இன்ஸ்டன்ட் மேகி தோசை..! ரவா தோசைக்கே டஃப் கொடுக்கும் சுவை! குட்டீஸ்களை குஷிப்படுத்துங்க!

0
68
Try this unique Maggi Dosa recipe, blending the flavours of classic dosa with instant noodles. Perfect for a quick snack or a fun twist on traditional dishes.

பொதுவாக வீட்டில் டிபனுக்கு மாவு இல்லாத சூழ்நிலைகளில் மேகி செய்து சாப்பிடுவோம். ஆனால் அந்த மேகியைக் கொண்டே சூப்பரான இன்ஸ்டன்ட் தோசை செய்யலாம்.

அதுவும் இந்த மேகி தோசையானது ரவா தோசையையே தோற்கடிக்கும் அளவில் மிகவும் சுவையாகவும், மொறுமொறுப்பாகவும் இருக்கும். முக்கியமாக இந்த தோசை செய்வதற்கு ஒருசில பொருட்களே போதுமானது. காலையில் டக்கென்று ஒரு டிபன்செய்ய நினைத்தால், இந்த மேகி தோசையை செய்யலாம். குறிப்பாக இந்த மேகி தோசையை வெறுமனே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடன் சாப்பிடலாம்.

Also Read : தோசை மாவு இல்லையா? ஒரு கப் மீல் மேக்கர் வெச்சு ஹெல்த்தியான தோசை செய்யுங்க! High Protein Mealmaker Dosa Recipe In Tamil!

தேவையான பொருட்கள்:

  • மேகி – 1 பாக்கெட்
  • அரிசி மாவு – 3 டேபிள் ஸ்பூன்
  • ரவை – 1 டேபிள் ஸ்பூன்
  • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
  • தக்காளி – 1(பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 1 (பொடியாக நறுக்கியது)
  • இஞ்சி – சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
  • சில்லி ப்ளேக்ஸ் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – சுவைக்கேற்ப
  • மேகி மசாலா – தேவையான அளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • தண்ணீர் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

மிக்சர் ஜாரில் மேகியைப் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அதில் அரிசி மாவு, ரவை, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.

அதன் பின்னர் சில்லி ப்ளேக்ஸ், சுவைக்கேற்ப உப்பு, மேகி மசாலா, சிறிது நறுக்கிய கொத்தமல்லி, தோசை மாவு பதத்திற்கு தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், கலந்து வைத்துள்ள மாவை அள்ளி ரவா தோசைக்கு ஊற்றுவது போன்றே ஊற்ற வேண்டும்.

அதன் மேல் எண்ணெய் ஊற்றி, 2 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான மேகி தோசை தயார். இந்த தோசையை திருப்பிப் போட்டு வேக வைக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை.

Image Source: Curlytales

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry