
பெரும்பாலான பெண்களின் வாழ்க்கை சமையலறையிலேயே கழிந்து விட்டது. பல போராட்டங்களுக்கும், தியாகங்களுக்கும் பிறகு கடந்த ஒரு நூற்றாண்டாகதான் பெண்களின் உலகம் சமையலறைத் தாண்டி விரிவடைந்துள்ளது. ஆனாலும் குடும்பப் பொறுப்பு என்பது தற்போதும் பெண்களிடம்தான் உள்ளது.
அலுவலகம் செல்லும் பெரும்பாலான பெண்களுக்கு வீட்டின் வேலைப்பளு குறையவேயில்லை. அலுவலகத்தில் வேலை செய்தாலும் வீட்டை நிர்வகிப்பதையும் அவர்கள்தான் செய்கிறார்கள். இதன்படி பார்த்தால், வேலைக்குச் செல்லும் பெண்கள் டபுள் ஷிப்ட் பார்க்கிறார்கள்.
Also Read : ஆப்பிள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..? சுகர் பேஷன்ட் ஆப்பிள் சாப்பிடலாமா?
இருவேறு புள்ளி விவரங்களின்படி, அலுவலகங்களில் ஆண்களை விட பெண்கள் 10 சதவீதம் கடினமாக உழைக்கிறார்கள். ஆண்களும், பெண்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலையில் சுமார் 66 சதவீதத்தை முடிக்கிறார்கள். இருப்பினும், ஆண்களை விட பெண்களுக்கு 10 சதவீதம் அதிக வேலை ஒதுக்கப்படுகிறது. அவர்கள் அதே நிறைவு விகிதத்தில் கொடுத்த பணியை முடிக்கிறார்கள் என்பதன் மூலம் பெண்கள் அதிக உழைப்பாளிகள் என்பதை உறுதி செய்கிறது.
தங்கள் உடல் ஆரோக்கியத்தையும், மன ஆரோக்கியத்தையும் பணயம் வைத்தே பெண்கள் வேலைக்குச் செல்லும் செய்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் தங்கள் குடும்பம் மற்றும் வேலைக்கு இடையே சமநிலையைப் பேண முயற்சிப்பதால், அதற்காக நேரத்தை செலவிடுவதால் தங்களது ஆரோக்கியத்தைப் புறக்கணிக்கிறார்கள். நீண்ட நேரம் வேலை பார்ப்பது பெண்களின் உடல் ஆரோக்கியத்திலும், மன ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீண்ட வேலை நேரம் பெண்களின் உடலில் என்னென்ன பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்வோம்.
Also Read : கறிவேப்பிலை பொடி..! கொட்டிக்கிடக்கும் நன்மைகள்! இது இருந்தா சுகரையே கட்டுக்குள் வைக்கலாம்!
கடுமையான சோர்வு
போதுமான தூக்கம் இல்லாமல் இருப்பது, ஆரோக்கியமற்ற உணவுமுறை, நீரேற்றமின்மை போன்ற பிரச்சினைகளால் பொதுவாக சோர்வு ஏற்படலாம். குறிப்பாக பெண்கள் இதுபோன்ற சிக்கலால் அதிகமாக பாதிக்கப்படலாம். பெண்கள் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்தால் அவர்கள் தூக்கத்தையும், ஊட்டச்சத்தையும் இழக்கிறார்கள். தங்கள் வேலை மற்றும் குடும்பப் பொறுப்புகளால் அவர்கள் தங்கள் முழு ஆற்றலையும் இழக்கிறார்கள். இதனால் அவர்கள் எளிதில் நீரிழிவு நோய், தைராய்டு போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாகலாம். இது எளிதில் அவர்களை சோர்வுக்கு ஆளாக்கும்.
மாதவிடாய்ப் பிரச்சினைகள்
தற்போது பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பொதுவான கோளாறு மாதவிடாய் பிரச்சினை. காலதாமதமான மாதவிடாய், PCOD, குறைவான மாதவிடாய் போன்ற பல பிரச்சினைகளை பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இதற்கு பல சிக்கல்கள் காரணமாக இருக்கலாம். அதில் நீண்ட நேர வேலையும் முக்கிய காரணமாக இருக்கலாம். PCOS உள்ள பெண்களுக்கு உடல் பருமன், டைப் II சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற சீரியஸான பிரச்சினைகள் ஏற்படலாம்.

மன அழுத்த பிரச்சினைகள்
நீண்ட நேர வேலை, பெண்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் மட்டுமின்றி மனரீதியான பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதிக வேலைப்பளுவால் பெண்கள் கடுமையான மனசிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அன்றாட வாழ்க்கையின் தேவைகளைக் கையாளும் ஆற்றல் தன்னிடம் இல்லையென்று அவர்களின் மூளை உணரும்போது, அது அவர்களின் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கும். இதனால் அவர்கள் எப்போதும் கோபமாகவும், சோகமாகவும், மனசோர்வாகவும் காணப்படுவார்கள்.
செரிமானப் பிரச்சினைகள்
செரிமானப் பிரச்சினைகள் ஏற்பட பல காரணங்கள் உள்ளது. நீண்ட நேர வேலையும் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. வேலைப்பளு அதிகமாக இருக்கும் போது பெண்கள் தங்கள் உணவில் அதிக அக்கறை செலுத்துவதில்லை. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடுகள் ஏற்படுகிறது. இது அவர்களின் செரிமான ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது.

எலும்பு பிரச்சினைகள்
நீண்ட நேர வேலையால் ஏற்படும் முக்கியப் பிரச்சினை எலும்புகள் பலவீனமடைவது. குறிப்பாக 40 வயதுக்கு மேல் பெண்களுக்கு எலும்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பலவீனமடையும். இதேநேரத்தில் நீண்ட நேர வேலைப்பளு அவர்களின் முதுகெலும்பையும், மூட்டுகளையும் நேரடியாக பாதிக்கும். நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது முதுகெலும்பை விரைவில் பலவீனமாக்கும்.
Summary : நீண்ட வேலை நேரம் தனிப்பட்ட உடல் நலனை பாதிக்கக்கூடும், பாதுகாப்புக்கு ஆபத்தாக இருக்கக்கூடும், மேலும் மன அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும் என்பதை ஆய்வுகள் உறுதி செய்கின்றன. வேலை, குடும்ப பொறுப்புகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை வெற்றிகரமாக ஒருங்கிணைக்கும் திறன், குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் நலனுக்கு மிக முக்கியமானது. ஓய்வு நேரத்தின் அளவு மற்றும் தரம் ஒட்டுமொத்த நலனுக்கும் முக்கியமானது, மேலும் இது உடல் மற்றும் மன நலனுக்கு கூடுதல் பயன்களை வழங்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry