
நரம்பு மண்டலம் உங்கள் உடலில் தகவல் பரவ உதவுகிறது. இது ஐம்புலன்கள், மூளை, முதுகெலும்பு மற்றும் அவற்றை இணைக்கும் நரம்புகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினையாற்ற நீங்கள் எடுத்துக் கொள்ளும் நேரம்தான், உங்கள் மூளையின் ஆரோக்கியம் தொடங்கி, உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதை வெளிப்படுத்தவும், அறியவும் உதவுகிறது. இது நரம்பு மண்டலத்துடனும் தொடர்புடையது.
வயது அதிகரிக்க, அதிகரிக்க எதிர்வினையாற்றும் வேகம் படிப்படியாகக் குறையும். 30 வயதுக்கு மேல் செயல்திறன் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம். எதிர்வினையாற்றும் வேகம் வெளிப்படுத்துவது மூளை ஆரோக்கியம் மட்டுமல்ல, உங்கள் இதயத்தின் ஆரோக்கியம் முதல் அகால மரணம் ஏற்படும் அபாயம் வரை உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை அறிவதற்கான வாய்ப்பைத் தருகிறது. எதிர்வினையாற்றும் நேரம் குறைவது, வயது தொடர்பான உடலின் மாற்றங்களைக் குறிக்கிறது. வீட்டில் இருந்தபடியே எதிர்வினையாற்றும் நேரத்தை எவ்வாறு மதிப்பிடுவது? என்பதை அறியலாம்.
Also Read : ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்கணும்? உடலுக்கு தண்ணீர் தேவையை எப்படி கண்டுபிடிப்பது தெரியுமா?
ரூலர் டிராப் டெஸ்ட் (Ruler Drop Test)
“ரூலர் டிராப் டெஸ்ட்” எனப்படும் சோதனை முறை மூலம் எதிர்வினையாற்றும் வேகத்தை கண்டுபிடிக்க முடியும். இந்தச் சோதனைக்கு ஒருவரது உதவியும், ஒரு அடி ஸ்கேலும் இருந்தால் போதும். ஒரு மர ரூலர்(மர ஸ்கேல்) கீழே விழும்போது, அதை பிடிக்கும் அளவைப் பொறுத்து நேரம் கணக்கிடப்படுகிறது. இந்தச் சோதனை மூலம் ஒருவரின் விரல்களின் வேகம், பார்வை மற்றும் மூளை தொடர்பு ஆகியவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.
• ஒரு மேஜைக்கு அருகே பக்கவாட்டில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். ஒரு கையின் மணிக்கட்டு மட்டும் மேஜையைத் தாண்டி வெளியே இருக்க வேண்டும். கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் ஒரு பொருளைப் பிடிக்க வசதியாக இருப்பது போல வைத்துக் கொள்ளுங்கள்.
• உங்கள் நண்பரிடம் ஒரு ஸ்கேலை கொடுத்து செங்குத்தாக, உங்கள் கைக்கு மேலே, எண்கள் தொடங்கும் இடத்தில் இருப்பதுபோல பிடிக்கச் சொல்லுங்கள். அதாவது ‘0’ ஆரம்பிக்கும் இடம் உங்கள் கட்டை விரலுக்கு நேராக இருக்க வேண்டும்.
• உங்களிடம் சொல்லாமல், நீங்கள் எதிராபாராத நேரத்தில் உங்கள் நண்பர் அந்த ஸ்கேலைக் கீழே விட வேண்டும். அதை முடிந்தவரை விரைவாகப் பிடிக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும்.
• பிடிபடுவதற்கு முன் அளவுகோல் விழுந்திருக்கும் தூரம் உங்கள் எதிர்வினையாற்றும் நேரத்தின் மதிப்பீடாகும்.
செயல்திறனை மதிப்பிடுவது
ஒரு சிறந்த செயல்திறன் என்பது 7.5 செ.மீக்கும் முன்னதாக அளவுகோலை பிடிக்க வேண்டும். சராசரியை விட அதிக செயல் திறன் என்பது 7.5-15.9 செ.மீ.; சராசரி செயல் திறன் 15.9-20.4 செ.மீ. ஆகும். அதுவே, 20.4 செ.மீக்கும் அதிகமாக இருந்தால் நீங்கள் சராசரியை விடவும் குறைவான செயல்திறன் கொண்டவர். 28 செ.மீ-ஐயும் தாண்டிப் பிடித்தால் உங்கள் செயல்திறன் மோசமாக இருக்கிறது என்று பொருள்.
எதிர்வினையாற்றும் நேரத்தின் வேகம் சரிவதற்கும், வயது தொடர்பான பல நோய்களின் அபாயத்துக்கும் இடையே உள்ள தொடர்பை ஆய்வுகள் கவனித்துள்ளன. இறப்புக்கான முக்கிய காரணிகளுக்கும், எதிர்வினையாற்றும் வேகத்துக்கும் குறிப்பிடத்தக்க தொடர்பு இருப்பதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. கரோனரி இதய நோய், பக்கவாதம், சுவாச நோய் போன்றவற்றால் ஏற்படும் மரண ஆபத்துக்கும், இந்த எதிர்வினையாற்றும் வேகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
Also Read : ஜிம் போகாமலேயே தொப்பையை குறைக்கணுமா? இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!
வயதாவதால் பலமுறை தவறி விழும் ஆபத்துகள், சுதந்திரமாக வாழும் திறனை இழத்தல் மற்றும் டிமென்ஷியா ஏற்படுதல் போன்றவை, ஒரு மனிதரின் எதிர்வினையாற்றும் நேரத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் டாக்டர் காக்ஸின் கூற்றுப்படி, எதிர்வினையாற்றும் நேரத்தின் அளவீடு அதிக தகவல்களைத் தருவதில்லை. ஏனெனில் வயது, மரபியல் மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணிகளால் தனி நபர்களிடையே எதிர்வினை வேகங்கள் கணிசமாக வேறுபடுகின்றன. அதேநேரம், பல ஆண்டுகளாக ஒரே சோதனையில் செயல்திறனை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், குறிப்பிடத்தக்க அளவில் சரிவு இருக்கிறதா என்று கண்டறிய முடியும் என்று கூறுகிறார்.

எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்துதல்
“இரட்டைப் பணி பயிற்சி”யை பலரும் பரிந்துரைக்கிறார்கள். இரட்டைப் பணி பயிற்சி என்பது ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பணிகளைச் செய்யும் பயிற்சி ஆகும். இது மூளையின் பல்வேறு பகுதிகளை ஒருங்கிணைத்து, பல்பணி திறன் மற்றும் கவனத்தை மேம்படுத்துகிறது. அதாவது, மூளை மற்றும் உடல் இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கவும், அறிவாற்றல் பயிற்சியை ஊக்குவிக்கும் இது பயனுடையதாகும்.
ஒரு விளையாட்டைத் தொடர்ந்து விளையாடுவது, ஓய்வு காலத்தில் ஒரு இசைக்கருவியைக் கற்றுக்கொள்வது அல்லது பலகை விளையாட்டுகள் போன்ற அறிவுசார் செயல்பாடுகளில் ஈடுபடுவது, நமது எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்துவதில் சிறந்த பலன்களைத் தரும். விரைவான பதில்கள் தேவைப்படும், விளையாட்டு செயல்திறன் பயிற்சிகள் மூளை மற்றும் உடல் இரண்டுக்குமான சிறப்பான பயிற்சியாக இருக்கும்.

எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள்:
- மற்றவர்கள் பேசும்போது, அவர்களின் கருத்துக்களில் கவனம் செலுத்தி, கேள்விகளைப் போடுங்கள். அவர்களின் எண்ணங்களை நன்கு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
- மற்றவர்களின் கருத்துக்களைப் புரிந்த பிறகு, உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யுங்கள். இது உங்கள் எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்துகிறது.
- ஓய்வு நேரத்தில், இசைக்கருவிகள், பலகை விளையாட்டுகள் போன்ற புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் மூளைக்கு பயிற்சி அளித்து, எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்தலாம்.
- மற்றவர்களுடன் பேசுவதற்கும், அவர்கள் சொல்வதை கேட்பதற்கும் நேரம் ஒதுக்குங்கள். இது உங்கள் தொடர்பு திறன்களையும், எதிர்வினையாற்றும் திறனையும் மேம்படுத்துகிறது.
- மனதை ஒருமுகப்படுத்தி, சுறுசுறுப்பாகக் கேட்கும் பயிற்சி மூலம், எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்தலாம்.
- மற்றவர்கள் பேசுவதை குறுக்கிடாமல், அவர்கள் தங்களது எண்ணத்தை முழுமையாக வெளிப்படுத்த அனுமதிக்கவும்.
- நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களுடன் சமூக நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம், தொடர்பு திறன்களை மேம்படுத்தி, எதிர்வினையாற்றும் திறனை வளர்த்துக் கொள்ளலாம்.
- விளையாட்டுகள் மற்றும் பலகை விளையாட்டுகளில் ஈடுபடுவது, மனதை கூர்மைப்படுத்தி, எதிர்வினையாற்றும் திறனை மேம்படுத்துகிறது.
- மாறுபட்ட சிந்தனையை பயன்படுத்தி, புதிய யோசனைகளைப் பற்றி சிந்திக்க பயிற்சி செய்ய உங்களை நீங்களே அனுமதிக்கவும். உடலில் சோர்வு இருந்தால் எதிர்வினை நேரம் குறையும். எனவே, ஒரு நாளைக்கு 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம்.
- மூளையின் செயல்பாட்டிற்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை உட்கொள்வது எதிர்வினை திறனை அதிகரிக்க உதவும்.
- அதிக மன அழுத்தம் எதிர்வினை நேரத்தைக் குறைக்கும். தியானம், யோகா போன்ற முறைகள் மூலம் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.
எதிர்வினையாற்றும் திறன் என்பது விளையாட்டு, வாகனம் ஓட்டுதல் மற்றும் அன்றாட வாழ்க்கை போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் முக்கியமானது. சரியான பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மனநிலையை மேம்படுத்துவதன் மூலம் இந்தத் திறனை கணிசமாக அதிகரிக்க முடியும்.
Image Source : Getty Image.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry