கண்ணாடியில் பார்க்கும் போது தொப்பையால் அழகற்று தெரிந்தால், இந்த கட்டுரையை தவறாமல் படியுங்கள். உடல் எடையை குறைப்பது முக்கியம்தான் என்றாலும், அதை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறை மிகவும் முக்கியம். நமக்கு ஏற்படும் நோய்களை எதிர்த்துப் போராட, நடைபயிற்சி அல்லது சில வகையான உடற்பயிற்சிகளைச் செய்வது அவசியம். குளிர்காலம், கோடை அல்லது மழைக்காலம் எதுவாக இருந்தாலும், நடைபயிற்சி ஆரோக்கியத்திற்கு நல்லது.
நடைப்பயிற்சியால் மட்டும் உடல் எடையை குறைக்க முடியுமா என்றால் இதற்கு, நேரம், வேகம் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்றம் அனைத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். நடைபயிற்சி மூலம் உடல் எடையை குறைக்க கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். நடைப்பயிற்சியால் ஒரு மாதத்தில் 5 கிலோ எடை வரை குறைக்கலாம். எப்படி என்பதை தெரிந்து கொள்வோம்.
Also Read : அரிசியை ஊறவைத்து சமைப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
30 நிமிட நடைப்பயிற்சியால் கிடைக்கும் பலன்கள்
ஒரு எளிய நடைப்பயிற்சி, எடையைக் குறைக்கும் என்றால் அது மிகையானது. 30 நிமிட நடைப்பயிற்சி வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தும், ஆரோக்கியமாக இருக்க உதவும். உணவு செரிமானத்தில் பிரச்சனைகள் இருக்காது மற்றும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். ஆனால் எடை குறைவது நடக்காது.
எடை குறைக்க செய்ய வேண்டியவை
தினமும் சாதாரண நடைப்பயிற்சிக்கு பதிலாக விறுவிறுப்பான நடைபயிற்சி செய்ய வேண்டும். உங்கள் உடலுக்கு ஏற்ப நடையின் வேகத்தை அதிகரித்து, கை அசைவுகளையும் அதிகரிக்க வேண்டும். நீங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் வேகமான நடைபயிற்சி செய்தால், இந்த நேரத்தில் 150 கலோரிகளை அதிகமாக எரிக்கலாம்.
தினமும் எவ்வளவு தூரம் நடக்க வேண்டும்
ஒரு நாளைக்கு குறைந்தது 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும். எனவே, முடிந்தவரை நடக்க வேண்டியது அவசியம். மேலும் நடப்பது உங்கள் உடலை சுறுசுறுப்பாக மாற்றும். 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் என்றால் சுமார் 7 முதல் 8 கிலோ மீட்டர் ஆகும். இதில் சுறுசுறுப்பு மற்றும் வேகமும் முக்கியமானது.
எடையைக் குறைக்க கலோரிகளைக் குறைப்பது அவசியம்
பொரித்த உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டுவிட்டு, வெறும் நடைப்பயிற்சியால் உடல் எடை குறையும் என்று நினைத்தால், அது நடக்காத காரியம். உங்களுக்கான கலோரிகளை முடிந்தவரை பழங்களில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு வேளைக்கும் சரியான நேரத்தில் சாப்பிடுவது அவசியம். சாப்பாட்டை குறைத்து அதன் மூலம் எடையை குறைக்க முயற்சிப்பது ஆரோக்கியகேடானது.
உணவு உண்ண சரியான நேரம்
காலை எழுந்ததில் இருந்து அதிகபட்சம் 2 முதல் 2.5 மணி நேரத்திற்குள் காலை உணவை உட்கொள்ள வேண்டும். இதனுடன் காலை உணவுக்கு நான்கு மணி நேரம் கழித்து மதிய உணவை சாப்பிட வேண்டும். இதேபோல் தூங்குவதற்கு 2 முதல் 3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். இரவு உணவு அன்றைய நாளின் லேசான உணவாக இருக்க வேண்டும், இரவு உணவில் கார்போஹைட்ரேட் சேர்ப்பது சரியாக இருக்காது. இந்த சின்ன சின்ன விஷயங்களை நாம் அன்றாடம் கடைப்பிடித்தால் மட்டுமே உடல் எடை குறையும். வெறும் நடைப்பயிற்சி மூலம் 5 கிலோ எடையை குறைக்க வேண்டும் என்றால் அது சாத்தியமில்லை.
Also Read : பால்பாயின்ட் பேனா வரலாறு! பேனாவை கண்டுபிடித்து புரட்சி ஏற்படுத்திய பத்திரிகையாளர்!
ஆரோக்கியமான எடைக்குறைப்பில் ஆரோக்கியமான, சுத்தமான உணவுப்பழக்கம்தான் பிரதானமாக இருக்கும். உணவுப்பழக்கத்துடன் கூடவே உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்கிறபோது தசை இழப்பு ஏற்படாது. சருமத்தில் தொய்வும் ஏற்படாது.
சரியாக உடற்பயிற்சி செய்யாதது, மேக்ரோ நியூட்ரியன்ட்ஸ் எனப்படும் பெரு நுண்ணூட்டச் சத்துகள் இல்லாமல் சாப்பிடுவது போன்றவற்றால் சருமம் தொய்வடையும். உணவிலும் உடற்பயிற்சியிலும் கவனம் செலுத்தும்போது இந்தப் பிரச்னை வராது. தழும்புகள் வராது. எனவே சரியான வழிகாட்டுதலுடன் எடைக்குறைப்பு முயற்சியைத் தொடங்குங்கள்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry