆரம்பத்தில், “அஹோய்” என்பது கப்பலில் பயன்படுத்தப்படும் ஒரு வாழ்த்து சொல்லாக இருந்தது மற்றும் டச்சு மொழியின் “ஹோய்” என்பதிலிருந்து வந்தது, அதன் அர்த்தம் வணக்கம்.

‘ஹலோ’ எப்படி பயன்பாட்டுக்கு வந்தது?

“The Phone Book: The Curios History of the Book That Everyone Uses But No One Reads” என்ற புத்தகத்தின் ஆசிரியரான அம்மோன் ஷியாவின் கூற்றுப்படி, “ஹலோ” என்ற வார்த்தை, முதல் தொலைபேசி புத்தகத்தின் காரணமாக வந்திருக்கலாம். தொலைபேசி புத்தகத்தின் முதல் பகுதிகளில், தொலைபேசியை எவ்வாறு பயன்படுத்துவது மற்றும் தொலைபேசி அழைப்புகளை எவ்வாறு செய்வது என்பதை விளக்கும் மிகவும் அதிகாரப்பூர்வமான How To பக்கங்கள் இருந்தன. அதில் ஒருவர் “உறுதியாக மற்றும் மகிழ்ச்சியாக ஹலோ” என்று பதிலளிப்பார் என்று எழுதப்பட்டிருந்தது.

தாமஸ் ஆல்வா எடிசன் ஜூலை 18, 1877 அன்று, பதிவுசெய்யப்பட்ட ஒலியின் கொள்கையைக் கண்டுபிடித்தார். பரிசோதனையின் போது அவர் “ஹாலூ” என்று கத்தினார். இது முதன்மையாக நாய்களை வேட்டையாடத் தூண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். பொதுவாக இந்த சொல் ஒருவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. எடிசனின் சோதனைகளில் “ஹாலூ” தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது என்றும், பின்னர் அது எழுத்துப்பிழை மற்றும் உச்சரிப்பில் சுருக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

Also Read : சுகரை கட்டுப்படுத்தி,  இன்சுலினை அதிகரிக்கும் பானங்கள் என்னென்ன தெரியுமா..?

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் கிரஹாம் பெல் என்றாலும், விளக்கைக் கண்டுபிடித்ததற்காகப் பெயர் பெற்ற தாமஸ் ஆல்வா எடிசன், “ஹலோ” என்ற வார்த்தையை ஒரு வாழ்த்துச் சொல்லாக உருவாக்கினார். 1996 ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் கட்டுரைக் கூறுகிறது. ஒருவர் போன் அட்டென்ட் செய்ததை எதிர்தரப்பில் இருப்பவர்களுக்கு உணர்த்த ஒரு வார்த்தை தேவைப்பட்டது. எடிசன் இதற்கு “Hello” மற்றும் “What is wanted?” என்ற இரண்டு சொற்களை பயன்படுத்தினார். இறுதியில் 1880-ல் ‘ஹலோ’ வென்றது. மேலும் அவர், 1877-ல் அவர் CENTRAL DISTRICT AND PRINTING TELEGRAPH COMPANY OF PITTESBURGHன் தலைவருக்கு “Hello” என்ற சொல்லையே அழைப்புக்களில் பயன்படுத்துமாறு வற்புறுத்தி கடிதமும் எழுதினார் என்று நூல்கள் தெரிவிக்கின்றன.

THOMAS ALVA EDISON

ஒருவர் என்ன செய்தாலும் அதை நிறுத்திவிட்டு கவனம் செலுத்தச் சொல்ல ஹலோ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. தொலைபேசியில் உரையாடலைத் தொடங்குவதற்கு நாம் எப்போதும் முதல் வார்த்தையாக “ஹலோ” என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம். வழியில் யாரையாவது சந்திக்கும்போதோ அல்லது அறிமுகப்படுத்தப்படும்போதோ அதைப் பயன்படுத்துகிறோம். இந்த வார்த்தை தொலைபேசியிலும் நேரிலும் மிகவும் பிரபலமான தொடர்பு தொடக்கமாக மாறியுள்ளது.

அதேநேரம், காலப்போக்கில், ‘ ஹாய் எப்படி இருக்கீங்க?’ என்பது பிரபலமான வாழ்த்து வார்த்தையான ‘ஹலோ’வின் இணைச்சொல்லாக மாறியது. எந்த பாலினம் அல்லது வயதினருடனும் பேச இதைப் பயன்படுத்தலாம். ஆங்கிலேயர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் ‘how do you do? ‘ என்ற வாழ்த்து, அமெரிக்கர்களால் ‘Howdy’ என்று சுருக்கப்பட்டது. இதையெல்லாம் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு, தமிழர்களாகிய நாம் செல்போனிலோ, நேரிலோ ‘வணக்கம்’ என்ற வார்த்தையுடன் உரையாடலைத் தொடங்கலாம்.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry