இன்ஸ்டன்ட் சம்பா ரவை தோசை! புளிக்க வைக்க வேண்டாம்! சுகர் பேஷன்ட்ஸ் மட்டுமல்ல, அனைவரும் விரும்பும் அசத்தல் டிபன்!

0
112
Discover how to make instant Samba Rava Dosa – a healthy, diabetic-friendly breakfast recipe that’s quick, easy, and delicious. Perfect for sugar patients and loved by everyone, this no-fermentation dosa is a nutritious start to your day! Image - Boldsky.

இன்றைய காலகட்டத்தில் சர்க்கரை நோய் என்பது சாதாரணமாகி வருகிறது. அப்படிப்பட்ட  பலரும் இரவு நேரத்தில் கோதுமை சார்ந்த உணவுகளை விரும்புகிறார்கள். சப்பாத்தி, கோதுமை தோசை வரிசையில், சம்பா ரவை உப்புமாவுக்கு முக்கிய இடம் உண்டு. இட்லி, தோசை இரண்டும் அரிசி மாவில் செய்யப்படுவதால் அதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாக சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு விரைவில் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

சாதாரண அரிசி இட்லி/தோசைக்கு பதிலாக, ஓட்ஸ் இட்லி, ராகி தோசை, கோதுமை அல்லது பருப்பு கலந்த இட்லி/தோசை போன்றவை சாப்பிடுவது நல்லது. இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ரத்த சர்க்கரை சீராக இருக்கும். அந்த வகையில், சம்பா ரவை தோசை எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

  • சம்பா ரவை – ஒரு கப்
  • தக்காளி – 1
  • காய்ந்த மிளகாய் – 4
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • அரிசி மாவு – ஒரு ஸ்பூன்
  • இஞ்சி – ஒரு சிறிய துண்டு
  • உப்பு – தேவையான அளவு
  • கொத்தமல்லி – ஒரு கைப்பிடி அளவு

செய்முறை

முதலில் சம்பா ரவையை தண்ணீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்து நல்ல தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ஊற வைத்த சம்பா ரவையை போட்டு அதனுடன் ஒரு தக்காளி, காய்ந்த மிளகாய், சீரகம், அரிசி மாவு, இஞ்சி போன்றவற்றை போட்டு நன்றாக நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு அதை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதற்கு தேவையான அளவு உப்பு மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையை தூவி நன்றாக கலந்து விடுங்கள். இது தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால் அதற்கேற்றார் போல் சேர்த்துக் கொள்ளலாம். இப்பொழுது சம்பா ரவை தோசை மாவு தயாராகிவிட்டது.

Enjoy a guilt-free, diabetic-friendly breakfast with this easy Samba Rava Dosa recipe. Quick, nutritious, and delicious! Image Credit : Jeyashri’s Kitchen.

அடுப்பில் எப்பொழுதும் போல் தோசை கல்லை வைத்து கல் காய்ந்ததும் தோசை ஊற்றி விடலாம். ஒரு கரண்டி தோசை மாவு எடுத்து தோசை ஊற்றி வேண்டும். பிறகு அதை சுற்றி எண்ணெய் ஊற்றி ஒரு புறம் வெந்த பிறகு அதை திருப்பி போட்டு மறுபுறமும் வேகவைத்து எடுத்து விட்டால் சுவையான ஆரோக்கியமான சம்பா ரவை தோசை தயாராக இருக்கும்.

இதற்கு தேங்காய் சட்னி மிகவும் அருமையாக இருக்கும். இந்த முறையில் நாம் வீட்டில் இருக்கக்கூடிய சிறு குழந்தைகளுக்கும் சரி பெரியவர்களுக்கும் சரி செய்து கொடுத்தோம் என்றால் அனைவரும் மகிழ்ச்சியுடன் விரும்பி சாப்பிடுவார்கள். தோசை மாவு இல்லாத சமயத்தில் சம்பா ரவையை வைத்து 10 நிமிடத்தில் அருமையான ஆரோக்கியமான சுவையான சம்பா ரவை தோசையை தயார் செய்ய முடியும். ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry